மாற்றம்
ஒன்றே மாற்றமில்லாதது.
கேட்க
நன்றாகத்தான் இருக்கிறது.
காக்கையின் கூட்டில்
குயிலின் முட்டை.
கரையான் புற்றில்
நச்சு மிகு நல்லபாம்பு
கதை கேட்டாலே
கொதிக்கிறது நெஞ்சம்.!
சட்டசபை கட்டடத்தில்
மருத்துவமனை கட்டில்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்
குழந்தைகள் நல மருத்துவமனை தொட்டில்.
சொரணையற்று கிடக்கிறோம்!
மாற்றத்தை ஏற்காவிட்டால்
மடையர்களாகிடுவோம்.
ஆகையால்
அனைத்தையும் பொத்திக்கொண்டு
அறிவாளிகளாவோம்.!
கன்னிமாரா நூலகத்தில்
தண்ணியடிக்கும் நவீன கூடரம்
வள்ளுவக் கோட்டத்தில்
கருக்கலைப்பு மருத்துவமனை
செம்மொழி பூங்காவில்
சிங்கார சுடுகாட்டு வளாகம்! - என
அரசின்
புத்தாக்கச் சிந்தனையால் - நாளும்
புது செய்தி வரும்.
செம்மறி கூட்டங்களாய் - நாமும்
சிந்தை கெட்டு வாழ்வோம்.
ஏனெனில்
மாற்றத்தை ஏற்காவிட்டால்
மடையர்களாகிடுவோம்.
