Nov 29, 2014

நிலாப்பால்



நிமிர்த்தி வைத்திருந்த
நிலவுக்குடுவையின்
வாய் பகுதியை வாகாய்
பற்றியிழுக்கிறது குழந்தை

வான் உறியிலிருந்து
ஒருக்களியும் குடுவையிலிருந்து
கொட்டுகிறது முளிதயிர்

குழந்தையின் வாய்க்குள்
சிக்கிய சிறுதுளி தவிர்த்து
மிஞ்சியதெல்லாம் பாய்கிறது பால்வெளியில்

பாயும் ஒளிக்கு
நீயும் நானும்  சூட்டிய பெயர்
நிலவொளி

*

நன்றி : ஓவியர் @Keshav முகநூல் நண்பர்

5 comments:

  1. அருமையான கவிதை அண்ணாச்சி!

    ReplyDelete
  2. இன்றைய வலைச்சரத்தில் தங்களின் தளம் அறிமுகமாகி இருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. ஆவ்... அருமையான கவிதை...

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.