Showing posts with label இலையுதிர் காலம்.. Show all posts
Showing posts with label இலையுதிர் காலம்.. Show all posts

Mar 16, 2014

இலையுதிர் காலம்

உடை
அவிழ்த்த தருவின்
அடிமரத்து நிழலில்
ஒடுங்கி அமர்ந்திருந்தேன்

மழைக்கூதலுக்குஇதமாய்
எஜமானியை உரசும் வீட்டுப் பூனையைப் போல
வந்து உரசுகிறது
ஒரு சருகு

இதே போன்றதொரு
கோடைநாளில் தான்
திடீரென 
காணாமல் போனதெங்கள்
பூனை.

*