Feb 1, 2010

ஒரேயொரு முறை


கூடு கலைக்கப்பட்ட
குருவிகள் பல
நாடு கடந்து பறந்துப்போயின
திசைகள் அறியாமலே...!

இறகுகள் பிடுங்கப்பட்ட
பறவைகள் நாங்கள்
என் செய்ய
எம் தலைவா...?


சிம்மக்குரல் அல்ல - உனக்குச்
சின்னக்குரல் தான் - ஆனாலும்
அது மந்திரக் குரல்!

இங்கே நாள்தோறும்,
ஏதிலிகள் எனும் சொல்
காதினில் விழும் போதில்
உயிரைக் கூறு போட்டு கொல்லுதப்பா.

"இதோ நானிருக்கிறேன்", என
எண் திசையில்
எத்திசையிலிருந்தேனும்
ஒரேயொரு முறை

உன்

அன்னைக் குரலால்
“எம் மக்களே!”
என்றழை!

எமைவிட்டுப் போன பலம்
இமைப்பொழுதில் வந்துச்சேரும்.

எதிரிக்கு(ள்) விட்டுப் போன பயம்
நெற்றிப் பொட்டில்
குட்டி போட்டு குடியேறும் !

12 comments:

  1. /////"இதோ நானிருக்கிறேன்", என
    எண் திசையில்
    எத்திசையிலிருந்தேனும்
    ஒரேயொரு முறை

    உன்
    அன்னைக் குரலால்
    “எம் மக்களே!”
    என்றழை!/////

    நம்பிக்கை இருக்கிறது.

    ReplyDelete
  2. கண்டிப்பாக அந்த நாள் வெகுவிரைவில் வரும்
    வசந்தி

    ReplyDelete
  3. நம்பிக்கை இருக்கு நண்பா

    நிச்சியம் நல்லது நடக்கும்.

    ReplyDelete
  4. அப்பாடா......ஹேமாவுக்கு இனி... எங்க?
    என்ன நடந்த? ஏன் காணோம்? யாரிடம்
    கேட்கலாம்? என்ற ஐயமெல்லாம்
    தீர்திருக்கும்!!
    ம்ம்ம்ம்மம...மகிழ்ச்சியில்.... சிரிக்கின்ற
    சத்தம்
    எனக்கு நன்றாக்க கேட்கிறது
    பாத்துக் ஹேமா!!!

    நம்பிக்கைதான் நம் பலம்
    அருமையான வரிகள.

    ReplyDelete
  5. எதிரிக்கு(ள்) விட்டுப் போன பயம்
    நெற்றிப் பொட்டில்
    குட்டி போட்டு குடியேறும் !

    maams mmmmmm
    correcttuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu

    ReplyDelete
  6. நம்பிக்கை தரும் வார்த்தைகளில்தான் ஈழத் தமிழனின் வாழ்க்கை அன்றும் இன்றும்.இன்னும் !

    ReplyDelete
  7. //"இதோ நானிருக்கிறேன்", என
    எண் திசையில்
    எத்திசையிலிருந்தேனும்
    ஒரேயொரு முறை

    உன்
    அன்னைக் குரலால்
    “எம் மக்களே!”
    என்றழை!///


    அழகு..... தமிழனின் எதிர்ப்பார்ப்பு

    ReplyDelete
  8. // S.A. நவாஸுதீன் கூறியது...


    // நம்பிக்கை இருக்கிறது.//

    எனக்கும்தான் மாப்ளெ.

    (எப்ப மாப்ஸ் தமிழ் நாட்டிற்கு பயணம்?)

    *****************************

    kalai கூறியது...

    //கண்டிப்பாக அந்த நாள் வெகுவிரைவில் வரும்
    வசந்தி.’’

    வசந்தி, உன் வாக்கு பொன் வாக்கு ஆகட்டும்.

    சக்கரை இல்லாமல் பொங்கல் வைக்கிறேன் உனக்கு. (இனிப்பு உடம்புக்கு ஆகாதாமே! அதான்!)

    **************************

    கலகலப்ரியா கூறியது...

    :)

    நன்றிடா தங்க(ம்)ச்சி.

    (என்னைய நானே கேட்டுக்கறேன் : உங்கள விடவா நான் மூப்பு? அய்யோ..அய்யோ..!)

    ***************************


    நட்புடன் ஜமால் கூறியது...

    நம்பிக்கை இருக்கு நண்பா

    நிச்சியம் நல்லது நடக்கும்.

    நம் எல்லோரது விருப்பமும் ஒன்றே.. மச்சான்.

    *****************************


    Kala கூறியது...

    //அப்பாடா......ஹேமாவுக்கு இனி... எங்க?
    என்ன நடந்த? ஏன் காணோம்? யாரிடம்
    கேட்கலாம்? என்ற ஐயமெல்லாம்
    தீர்திருக்கும்!!
    ம்ம்ம்ம்மம...மகிழ்ச்சியில்.... சிரிக்கின்ற
    சத்தம்
    எனக்கு நன்றாக்க கேட்கிறது
    பாத்துக் ஹேமா!!!

    நம்பிக்கைதான் நம் பலம்
    அருமையான வரிகள்.//


    என்னடா கலா எப்பவும் நம்மள கண்காணிச்சிக்கிட்டே இருக்காங்களே -ன்னு உள்ளுக்குள்ள இருந்து ஒரு பட்சி கேட்டுக்கிட்டே இருந்துச்சி.

    இப்ப தெரிஞ்சி போச்சி.

    ஹேமா அனுப்பியிருக்கிற உளவாளி......!

    ச்ச்ச்ச்ச்சும்ம்ம்ம்மாமாமாமா....!

    *******************


    பாலா கூறியது...

    //எதிரிக்கு(ள்) விட்டுப் போன பயம்
    நெற்றிப் பொட்டில்
    குட்டி போட்டு குடியேறும் !

    maams mmmmmm
    correcttuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu//

    நன்றி மாப்ள!

    (என்னய்யா...இப்பவெல்லாம் “சாட்டிங்”க்குக்கு பதிலா , வெறும் பதில் இடுகையா ஓடிட்டிருக்கு?... நடக்கட்டும்!)

    ******************************

    ஹேமா கூறியது...

    // நம்பிக்கை தரும் வார்த்தைகளில்தான் ஈழத் தமிழனின் வாழ்க்கை அன்றும் இன்றும்.இன்னும் !//


    நிஜமே தோழி!

    (என்னடா இப்பிடி குட்டியா நிப்பாட்டிக்கிட்டானேன்னு தப்பா நெனைக்கப் பிடாது. சபை அடக்கம். அவ்வளவு தான்.)

    **************************

    பிரியமுடன்...வசந்த் கூறியது...

    // என்ன சொல்றது?//

    வலிக்குதா மாப்ஸ்?

    புது மாப்பிள்ள இப்பிடி சொல்லிட்டா எப்புடி?

    *************************


    ஆ.ஞானசேகரன் கூறியது...

    //"இதோ நானிருக்கிறேன்", என
    எண் திசையில்
    எத்திசையிலிருந்தேனும்
    ஒரேயொரு முறை

    உன்
    அன்னைக் குரலால்
    “எம் மக்களே!”
    என்றழை!///


    அழகு..... தமிழனின் எதிர்ப்பார்ப்பு

    நடந்தேறட்டும் ஞானம்!

    ReplyDelete
  9. உன்
    அன்னைக் குரலால்
    “எம் மக்களே!”
    என்றழை!


    மெய் சிலிர்க்கிறது...

    ReplyDelete
  10. சபாஸ் சத்திரியா.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.