Nov 10, 2009

காதல் குழந்தை


கொடும்பசி கொண்டு ,
பால் சுரக்காத
தாயின் தனங்களை
சப்பி
ஓய்ந்து
பாலுக்காக வீரிட்டு அழும்
பச்சிளங் குழந்தையைப் போல்

உன்
காதலுக்காக
வீரிட்டபடி...

என் இதயம் !




29 comments:

  1. very good example chatriyan - rajakamal

    ReplyDelete
  2. மக்கா! இன்னும் எளவட்டம்னு நெனப்பு. மதனி கூப்பிட்றமாதிரி இருக்கு என்னன்னு கேளுங்க.

    //உன்
    காதலுக்காக
    வீரிட்டபடி...

    என் இதயம் !//

    ரொம்ப ”ஸ்ட்ராங்”கா நல்லா இருக்கு

    ReplyDelete
  3. நவாஸ் சொல்றது சரிதான். எதுக்கும் ஒருமுறை திரும்பி பாருங்க...

    கவிதை நல்லாருக்கு....

    ReplyDelete
  4. வரிகள் அருமை.....படம் தான் பொருந்த வில்லை நண்பா.......

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. /ஆரூரன் விசுவநாதன் கூறியது...

    வரிகள் அருமை.....படம் தான் பொருந்த வில்லை நண்பா......./

    கவிதை நன்று
    படம் இதன்று

    ReplyDelete
  6. சத்ரியா!!உங்களுக்கு மட்டுமா!! இவ்வளவா!!!
    நம்பமுடியுமா??அதிசயமான மனிதரப்பா!!!!
    இரண்டா?மூன்றா?? அதுதான்...இதயம்.
    ஆளுக்கொன்று கொடுக்கிறீர்களே அதுதான்
    கேட்டேன்.

    ReplyDelete
  7. [[ S.A. நவாஸுதீன் சொன்னது…
    மக்கா! இன்னும் எளவட்டம்னு நெனப்பு. மதனி கூப்பிட்றமாதிரி இருக்கு என்னன்னு கேளுங்க.

    //உன்
    காதலுக்காக
    வீரிட்டபடி...

    என் இதயம் !//

    ரொம்ப ”ஸ்ட்ராங்”கா நல்லா இருக்கு]]

    ரிபீட்ட்ட்ட்ட்........

    நல்லாயிருக்கு

    ReplyDelete
  8. ஒப்பிட்டு உதாரணம் நல்ல இருக்கு சத்ரியா

    ReplyDelete
  9. என்னமோ இன்னும் காதலே.... கிடைக்காதமாதிரி !

    அழகான படம்.

    ReplyDelete
  10. //உன்
    காதலுக்காக
    வீரிட்டபடி...//

    ம்ம்ஹூம்..

    கல்யாணத்துக்கப்புறமுமா?

    நல்லா இருங்கப்பு...

    ReplyDelete
  11. //மக்கா! இன்னும் எளவட்டம்னு நெனப்பு. மதனி கூப்பிட்றமாதிரி இருக்கு என்னன்னு கேளுங்க.//

    நவாஸ்,

    நான் அழுதுருவேன். ஆடி வந்தாத்தான் 27 முடியப்போகுது.(ஆடாம வந்தா‍ 'ன்னு கேள்வியெல்லாம் கேக்கப்பிடாது.)

    ReplyDelete
  12. //நவாஸ் சொல்றது சரிதான். எதுக்கும் ஒருமுறை திரும்பி பாருங்க...

    கவிதை நல்லாருக்கு....//

    பாலாசி,

    திரும்பி பார்த்தது தான்...இது.!

    ReplyDelete
  13. //வரிகள் அருமை.....படம் தான் பொருந்த வில்லை நண்பா.......

    வாழ்த்துக்கள்//

    வாங்க ஆரூர்,

    பொருத்தமான படம் கிடைக்கலை. உங்க கண்ணில் மாட்டினால் (ramheartkannan@gmail.com) க்கு அனுப்பி வெய்யுங்க. பிறகு மாத்திக்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  14. //hmm... anne paarthunne..! nalla irukkunne..!//

    (வெறும்)ப்ரியா,

    பார்த்தேனே.!

