இன்று மே 18.
உலகிலேயே இறையாண்மை மிக்க ஒரு ”விடுதலை இயக்கம்” சிதைக்கப்பட்ட வரலாற்றுக் கறுப்பு நாள்.ஒரு இனவெறியன் பல்லாயிரம் தமிழர்களின் உயிரை ஒரே இடத்தில் பறித்த நாள்.
அந்த இன அழிப்பை நிச்சயமாகத் தடுத்திருக்க முடியும். அண்டை நாடான “இந்தியா” நினைத்திருந்தால்!. அந்தப் போரை உக்கிரமாக நிகழ்த்தியதே, இந்தியா அரசுதான் என்னும் போது அவர்களா போர் நிறுத்தத்தை வலியுறுத்தியிருப்பார்கள்..!?
ஈழத்தமிழர்கள் விசயத்தில் இந்தியா ஏன் அப்படி நடந்துக்கொண்டது என்ற பாமரக் கேள்விக்கு பழுத்த அறிஞர்கள் கூறிய சப்பைக் காரணம் முன்னாள் பாரதப்பிரதமர் ராஜிவ்காந்தியை விடுதலைப் புலிகள் படுகொலைச் செய்தார்கள் என்பதே!. (2020-ஆம் ஆண்டில் வல்லரசா(யிடுமா?)கும் ஒரு தேசத்தின் தொலைநோக்குப் பார்வையைக் கவனியுங்கள் என் சகோதரர்களே!)
உண்மையிலேயே விடுதலைப்புலிகள் மட்டுமே ராஜிவ் கொலைக்கு காரணமா? இந்திய அரசியலை மட்டும் கவனித்துக் கொண்டிருந்த ராஜீவை அவரது வீடு தேடி வந்து பொழுதுபோக்கிற்காகக் கொன்றார்களா?
ராஜீவின் மரணத்திற்குக் காரணிகள் எவையென அகழ்ந்தாராயப்பட்ட அறிக்கைகளின் படி பார்த்தால் , அகால மரணத்தை அவரேதான் தாம்பூலம் வைத்து அழைத்திருக்கிறார் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
1. ஈழ விடுதலையின் அவசியத்தை ‘இந்திரா’ உணர்ந்திருந்த அளவிற்கு ராஜீவ் ஏன் புரிந்திருக்கவில்லை?
2.இலங்கையின் அரசியல் நிலைமைப் புரியாமல், ஜெயவர்த்தனே விரித்த வஞ்சக வலையில் வீழ்ந்து, ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தைச் சீர்குலைத்தது யார் தவறு?
3.அமைதிப்படை எனும் பெயரில் அரக்கர்களை அனுப்பி தமிழ்ப்பெண்களின் தாலியறுப்பையும், கற்பு பறிப்பையும் நிகழ்த்த காரணம் யார்?
4. விடுதலைப்புலிகளை ஒரே வாரத்தில் நசுக்கிவிடலாம் என்று ஆருடம் சொன்னவனின் பேச்சைக்கேட்டு, (அமைதி ஏற்படுத்த போனவர்களா இவர்கள்? ) 2 ஆண்டுகள் 7 மாதம் போரிட்டு தோல்வியைத் தோளில் போட்டுக்கொண்டு ராஜிவ்வும், இந்திய அமைதிப்படையும் மூக்கை உடைத்துக்கொண்டதற்கு காரணம் யார்?
(இந்த போரின் முடிவில் 1500 இராணுவ வீரர்களை இந்தியப்படை இழந்திருந்தது)
5. இவைகளை எல்லாம் தவிர்த்து, தனது அரசாங்கத்தில் வாழும் தமிழகத் தமிழர்களின் வரிப்பணத்தையேக் கொண்டு ஈழத்தமிழனை அழிக்க, இலங்கை இனவெறியனுக்கு உதவ அமைதிப்படையை அனுப்பி வைக்கும் அதிகாரத்தை ராஜீவுக்கு வழங்கியது யார்.?
