Feb 10, 2011

தலையாய தேவதை



நதிப்படுகையில்
புதைந்து
மிதந்திருக்கும்
கூழாங்கற்கள் போல்

என்
மதிப்படுகையில்
தேவதைகள்
நிறைந்திருக்கிறார்கள்.

******

வரங்களை
வழங்கி விட்டு
வாழ்க்கையை
அபகரித்துக் கொள்வதில்
தேவதைகளுக்கு
நிகர்
தேவதைகளே.


******

தீராக்களைப்பில்
என்னைக் கண்டு
அருந்த
ஒரு
கோப்பை நீரும்,

அசை போட
அளவற்ற
நினைவுகளையும்
தந்து போனவள் தான்

தேவதைகளில்
எல்லாம்
தலையாய தேவதையாய்
இருக்கிறாள்.


49 comments:

  1. //வரங்களை
    வழங்கி விட்டு
    வாழ்க்கையை
    அபகரித்துக் கொள்வதில்
    தேவதைகளுக்கு
    நிகர்
    தேவதைகளே.//

    உண்மைதான்...

    ReplyDelete
  2. சங்கவி,

    அனுபவம் தான் பின்னூட்டமோ?

    ஆனா, கவிதை அனுபவம்தான்!

    ReplyDelete
  3. //வரங்களை
    வழங்கி விட்டு
    வாழ்க்கையை
    அபகரித்துக் கொள்வதில்
    தேவதைகளுக்கு
    நிகர்
    தேவதைகளே//

    //தீராக்களைப்பில்
    என்னைக் கண்டு
    அருந்த
    ஒரு
    கோப்பை நீரும்,

    அசை போட
    அளவற்ற
    நினைவுகளையும்
    தந்து போனவள் தான்

    தேவதைகளில்
    எல்லாம்
    தலையாய தேவதையாய்
    இருக்கிறாள்//

    உதை.. படவா! :-))

    எப்பவும் fresh-ஆகவே இருக்கீங்களே.. எப்படி மாப்ள?

    ReplyDelete
  4. கவிதைகள் அருமை

    ReplyDelete
  5. //உதை.. படவா! :-))

    எப்பவும் fresh-ஆகவே இருக்கீங்களே.. எப்படி மாப்ள?//

    மாமாவிடம் ‘உதை படவே’ எப்போதும் ஃப்ரெஸ்ஸா இருக்கேன் மாமா.

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றிங்க.

    //கவிதைகள் அருமை..//

    பொய்யையும் ரசிப்பேன் ஜெ.ஜெ.

    ReplyDelete
  7. ம்ம்...சாந்தம்..கோபம்..

    ReplyDelete
  8. கவிதையை அனுபவித்தேன்,சத்ரியன் நன்று.

    ReplyDelete
  9. பொய்யையும் ரசிப்பேன் ஜெ.ஜெ.//

    அய்யோ இது பொய் இல்ல..

    ReplyDelete
  10. வரங்களை
    வழங்கி விட்டு
    வாழ்க்கையை
    அபகரித்துக் கொள்வதில்
    தேவதைகளுக்கு
    நிகர்
    தேவதைகளே.//

    இது மிக நல்லாயிருக்கு... வியந்தேன்.

    ReplyDelete
  11. /வரங்களை
    வழங்கி விட்டு
    வாழ்க்கையை
    அபகரித்துக் கொள்வதில்
    தேவதைகளுக்கு
    நிகர்
    தேவதைகளே.
    /

    அருமை

    ReplyDelete
  12. உங்களிடம் இருந்துதான் நிறைய கற்றுகொள்கிறேன்...
    நிறைய தொடர்ந்து வழங்குங்க ...அண்ணே

    ReplyDelete
  13. அண்ணே உங்களுக்கு அந்த தேவதையின் ஆசீர்வாதம் நிறைய கிடைக்கட்டும் ...

