மாற்றம்
ஒன்றே மாற்றமில்லாதது.
கேட்க
நன்றாகத்தான் இருக்கிறது.
காக்கையின் கூட்டில்
குயிலின் முட்டை.
கரையான் புற்றில்
நச்சு மிகு நல்லபாம்பு
கதை கேட்டாலே
கொதிக்கிறது நெஞ்சம்.!
சட்டசபை கட்டடத்தில்
மருத்துவமனை கட்டில்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்
குழந்தைகள் நல மருத்துவமனை தொட்டில்.
சொரணையற்று கிடக்கிறோம்!
மாற்றத்தை ஏற்காவிட்டால்
மடையர்களாகிடுவோம்.
ஆகையால்
அனைத்தையும் பொத்திக்கொண்டு
அறிவாளிகளாவோம்.!
கன்னிமாரா நூலகத்தில்
தண்ணியடிக்கும் நவீன கூடரம்
வள்ளுவக் கோட்டத்தில்
கருக்கலைப்பு மருத்துவமனை
செம்மொழி பூங்காவில்
சிங்கார சுடுகாட்டு வளாகம்! - என
அரசின்
புத்தாக்கச் சிந்தனையால் - நாளும்
புது செய்தி வரும்.
செம்மறி கூட்டங்களாய் - நாமும்
சிந்தை கெட்டு வாழ்வோம்.
ஏனெனில்
மாற்றத்தை ஏற்காவிட்டால்
மடையர்களாகிடுவோம்.
நெஞ்சு பொருக்குதில்லையே இந்த நிலைகெட்ட ஜெவை பார்க்கும் போது என்றுதான் தோன்றுகிறது. நானும் தீவிரமாகவே இருக்கிறேன். அதற்கான போராட்டம் எந்த வகையில் நிகழ்ந்தாலும் அதில் கலந்துகொள்வேன். ஆனால் பூனைக்கு யார் மணிகட்டுவது என்பதுபோலத்தான் உள்ளது. யார் போராட்டத்தை முதலில் ஆரம்பிப்பது?
ReplyDeleteசெம்மறி கூட்டங்களாய் - நாமும்
ReplyDeleteசிந்தை கெட்டு வாழ்வோம்.//
செமையான தாக்குதல்....!!!
ஏனெனில்
ReplyDeleteமாற்றத்தை ஏற்காவிட்டால்
மடையர்களாகிடுவோம்.//
என்னாத்தை சொல்ல கடுப்பாதான் இருக்கு மைலார்ட்.....
நியாயமான கோவம்...
ReplyDeleteயோவ் இன்ட்லி, தமிழ் பத்து எல்லாத்துலையும் இணைச்சு விடுங்கய்யா,ஓட்டு போடவேனாமா..?
ReplyDeleteஅனைத்தையும் பொத்திக்கொண்டு
ReplyDeleteஅறிவாளிகளாவோம்.!]]
ஆனா! பாருங்க மாம்ஸு இந்த ”அறிவாளி” சொல்றாங்களே இதற்கான அர்த்தமும் மாறிவிட்டால், அவங்க என்ன செஞ்சாலும் நாம கண்டுக்கவா போறோம் ...
மருத்துமனை என்பது அவசியம் தான் அதற்க்காக இன்னொன்றை அழித்துதான் அதை உறுவாக்க வேண்டுமா...
ReplyDeleteஇது அரசின் சாதனைகள் அல்ல...
சோதனைகள்..
அனைவரது குமுறல்களையும் உங்களது சாடல்கவிதையில் காண முடிகிறது.
ReplyDeleteSupporo Super Sathriyaa ..
ReplyDeleteமாற்றம் வேணுமா ஓட்டு போடுங்க அப்படின்னு தேர்தல் கமிஷனே சொல்லும் பொழுது உஷாராயிருக்க வேணாமா
ReplyDeleteஆதங்கத்தை கொட்டி இருக்கீங்க...கவிதை எல்லோரின் உள்ளகுமுறல் !
ReplyDeleteஇன்னும் என்னவெல்லாம் நடக்க போகுது தெரியல...மக்கள் வெறும் பார்வையாளராக இருக்கும் வரை அனைத்தும் அரங்கேறும் எந்த இடைஞ்சலும் இன்றி...!!
உங்க கோவம் நியாயம் தான்... என்ன செய்ய?