-இப்படி ஒட்டுமொத்த குற்றங்களுக்கும் “தானே” தானைத்தலைவனாக இருந்த ராஜிவ்காந்தியினுடைய நடவடிக்கைகளின் மீது வெறுப்புக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகள் , தங்களது விடுதலைப்போராட்டத்திற்கு இவர் தலைவலியாக இருப்பார் என்னும் தொலைநோக்குக் கணிப்பின் இறுதி முடிவாகத்தான் ராஜீவின் படுகொலையை நிகழ்ந்தியிருக்கிறார்கள். (சுருங்கச் சொல்வதென்றால் “தன்வினை தன்னைச்சுடும்” என்னும் பழமொழி ராஜீவிற்கு சாலப்பொருந்தியிருக்கிறது.)
ராஜீவின் மரணத்திற்குப் பின் , அவரது கொலைக்கான காரணிகளைக் கண்டறியும் பணியில் ஈடுபட்ட சிபிஐ அதிகாரிகள், விசாரணைக்கமிஷன் அதிகாரிகள், ‘ரா’ (R&AW) உளவுத்துறை அதிகாரிகள் தத்தமது பதவிகளையும், பணிகளையும் தற்காத்துக்கொள்ள மொத்தப்பழியையும் தூக்கி “விடுதலைப் புலிகளின்” தலையில் கட்டிவிட்டு தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவின் பாதுகாப்பிற்காக இயங்கும் அத்தனை பாதுகாப்பு அதிகாரிகளிடமும் ஒரு கேள்வி கேட்கிறேன்.
“ இலங்கையில் ஜெ.பி.ஜெயவர்த்தனேவுடனான எதோவொரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டு வெளியில் வந்துக்கொண்டிருந்த ராஜிவ் காந்தியை ஒரு படை வீரன் துப்பாக்கியால் அடித்தானே, அந்தச் சம்பவத்தில் ஒருவேளை ராஜிவ் உயிரிழந்திருந்தால் இந்த இறையாண்மை மிக்க இந்திய அரசு, இலங்கை அரசின்மேல் போர் தொடுத்துவிட்டிருக்குமா?
மிஞ்சிமிஞ்சிப் போனால் பொருளாதாரத்தடை விதித்திருக்குமேயொழிய ,
ஒரு கடைநிலை சிங்களவனின் தொடையிடுக்கில் இருக்கும் ஒரு ”மயிரை”யும் பிடுங்க முடிந்திருக்காது.
இதோ ராஜிவ்காந்தி சிங்கள அரசிற்கு உதவியதற்கான வெகுமதியாக இலங்கையில் உள்ள ஒரு தேசியக்கட்சியின் பொதுச்செயலாளனின் கூற்று:
(சூழ்ச்சியான ஒப்பந்தத்தின் மூலம் இந்திய அதிகாரத்தை இலங்கை மீது திணித்த முன்னாள் பிரதமா ராஜீவ் காந்தியை துப்பாக்கி கட்டையால் தாக்கி தனது எதிர்ப்பை; தெரிவித்த இராணுவ வீரனே உண்மையான தேசப்பற்றாளன் என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.Posted 16 July 2008 - 03:41 AM - நன்றி யாழ் இணைய இதழ்)
இதோ ராஜிவ்காந்தியைத் துப்பாக்கியால் தாக்கும் படக்காட்சியை இங்கு காணலாம்.
http://www.youtube.com/watch?v=b0ikJgypnzE&feature=related
இந்தக் கட்டுரை எழுத உதவிய நூல்கள் :.
1.”விடுதலைப்புலிகள்” -ஆசிரியர் மருதன்
2.”பிரபாகரன் - ஒரு வாழ்க்கை” - ஆசிரியர் :செல்லமுத்து குப்புசாமி
3.”ராஜிவ் கொலை வழக்கு”- ஆசிரியர் : ரகோத்தமன்
4.”நிழல் வீரர்கள்” - ஆசிரியர் : பி.ராமன்
5.”யாழ் இணைய இதழ்.”
இதோ இந்தச் சுட்டி தரும் தகவல்களும் உங்களுக்கு உதவும்.
http://www.writerpara.com/paper/?p=944
....இது தொடர்பில் இன்னும் எழுதுவேன்.....