    நன்றி ப்ரியா.

    ReplyDelete
  15. //கவிதை நன்று
    படம் இதன்று//

    வாங்க வானம்பாடி,

    உண்மைதான். பொருத்தமான படம் கிடைக்கவில்லை.(google) தேடலில் தேடினால், பெரும்பாலும் ஈழத்துப் படங்களே கிடைக்கிறது.(இந்த கவிதைக்கு அவைகளை சேர்க்க என் மனம் ஒத்துக்கொள்ளவில்லை. அது ரணம் இல்லியா?)

    ReplyDelete
  16. //இரண்டா?மூன்றா?? அதுதான்...இதயம்.
    ஆளுக்கொன்று கொடுக்கிறீர்களே அதுதான்
    கேட்டேன்.//

    கலா அக்கா,

    எனக்கும் இதயம் ஒன்றே ஒன்றுதான். அதில் அறைகள் மட்டும் நான்கு.
    முதல் அறை அம்மாவுக்கு, இரண்டாவது உடன் பிறப்புகளுக்கு, மூன்றாவது மனைவிக்கும், குழந்தைக்கும்.., நான்காவது நட்புகளுக்கு.

    எப்பூடி....?

    ReplyDelete
  17. //ரொம்ப ”ஸ்ட்ராங்”கா நல்லா இருக்கு]]
    ரிபீட்ட்ட்ட்ட்........
    நல்லாயிருக்கு//

    ஞானம்,
    நன்றி நண்பா.

    ReplyDelete
  18. //nalla irukunga anna///

    காயு,

    எங்கேடா ரொம்ப நாளா ஆளையே காணல?

    நன்றி.

    ReplyDelete
  19. //என்னமோ இன்னும் காதலே.... கிடைக்காதமாதிரி !//

    ஹேமா,

    நிஜமாத்தான். என் காதல் கிடைக்கலே!

    //அழகான படம்.//

    மேலேயுள்ள பின்னூட்டங்களில் வாங்கி கட்டிக்கிட்டிருக்கேன். நீங்க மட்டும் தான் பாராட்டுறீங்க.

    நன்றி.

    ReplyDelete
  20. //கல்யாணத்துக்கப்புறமுமா?

    நல்லா இருங்கப்பு...//

    வசந்த்,

    இருக்கிறவன் வெச்சிக்கறான்; இல்லாதவன் வரைஞ்சிக்கிறான். அண்ணனைப் பாத்து ஏன் பொகை வுடற?

    அதென்ன ரெண்டு கன்னத்துலயும் கைய வெச்சி முட்டு குடுத்துக்கிட்டு?

    ReplyDelete
  21. //ஒப்பிட்டு உதாரணம் நல்ல இருக்கு சத்ரியா//

    நன்றி வேல்கண்ணன்.

    ReplyDelete
  22. //கொடும்பசி கொண்டு ,
    பால் சுரக்காத
    தாயின் தனங்களை
    சப்பி
    ஓய்ந்து
    பாலுக்காக வீரிட்டு அழும்
    பச்சிளங் குழந்தையைப் போல்//


    உங்க மனவிழி திறந்து

    எழுதியிருக்கீங்க போல

    ReplyDelete
  23. //உங்க மனவிழி திறந்து

    எழுதியிருக்கீங்க போல//

    சங்கர்,

    எல்லாமே அங்கிருந்துதான் வருது.

    ReplyDelete
  24. //
    எனக்கும் இதயம் ஒன்றே ஒன்றுதான். அதில் அறைகள் மட்டும் நான்கு.
    முதல் அறை அம்மாவுக்கு, இரண்டாவது உடன் பிறப்புகளுக்கு, மூன்றாவது மனைவிக்கும், குழந்தைக்கும்.., நான்காவது நட்புகளுக்கு.
    //
    இது இன்னும் நல்லா இருக்கே.

    ReplyDelete
  25. காதல் என்றாலே சாதாரண வார்த்தைகளுக்கு கூட அழகு வந்து கவிதையாகி விடுகின்றன்.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.