இன்று துவங்குகிறது
இல்வாழ்வில் ஆறாம் ஆண்டு
இன்னும் வேண்டும் எனக்கு
உன்னோடு வாழும் நூறாண்டு.
எட்டில் கிட்டிடும்
ராஜயோகம் - என்பார்கள்
உண்மை தான்!
ஈராயிரத்தேழு பிப்ரவரி
எட்டில் கிட்டியது - உன்னால்!
ஒளிக்குவலையே நீ
உள் நுழைந்த நேரம்
உறவுகள் சூழ்ந்தது
ஒளிக்கற்றையாய்!
உன்னில் வாழ்தல் எனது தவம்
உன்னால் வாழ்தல் எனது வரம்
அன்றில் போல் என்றும்
ஒன்றி நாம் வாழ
ஆசிர்வதிக்கட்டும்...!
***
(குறிப்பு : எங்கள் வாழ்வு வசப்பட்ட நாள் - 08/02/2007.)