    ReplyDelete
  14. ஒரு தே‍வதையே போதும் சத்ரியா

    ReplyDelete
  15. தலையாய தேவதை யாரோ?!!!

    ReplyDelete
  16. அளிப்பதும் பறிப்பதும்
    தேவதைகளின் செல்ல விளையாட்டு
    அதில் மகிழ்வதும் துயருறுவதும்
    எமது வாழ்வின் இயல்பாயிற்று. அருமையான கவிதை.

    ReplyDelete
  17. வரங்களை
    வழங்கி விட்டு
    வாழ்க்கையை
    அபகரித்துக் கொள்வதில்
    தேவதைகளுக்கு
    நிகர்
    தேவதைகளே.



    ... very nice... :-)

    ReplyDelete
  18. கண்ணழகரே....தேவதையா இல்லை தேவதைகளா.இதில தலையாய தேவைதை வேறா....
    அதுவும் கன்னியில்லாத் தீவில !

    சத்ரியா...கவிதை உணர்வோட அருமையா வந்திருக்கு.கொடுத்து வைத்த தேவைதை அவள் !

    ReplyDelete
  19. //ம்ம்...சாந்தம்..கோபம்..//

    எல்லாம் இருப்பு சிவா.

    ReplyDelete
  20. //கவிதையை அனுபவித்தேன்,சத்ரியன் நன்று.//

    வாங்கண்ணா,

    ( நானும் உங்க ஊரு பக்கம் தான்.)

    அனுபவமும், ரசனையும் தானே வாழ்வை விரும்ப வைக்கிறது.

    ReplyDelete
  21. //இது மிக நல்லாயிருக்கு... வியந்தேன்//

    மாமா வியக்கும்படி சொல்லியிருக்கிறேன் என்பது ஒருபுறம் மகிழ்வைத் தந்தாலும், மாமாவின் “வாழ்வையும்” எதோ ஒரு தேவதை அபகரித்திருக்கிறாள் என்பது ....?!

    ReplyDelete
  22. ///வரங்களை
    வழங்கி விட்டு
    வாழ்க்கையை
    அபகரித்துக் கொள்வதில்
    தேவதைகளுக்கு
    நிகர்
    தேவதைகளே.
    /

    அருமை//

    வாங்க திகழ்,

    நெடு நாட்களாச்சி. சுகமா?

    ReplyDelete
  23. //அசத்தல்ஸ்!//

    நன்றிங்க அருணா.

    ReplyDelete
  24. //உங்களிடம் இருந்துதான் நிறைய கற்றுகொள்கிறேன்...
    நிறைய தொடர்ந்து வழங்குங்க ...அண்ணே//

    என்னத்தை சொல்ல வரீங்கன்னு புரியல அரசன்.

    ReplyDelete
  25. //அண்ணே உங்களுக்கு அந்த தேவதையின் ஆசீர்வாதம் நிறைய கிடைக்கட்டும் ...//

    முடியாதென்று அடம்பிடிக்கிறா(ங்க) அந்த தேவதை. என்ன செய்யலாம்?

    ReplyDelete
  26. //ஒரு தே‍வதையே போதும் சத்ரியா//

    விரும்பிய நூலைத் தேடிக்கொண்டிருக்கும் போது , வேறு சில நூல்களையும் காணத்தானெ செய்கிறோம் மாப்பி!

    ReplyDelete
  27. //தலையாய தேவதை யாரோ?!!!//

    வீட்டுக்காரம்மாகிட்ட அடி வாங்க விட்ருவீங்க போல.

    ReplyDelete
  28. //kavithai arumai.. vaalththukkal//

    வாங்க சரவணன்,

    நன்றி.

    ReplyDelete
  29. //அளிப்பதும் பறிப்பதும்
    தேவதைகளின் செல்ல விளையாட்டு
    அதில் மகிழ்வதும் துயருறுவதும்
    எமது வாழ்வின் இயல்பாயிற்று. அருமையான கவிதை.//

    வணக்கம் மருத்துவரே,
    பின்னூட்டமே கவிதையா இருக்கே.

