இதற்கும் உண்ணாவிரதம்
இருக்கப்போவதில்லை நாங்கள்.
உண்ணாவிரதத்தை மதிக்க
நீங்கள் வெள்ளையர்களும் இல்லை
நாங்கள் காந்திகளும் இல்லை.
ஒரு
கொள்ளையர் குடும்பத்தை விரட்ட
வேறொரு கொள்ளையர் கூட்டத்தை
அரியணை ஏற்றிவைத்த
அறியாமையின் சொந்தக்காரர்கள் நாங்கள்!
பயணக்கட்டணம் உணவுப் பொருள்
மின்சாரம் எரிபொருள் விதை
உரம் பூச்சிக்கொல்லி ...என இன்னும்
என்னென்னவெல்லாம் உண்டோ
அனைத்தின் விலையினையும் உயர்த்துங்கள்.
அது பற்றிய கவலை
எள்ளளவும் இல்லை எமக்கு - ஆனால்,
வழங்கிய வாக்குறுதியில்
இலவசங்களை மட்டும்
நிறைவேற்றி விடுங்கள்
அது போதும் எங்களுக்கு.
***
மானங்கெட்ட
மாநில அரசே!
சிறு
குருவிகளின் தலையில்
பனங்காய் சுமத்துவதை விடுத்து
இலவசங்களை நிறுத்து
உங்கள்
கூட்டத்து கொள்ளைகளை தடுத்து - அரசு
கல்லாவின் கனத்தை உயர்த்து
ஏழை
மக்களின் தேவைகளை உணர்ந்து
மங்கும் தலைமையை நிமிர்த்து
அல்லாது போனால்,
கடந்தக்கால கழுதைகளின்
கழுத்தைப் பிடித்து தள்ளிய
மை விரல்களுக்கு
நிகழ்கால கோவேறுகளின்
பிடரியைப் பிடித்து தள்ள
வெகுநேரம் தேவை படாது.
இருக்கப்போவதில்லை நாங்கள்.
உண்ணாவிரதத்தை மதிக்க
நீங்கள் வெள்ளையர்களும் இல்லை
நாங்கள் காந்திகளும் இல்லை.
ஒரு
கொள்ளையர் குடும்பத்தை விரட்ட
வேறொரு கொள்ளையர் கூட்டத்தை
அரியணை ஏற்றிவைத்த
அறியாமையின் சொந்தக்காரர்கள் நாங்கள்!
பயணக்கட்டணம் உணவுப் பொருள்
மின்சாரம் எரிபொருள் விதை
உரம் பூச்சிக்கொல்லி ...என இன்னும்
என்னென்னவெல்லாம் உண்டோ
அனைத்தின் விலையினையும் உயர்த்துங்கள்.
அது பற்றிய கவலை
எள்ளளவும் இல்லை எமக்கு - ஆனால்,
வழங்கிய வாக்குறுதியில்
இலவசங்களை மட்டும்
நிறைவேற்றி விடுங்கள்
அது போதும் எங்களுக்கு.
***
மானங்கெட்ட
மாநில அரசே!
சிறு
குருவிகளின் தலையில்
பனங்காய் சுமத்துவதை விடுத்து
இலவசங்களை நிறுத்து
உங்கள்
கூட்டத்து கொள்ளைகளை தடுத்து - அரசு
கல்லாவின் கனத்தை உயர்த்து
ஏழை
மக்களின் தேவைகளை உணர்ந்து
மங்கும் தலைமையை நிமிர்த்து
அல்லாது போனால்,
கடந்தக்கால கழுதைகளின்
கழுத்தைப் பிடித்து தள்ளிய
மை விரல்களுக்கு
நிகழ்கால கோவேறுகளின்
பிடரியைப் பிடித்து தள்ள
வெகுநேரம் தேவை படாது.