நண்பர் ஜமால் என்னையத் தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்.வேலைப்பளு காரணமாக சிறிது நாள் பொறுத்தருளும்படி கேட்டுக் கொண்டேன் . இப்போ தோழி ஹேமா வும் அழைத்திருக்கிறார் . இதுக்கு பிறகும் தாமதித்தால் (ஏற்கனவே தாமதமாகி விட்டது), நண்பர்களின் கோவத்திற்கு ஆளாக நேரிடும்.ஆதலால், "அ" முதல் "ஃ" வரையில் மட்டும் எழுதுகிறேன். "ஆங்கில அகரத்தை" நானும் தவிர்த்து விடுகிறேன். அதற்காக ,"எனக்கு ஆங்கிலம் பிடிக்காது", என்று பொருள் படாது. "ஆங்கிலத்திற்கு என்னைப் பிடிக்காது ", என்று பொருள் கொள்க!
ஆரம்பிக்கறேன்...
அட்டகாசம் பண்ணியது : என்னைப் பற்றி அப்படி யாரும் (குறிப்பா எங்க ஊர்ப் பெண்கள்) சொன்னதாகத் தெரியவில்லை. எதுக்கும் அம்மாவிடம் ஒருமுறை கேட்டு பாத்திடனும்.
அன்புக்குரியவர்கள் : இதையும் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லாருமே.!
ஆள் மாறாட்டம் : கொஞ்ச வருசத்துக்கு முன் எனது படுக்கையறையில் எனக்கு பதில் தலையணை உறங்கிக் கொண்டிருக்க நான் நள்ளிரவுக் காட்சி பார்த்துக் கொண்டி( "பத்மா" திரையரங்கில் இடம் பிடித்தி)ருப்பேன்.இதுக்கு பேரும் ஆள்மாறாட்டம் தானே?
ஆசைக்குரியவர்கள்: அன்னையும், பிதாவும் .(விரைவில் ...பட்டியல் கூடவிருக்கிறது )
இன்பமான செய்தி : என்னையும் ஒருத்தி ஏற்றுக் கொண்டது.
இலவசமாய் கிடைப்பது : ஆசை.
ஈயென பல்லிளித்தது : பல் மருத்துவரிடம்.....! (ஒரேயொரு முறை, என்னைப் பார்த்து குரங்கும், குரங்கைப் பார்த்து நானும் ..!)
ஈதலில் சிறந்தது : அன்பு.
உணர்வுகள் அழுதது : கேடு கெட்ட இந்த 21 ஆம் நூற்றண்டில் வாழ்கிறோமே என்று...!
உலகத்தில் பயப்படுவது : .........யா - விற்கு ! (ஸ்ரேயாவா ...ச்சே ச்சே ... இல்லப்பா. இது வேற ...யா! )
ஊனமாய் நின்றது : கடந்த நவம்பர் 3 - ஆம் நாள் எனது தம்பி திடீர் மரணத்தைத் தழுவிய செய்தியறிந்து.
ஊமை கண்ட கனவு : உரியவளிடம் இன்னும் தெரிவிக்காத (முதல்) காதல் !
என்ன கற்பனை : உலகை முழுதாய் சுற்றிப் பார்த்து விட வேண்டும்.(அதுக்காக யாரும் உலகப் படத்தை மின்னஞ்சல் அனுப்பி வைக்காதிங்க அப்பு ... கடுப்ப்ப்ப்பாயிருவேன்.)
எப்போதும் உடனிருப்பது : இதுவரை உயிர்!
ஏழைகள் பற்றி : போதுமான விழிப்புணர்ச்சி ஏற்படுத்தத் தவறி இருக்கிறோம்.
ஏன் இந்தப் பதிவு : வேறென்ன ? உங்களின் போறாத காலம்.
ஐக்கியம் : நேரம் கிடைக்கும் போது என்னுள்!
ஐஸ்வர்யத்தில் சிறந்தது : இதையெல்லாம் "பொறுமை" யாப்படிக்கிறீங்களே. அதேதான் !
ஒதுங்கி நின்றது : ஹி...ஹி...வெட்கமாய் உள்ளது போங்கோ ..(?!)
ஒரு ரகசியம் : சொல்றேன். ஆனா, அது மட்டும் ரகசியம்.......!
ஓலையின் கீற்றுக்கள் : நான் குடிசையில் பிறந்தவன்....(இதற்கு மேல் என்னச் சொல்ல ? )
ஓசையில் பிடித்தது : சலசலக்கும் நீரின் ஓசை.
ஒளடதம் : புரியவில்லை .(ஹேமா சொன்ன பிறகு புரிஞ்சிடுச்சி ,எனது மூத்த தங்கை.)
ஒளவை மொழி ஒன்று : ஊக்கமது கைவிடேல் .
ஃ : ம்ம்ம்ம்ம்..... எதை மறுப்பது.?
(அ)ஃறிணையில் பிடித்தது : "வடிவேலு"வும் (எங்கவீ ட்டு நன்றியுள்ளவன்), எங்க வீட்டு மாடுகளும் !
யப்பா ....ஒரு வழியா முடிஞ்சது ! இதுக்கே மூச்சுத் தெனருதே...!
பி. கு.:-
திட்டணும்னு நெனைக்கிறவங்களுக்கு மட்டும் ...
வெளிநாட்டிலிருந்தால் : ramheartkannan@gmail.com
உள்ளூரிலிருப்பவர்கள் :- கைத் தொலைப்பேசி வழி !
*********************************************
நீங்கல்லாம் வந்து ,
இழுத்துக்கிட்டு போங்கப்பா...
திரு. கருணாகரசு :அன்புடன் நான் ,
திரு.அன்புடன் புகாரி : அன்புடன் புகாரி.
தோழி.யாழினி : நிலவில் ஒரு தேசம் ,
'கவிதை நதி' திரு.விசயபாரதி: நட்புடன் நான்