என்னை
வீழ்த்தும் ஆயுதம் செய்ய
பத்து மாதம் தேவையாய் இருந்திருக்கிறது
என் அத்தைக்கு
அந்த
ஆயுதத்தைக் கூர் தீட்ட
எண்ணிரண்டு ஆண்டுகள்
தேவையாய் இருந்திருக்கிறது
காலத்திற்கு
அந்த
ஆயுதத்திற்கு என்னை இரையாக்க
ஒரேயொரு நொடிதான் தேவையாய் இருந்தது
காதலுக்கு.
வீழ்த்தும் ஆயுதம் செய்ய
பத்து மாதம் தேவையாய் இருந்திருக்கிறது
என் அத்தைக்கு
அந்த
ஆயுதத்தைக் கூர் தீட்ட
எண்ணிரண்டு ஆண்டுகள்
தேவையாய் இருந்திருக்கிறது
காலத்திற்கு
அந்த
ஆயுதத்திற்கு என்னை இரையாக்க
ஒரேயொரு நொடிதான் தேவையாய் இருந்தது
காதலுக்கு.
அருமை அய்யா. காதலை இப்படியும் சொல்லலாமா? மாற்றி யோசி என்பார்களே. அது இதுதானோ?
ReplyDeleteவணக்கம் அய்யா.
Deleteயுகங்கள் கடந்தும் காதலை சொல்லிக் கொண்டே இருக்கலாமே!
இனிமையான நொடி...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
வணக்கம் தனபாலன்,
Deleteவரும் நொடி இனியதே. ஆனால், கையாளும் விதத்தில் தான் இனிமையின் தொடர்ச்சி அடங்கியிருக்கிறது.
அத்தை மகள் இல்லையே என்ற வர ஏக்கம் வர வைத்து விட்டீர்களே
ReplyDeleteசொந்த அத்தைக்கு மகள் இல்லையென்றால் என்ன, காதலியின் அம்மாவை அத்தையெனக் கொள்ளலாமே ப்ரேம்.
Deleteசகோதரரே வணக்கம்!
ReplyDeleteவலைச்சர அறிமுகத்தில் கண்டு வந்தேன்.
கவிச்சரம் மணக்கக் கண்டேன்
வாழ்த்துக்களைத் இங்கு தந்தேன்.
வணக்கம். வாங்க இளமதி. தங்களின் வருகை மிகுந்த மகிழ்ச்சியளித்தது. தொடர்ந்து வாருங்கள். உங்களின் கருத்துக்களைப் பகிருங்கள்.
Deleteதகவல் தந்தமைக்கு மிக்க நன்றியும், அன்பும் தனபாலன் அண்ணா.
ReplyDelete