கரையோரம் இறங்கி
காற்றைத் தொட்டு சிலிர்த்தான்
காற்றை வாரி இறைத்தான்
காற்றினில் இறங்கி நீந்தினான்
கரையேறி துவட்டினான்
காற்றைக் கிள்ளியெடுத்து உண்டான்
காற்றை அள்ளிப் பருகினான்
படிக்கல்மேல் அமர்ந்திருக்கும்
காற்றின் அருகே அமர்ந்தான்
காற்றைத் தோள்சாய்த்து முத்தமிட்டான்
காற்றோடு கை கோத்து நடந்து
காற்றுவெளியில் தூரப்புள்ளியானான்
அவனுக்கு எல்லாமே அவள் தான்
காற்றாகிப் போனவள்
*
காற்றாகிப் போனவள்... அருமை...
ReplyDeleteஇல்லாதவளை இருப்பதற்கு உவமையாக.....
ReplyDeleteஅருமை.
காற்றில் கலந்தேன்
ReplyDeleteகாற்றோடு பறந்தேன்...
இன்கவி கண்டு...
தென்றலாய் .... காற்றானவள்
ReplyDelete