    நன்றிங்க.

    ReplyDelete
  30. //வரங்களை
    வழங்கி விட்டு
    வாழ்க்கையை
    அபகரித்துக் கொள்வதில்
    தேவதைகளுக்கு
    நிகர்
    தேவதைகளே.



    ... very nice... :-)//

    நன்றிங்க சித்ராக்கா.

    ReplyDelete
  31. //கண்ணழகரே....//

    இருக்கட்டும் இருக்கட்டும்.

    //தேவதையா இல்லை தேவதைகளா.//

    தேவதை’கள்’ தான் ஹேமா.

    //இதில தலையாய தேவைதை வேறா....//

    “ம்...ம்”

    //அதுவும் கன்னியில்லாத் தீவில !//

    தீவுல ‘கன்னி’ இல்லாட்டி என்ன? கனவுல நிறைய...!

    //சத்ரியா...கவிதை உணர்வோட அருமையா வந்திருக்கு.கொடுத்து வைத்த தேவைதை அவள் !//

    அட , நீங்க வேற. அதை எடுத்துச் சொன்னா அவளுக்கு எங்க புரியுது. ’அதிஷ்ட கட்டை’யாம் அந்த தேவதை.

    தேவதையின் ”அசரீரி” காதில் சொன்னது.

    ReplyDelete
  32. //வரங்களை
    வழங்கி விட்டு
    வாழ்க்கையை
    அபகரித்துக் கொள்வதில்
    தேவதைகளுக்கு
    நிகர்
    தேவதைகளே.//

    வாழ்க்கை என சொல்லி விட்டு வழியிலேயே விட்டு விட்டு செல்வதில்.....ஹஹ்ஹா

    கவிதை மனதில் சட்டென்று பதிந்து விட்டது சத்ரியன்..முத்துக்கள் மூன்று என சொல்லலாம்..

    ReplyDelete
  33. //என்
    மதிப்படுகையில்
    தேவதைகள்
    நிறைந்திருக்கிறார்கள்.//

    என்னது தேவதைகளா? பன்மையில் இருக்கே..என்ன சத்ரியன் வீட்டுக்கு போன் பண்ணவா?

    ReplyDelete
  34. //
    //தீராக்களைப்பில்
    என்னைக் கண்டு
    அருந்த
    ஒரு
    கோப்பை நீரும்,

    அசை போட
    அளவற்ற
    நினைவுகளையும்
    தந்து போனவள் தான்

    தேவதைகளில்
    எல்லாம்
    தலையாய தேவதையாய்
    இருக்கிறாள்//


    எப்பவும் fresh-ஆகவே இருக்கீங்களே.. எப்படி மாப்ள? //

    எங்க அண்ணா சொல்றதையே நானும் சொல்றேன் எப்படி சத்ரியன்? பொறாமையா இருக்கு..

    ReplyDelete
  35. வரங்களை
    வழங்கி விட்டு
    வாழ்க்கையை
    அபகரித்துக் கொள்வதில்
    தேவதைகளுக்கு
    நிகர்
    தேவதைகளே.//

    இது மிக நல்லாயிருக்கு... வியந்தேன்.\\\\\\\\\
    கருணாகரசு!உங்களுக்கு விஷயமே தெரியாதா?
    கடவுள் மீது ஆணை உன்னைக் கை விடமாட்டேன்....
    என்று சொல்லிவிட்டு ......பின்{அதை அபகரித்துவிட்டு}
    அம்போவென்று தவிக்கவிட்டுப் போனாகளாம் அந்தத்
    “தேவதைகள்”{எத்தனை காதல் தோல்விகள் அப்பப்பா...}
    அதை அவரே அவர் முகப்பில்{முன்னாடிபோட்டாரல்லவா!}
    அதில் குமுறியதைத்தான் இப்போது எழுத்துச்,சொற்களால் கக்கிவிட்டார்
    அவருக்கு இதில் வியப்பில்லை ,பாவம் எவ்வளவு மனக்கஷ்ரத்தில் இருக்கிறாரோஓ...................ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ??????

