குடியிருப்பை அலங்கரிக்கும் கோயில்கள் போல தெருக்கள்தோறும் அரசின் மதுக்கடைகள் உழைத்துப் பிழைக்கும் எளியோரின் வலிமையை இழிவு படுத்தவென்றே அரசின் இலவசங்கள்
நாட்டின் முன்னேற்றத்திற்கு திசை திருப்பப்பட வேண்டிய இளைய ஆற்றலையெல்லாம் போதையேற்றி கூற்றுவன் கூடத்திற்கு ஆள் பிடித்து அனுப்பும் பாழ்பட்ட அரசின் பாதங்களில் வீழ்ந்து தாள்தொட்டு வணங்கும் எம் இனத்திற்கு என்றுதான் தெரியுமோ மதுக்கூடங்களும், இலவசங்களும் நம் தேசத்தின் எதிர்காலத்தை நாசப்படுத்தும் நச்சு இணைகோடுகளென்று.