நிமிர்த்தி வைத்திருந்த
நிலவுக்குடுவையின்
வாய் பகுதியை வாகாய்
பற்றியிழுக்கிறது குழந்தை
வான் உறியிலிருந்து
ஒருக்களியும் குடுவையிலிருந்து
கொட்டுகிறது முளிதயிர்
குழந்தையின் வாய்க்குள்
சிக்கிய சிறுதுளி தவிர்த்து
மிஞ்சியதெல்லாம் பாய்கிறது பால்வெளியில்
பாயும் ஒளிக்கு
நீயும் நானும் சூட்டிய பெயர்
நிலவொளி
*
நன்றி : ஓவியர் @Keshav முகநூல் நண்பர்
அருமையான கவிதை அண்ணாச்சி!
ReplyDeleteநன்றிங்க நேசன்.
Deleteஇன்றைய வலைச்சரத்தில் தங்களின் தளம் அறிமுகமாகி இருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆவ்... அருமையான கவிதை...
ReplyDeleteநன்றிங்க குமார்.
Delete