    ReplyDelete
  36. {கண்ணழகரே....}தேவதையா
    இல்லை தேவதைகளா.இதில
    தலையாய தேவைதை வேறா....
    அதுவும் கன்னியில்லாத் தீவில !\\\\\\\\\\\

    இந்த அடைப்புக் குறிப்புக்கு ஒரு
    அடைமொழி தேவையா...???இதனால்
    தலைகால் புரியாமல் தவிப்பது உங்களுக்கெப்படித்
    தெரியும் ?ஹேமா?
    ஹேமா, கன்னியில்லாத தீவிலும்..
    கண்ணி வைப்பது “கண்ணன்”
    லீலையல்லவா??

    ReplyDelete
  37. //வாழ்க்கை என சொல்லி விட்டு வழியிலேயே விட்டு விட்டு செல்வதில்.....ஹஹ்ஹா//

    புரியுது தமிழ். “ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை ஒன்றுண்டு”.

    //கவிதை மனதில் சட்டென்று பதிந்து விட்டது சத்ரியன்..முத்துக்கள் மூன்று என சொல்லலாம்..//

    அதென்ன சொல்லலாம்? அப்படித்தான்னு சொன்னா கொறைஞ்சாப் போயிருவீங்க.

    ReplyDelete
  38. //எப்பவும் fresh-ஆகவே இருக்கீங்களே.. எப்படி மாப்ள? //

    எங்க அண்ணா சொல்றதையே நானும் சொல்றேன் எப்படி சத்ரியன்? பொறாமையா இருக்கு..//

    தமிழ்,

    எதுக்கிந்த பொறாமைங்கறேன்!?. யூத்துங்கெல்லாம் எப்பவும் ”ஃப்ரெஸ்”ஸாத்தான் இருப்போம்.

    ReplyDelete
  39. //என்னது தேவதைகளா? பன்மையில் இருக்கே..என்ன சத்ரியன் வீட்டுக்கு போன் பண்ணவா?//

    உண்மையச் சொன்னா யார் நம்புறீங்க.

    பொதுவா, எனக்கு போய் சொல்லப்பிடிக்காது. வீட்டுல சொல்றேன்னு சொல்லி பயமுறுத்தறீங்க.அதனால ஒரேயொரு போய் மட்டும் “தேவதை”. இப்ப ஓ.கே-வா?

    உங்களோட போன் செலவை மிச்சப்படுத்திட்டேன்.

    ReplyDelete
  40. //,பாவம் எவ்வளவு மனக்கஷ்ரத்தில் இருக்கிறாரோஓ...................ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ??????//

    அதானே பா........வம்!

    ReplyDelete
  41. //இந்த அடைப்புக் குறிப்புக்கு ஒரு
    அடைமொழி தேவையா...???இதனால்
    தலைகால் புரியாமல் தவிப்பது உங்களுக்கெப்படித்
    தெரியும் ?ஹேமா?
    ஹேமா, கன்னியில்லாத தீவிலும்..
    கண்ணி வைப்பது “கண்ணன்”
    லீலையல்லவா??//

    ஓஹ்....! இந்த கிளி உளவுத்துறை வேலை பாக்குது போல!
    (சத்ரியா எச்சரிக்கையா இருந்துக்கடா.)

    ReplyDelete
  42. "தலையாய தேவதை" அழகில் சொக்கியது விழியா...

    விழியில் சொக்கியது தலையாய தேவதையா..

    ReplyDelete
  43. கவிதை தேவதையைப்போலவே அழகு...

    :)

    ReplyDelete
  44. வரிகளை வழங்கிவிட்டு
    விமர்சனங்களை
    அபகரித்து கொள்வதுபோலா
    நண்பா...

    நலம்தானே.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.