தேவையின் நிமித்தமே
தேடலைத் துவக்கி வைக்கிறது
இடைவிடாத் தேடலின்
இறுதி கண்டுபிடிப்பு மனித இனம்
நிர்வாண மனிதன்
நிர்வாணமாய் இருந்த வரையிலும்
சொர்க்கமாகவே இருந்தது பூமி
இடையை மறைக்கும் தேவை
மரவுரியையும்
மிருகத்தை விரட்டும் தேவை
நெருப்பையும்
உணவுத் தேவை உழவையும்
உணர்வுப் பறிமாற்றத்தேவை
மொழியையும்
மகிழ்ச்சித்தேவை கலையையும்
இனப்பெருக்கத் தேவை கலவியையும்
தற்காப்பு தேவை போரையும்
நாட
கட்டாயப்படுத்தியது காலம்
நிலம் கடக்க சக்கரம்
கடல் கடக்க கலம்
கோள் அளக்க வானவியல் என
தொடர்ந்த தேடலால்
விருத்தியடைந்தது அறிவியல்
அறிவியலின் விரல் பிடித்து
அணு பிளக்கும் வல்லமைக் கண்டு
இயற்கையை மார் பிளந்து
மனிதனே இங்கு மாபெறும் ஆற்றலென
இறுமாப்போடு உயர்ந்து
சக உயிரினங்களை ஒழித்து ஓய்ந்து
இளைப்பாறும் நேரத்தில்
எஞ்சியிருக்கும்
கொஞ்சம் தாவரங்களும்
கூடுதலான எந்திரங்களும்
இன்றோ நாளையோ
பாலையாகி விடுவோம் என்னும்
பயத்திலிருக்கும் மண் பரப்பும்
மன்றாடி பணித்தபடி இருக்கிறது
மனிதா
நீ மட்டுமாவது வாழ
தேடிக்கொள்
மற்றோர் உயிரிக்கோளத்தை என!
*
சிங்கப்பூரில் தங்கமீன் வாசகர் வட்டம் இம்மாதம் (11/08/13) நடத்திய (தலைப்பு : “தேடல்”) கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற கவிதை.
சிங்கப்பூரில் தங்கமீன் வாசகர் வட்டம் இம்மாதம் (11/08/13) நடத்திய (தலைப்பு : “தேடல்”) கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற கவிதை.
அட... கொக்க,,,, மக்கா.....!!!
ReplyDeleteஎன்னாச்சி சொக்கா! (ஹா ஹா ஹா)
Deleteஎஞ்சியிருக்கும்
ReplyDeleteகொஞ்சம் தாவரங்களும்
கூடுதலான எந்திரங்களும்
இன்றோ நாளையோ
பாலையாகி விடுவோம் என்னும்
பயத்திலிருக்கும் மண் பரப்பும்
மன்றாடி பணித்தபடி இருக்கிறது
மனிதா
நீ மட்டுமாவது வாழ
தேடிக்கொள்
மற்றோர் உயிரிக்கோளத்தை என!//
உண்மையில் மிகசிறந்த ஒருஆக்கத்தை பாங்குற பதிவு செய்து இருக்கிறீர்கள் எதிர்கால நமது வாழிடம் பாலை நிலமாகிப் போகும் அச்சத்தை உண்மையான ஆதங்கத்துடன் சொல்லிய விதம் மிகவும் பாராட்டுதலுக்கு உரியது .
இபூமியின் அழிவு நாம் யாரும் விரும்பாத ஒன்றுதான். ஆனாலும், நாள்தோறும் நமது பங்கிற்கும் தீங்கிழைத்தபடி தானே இருக்கிறோம்.
Deleteஆழமான கருத்துடன் கூடிய
ReplyDeleteஅற்புதமான கவிதை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
நன்றிங்க ரமணி அய்யா.
Deleteஅருமையான கவிதை
ReplyDeleteஅற்புதமான சிந்தனை
வாழ்த்துக்கள்
மிக்க நன்றிங்க அய்யா.
Deleteஉங்கள் வார்த்தையாடல்கள் ரொம்பவும் ஈர்க்கிறது. எளிமையான சொற்களை வைத்துக் கொண்டு கவிதையில் மிகப்பெரிய விஷயத்தை சொல்லியிருக்கிறீர்கள். சிங்கபூர் கவிதைபோட்டியில் வெற்றி பெற்றதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், சத்ரியன்.
ReplyDeleteஇந்த வெற்றி மேலும் பல வெற்றிகளை கொண்டு வரட்டும்.
தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றிங்க.
Deleteகவிதை நன்று...
ReplyDeleteபரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
நன்றிங்க குமார்
Deletehi சத்ரியன் nice linespa
ReplyDeleterompa naal kalichi unga blog pakuren happy
miss you friend
வணக்கம் காயத்ரி.
Deleteஎங்கே போனீங்க இத்தனை நாளாய்?
உங்க வலைப்பக்கத்தை கொஞ்சம் கவனிங்க.