எங்களை
பார்த்தவர்களில் பலரும்
‘கொஞ்சம் அழகானவளைப்
பார்த்திருக்கலாமே’ - என்றார்கள்.
‘என் கண்ணால்’
பார்க்கத் தவறிய அவர்களுக்கு
அழகைப்பற்றி என்ன தெரியும்...?
***
கையில்
இரு ஆரஞ்சு பழங்களைத் திணித்து
சாப்பிடச்சொல்லி விட்டு
சுவைமிகு
சுளையிரண்டையும்
அவளே எடுத்துச் செல்லும்
விநோதத்தை
யாரிடம் போய் சொல்ல...?