Jun 21, 2012

கண்ணி

பிரத்யேகமான இழை கொண்டு
பின்னவில்லை
உனக்கான வலை கண்ணியை.
உன்
பேச்சுக்களிலிருந்தே
பிரித்தெடுக்கிறேன்
உறுதியான நாரிழைகளை.

உனை வெல்ல
என் முதலீடு
வலை பின்னும்
விரல் நுணுக்கம் மட்டுமே.

வலைக்குள் சிக்காத
கலைமான் நீயென அறிவேன், எனவே
பின்னும் முன்னே
உள் வைத்து விட்டேன் உன்னை.

#

24 comments:

  1. உன்
    பேச்சுக்களிலிருந்தே
    பிரித்தெடுக்கிறேன்
    உறுதியான நாரிழைகளை.

    இந்த இடம் மிகவும் பிடித்தது..தொடர்ந்து எழுதுங்கள்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மதுமதி.

      நன்றி.

      Delete
  2. இந்த தலைவனின் அந்த அன்புக் கண்ணி இருந்து
    யாராவது மீள நினைப்பார்களா

    எலியையும்
    புலியையும் எதிர் பார்க்கவும் மாட்டார்கள்
    அத்தனை சுகமானது இந்த ''கண்ணி''

    நண்பா கவிதை ம்ம்ம் கலக்கல்

    ReplyDelete
    Replies
    1. //இந்த தலைவனின் அந்த அன்புக் கண்ணி //

      இதை எழுதியது ஒரு ஆண் என்று பாராமல் படித்தால்,
      ’தலைவி” தலைவனுக்கு எழுதியது போலவும் தொன்றும் நண்பா.

      Delete
  3. அடடா...

    பூ வெடுத்துப்
    பா தொடுத்தீர்
    கண்ணி உன்விரலில்
    கன்னி உன்மனத்திலென...

    அருமை அருமை..

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க அருணாசெல்வம் (உங்க பெயரைச் சரியாக எழுதியிருக்கேனா?)

      Delete
  4. Replies
    1. நன்றிங்க தனபாலன் சார்.

      Delete
  5. வலைக்குள் சிக்காத
    கலைமான் நீயென அறிவேன், எனவே
    பின்னும் முன்னே
    உள் வைத்து விட்டேன் உன்னை\\\\

    உளள வைத்துப் பின்னி வாங்கோ ....
    எப்போதாவது வெளிவராமலா! போகும்?

    ReplyDelete
    Replies
    1. வெளிவரும் வாய்ப்பே இல்லை காலா.

      Delete
  6. யாருக்கப்பா பின்னியது ஹேமாவுக்காகவா? தமிழுக்காகவா?

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லும் கன்னிகளுக்கு இல்லை கலா. கவிதை ப்ரியர்களுக்கான ‘கண்ணி’ இது.

      Delete
  7. கண்ணிக்குள கன்னி வைத்துக் காதலும் அதனுள
    வைத்த உங்கள எண்ணப் பின்னல் அருமை நண்பா!

    ஆமா, இதொன்றும்...நிஐமில்லையே...!

    ReplyDelete
    Replies
    1. எழுத்துக்களில் எல்லாம் எழுதியவனையே தேடாதீங்க. வாசிக்கும் உங்களைப் போன்றோர்கள் ’அவரவர் தன்னை’ ஒருமுறை திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு முயற்சி. அவ்வளவு தான்.

      (குடும்பம் குட்டின்னு இருக்கிறவன் நான். ”குண்டு” போடாதீங்க தாயீ.)

      Delete
  8. மிகவும் தேர்ந்த சொல்லாடல் நுணுக்கமான பின்னல் சிறப்பு பாராட்டுகள்

    ReplyDelete
  9. வாவ்... வலையில் அந்த மான் சிக்கியதோ இல்லையோ கவிதைக் கண்ணியில் நான் சிக்கிவிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. அப்போ நீங்களும் ‘வலை’ பின்னியிருக்கீங்க.

      Delete
  10. கண்ணிலே இருப்பதென்ன கண்ணி இளமானே காவியமோ ஒவியமோ கன்னி இளமானே!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. //கண்ணிலே இருப்பதென்ன//

      மேடம், “கண்ணியிலே இருப்பதென்ன” என இருக்கவேண்டும்.

      Delete
  11. ''..பேச்சுக்களிலிருந்தே
    பிரித்தெடுக்கிறேன்
    உறுதியான நாரிழைகளை.


    உனை வெல்ல
    என் முதலீடு
    வலை பின்னும்
    விரல் நுணுக்கம் மட்டுமே.


    வலைக்குள் சிக்காத
    கலைமான் நீயென அறிவேன், எனவே
    பின்னும் முன்னே
    உள் வைத்து விட்டேன் உன்னை...''
    மிக மிகச் சிறப்பான வரிகள்....எண்ணி எண்ணிப் பின்னிய கண்ணி.
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க வேதா மேடம்.

      Delete
  12. வலைக்குள் சிக்காத
    கலைமான் நீயென அறிவேன், எனவே
    பின்னும் முன்னே
    உள் வைத்து விட்டேன் உன்னை...//''

    வலைப் பின்னல் கூட அவளுக்காக மட்டுமே
    என்பது அதை வைத்துப் பின்னுவதால்
    உறுதியாகிப் போகிறதே
    வித்தியாசமான அருமையான கவிதைப் பின்னல்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. //எழுத்துக்களில் எல்லாம் எழுதியவனையே தேடாதீங்க.
    இந்த மனப்பாங்கைப் பற்றி நானும் வியந்திருக்கிறேன். காதல் பற்றிய எழுத்தில் எழுதியவனைத் தேடுவோர் கொலை, கொள்ளை, கற்பழிப்பு பற்றிய எழுத்தில் தேடுவதில்லையே? (ஒரு வேளை அதிலும் தேடுவார்களோ?) நானும் விதிவிலக்கில்லை - பல நேரம் எழுத்துக்களில் எழுதுவோர் தெரிவதாக நினைத்துக் கொள்வேன்.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.