ReplyDeleteஅமெரிக்காகாரன் ஒசத்தியா? ஜப்பான்காரன் ஒசத்தியா? படத்தை பாருங்க!
அனைத்தையும் பொத்திக்கொண்டு
ReplyDeleteஅறிவாளிகளாவோம் //
நானும் அறிவாளிகள் பட்டியலில்
சேர்ந்து விடுகிறேன் வேற வழி
கன்னிமாரா நூலகத்தில்
ReplyDeleteதண்ணியடிக்கும் நவீன கூடரம்
வள்ளுவக் கோட்டத்தில்
கருக்கலைப்பு மருத்துவமனை
செம்மொழி பூங்காவில்
சிங்கார சுடுகாட்டு வளாகம்!// விட்டா நீங்களே அம்மாக்கு எல்லா ஐடியாவும் குடுப்பீங்க போல..
சத்ரியன் உங்களுக்கு இவ்ளோ கோபம் வருமா?
ReplyDeleteஓட்டு குத்தியாச்சு ஹி ஹி...
ReplyDeleteஎங்கள் கோபம் உங்கள் வரிகளில்!அறிவாளிதான்!!!
ReplyDeleteஎல்லாரும் சொன்னது தான்..கவிதை செம காரம் சத்ரியன்..
ReplyDeleteஇகக்ஷ்டம் போல எதையும் இங்கு செய்யலாம் என ஒட்டு போட்டு தேர்ந்தெடுத்தவர்களை மடையர்கள் என்று நினைக்கும் அவர் எண்ணத்தை என்னவென்று சொல்வது?தமிழ் கூறும் தமிழ்நாடு இதை முறியடிக்க வேண்டும். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஆதங்கக் கவிதை அருமை
ReplyDeleteஇவர்களைப் பொறுத்தவரையில்
ReplyDeleteவெள்ளைக்காக்கா பறக்குத்துன்னா...
ஆமா.. ஆமா....
சொல்லிக்கவேண்டியதுதான்...
மடையர்களாய் இருந்தோம்.,இருக்கிறோம்,,இருப்போம்!
ReplyDeleteஅருமையாகச் சொன்னீர்கள் சகோ .மாற்றம் என்பதும்சிலவிடயங்களில் அவசியம் என்பதை மக்கள் உணரவே
ReplyDeleteவேண்டும் .உணராத வாழ்வு உதவாமலே போகும் .அருமை!...வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு ...
எல்லாத்துக்கும் தலையாட்டிப் பழகிட்டோம்ல.தலையாட்டாம போனா எங்களுக்குப் பேரை மாத்திடுவாங்க சத்ரியன் !
ReplyDeleteசற்று உடல் பெற்றுள்ளேன் அன்று
ReplyDeleteதாங்கள் தொலை பேசியில் பேசியபோது தான் நான் மருத்துவ
மனையில் அனுமதிக்கப் படுகிறேன்
நன்றி தங்கள் அன்புக்கு
சரியான சாட்டையடி தங்கள் கவிதை! நானும் ஒன்று எழுதியுள்ளேன்
காண்க!
புலவர் சா இராமாநுசம்
செம்மறி கூட்டங்களாய் - நாமும்
ReplyDeleteசிந்தை கெட்டு வாழ்வோம்.
ஏனெனில்
மாற்றத்தை ஏற்காவிட்டால்
மடையர்களாகிடுவோம்.
சமூக அவலத்தைப் அழகாகப் பதிவு செய்துவிட்டீர்கள் கவிஞரே..
நானும் கொஞ்சம் சிந்திக்க ஆரம்பிச்சிட்டேன் நண்பா..
ReplyDeletehttp://gunathamizh.blogspot.com/2011/11/blog-post_04.html
தறிகெட்டு அர்ச்சனை துதிக்கும் கயவர்கள் இருக்கும் varai
ReplyDeleteஇந்த அறிவிப்புகள் தொடரும் ...
நீங்கள் கூறிய அனைத்தும் நடந்தேறிடும் அண்ணே ..
அநியாய மாற்றத்திற்கு துணை போகும் சொம்பு தூக்கிகள்
முதலில் களைய படவேண்டும் ..
சம்யதாய பிணிகள் களையப்படவேண்டும் .. அண்ணே,,
ReplyDeleteமாற்றங்கள் தேவை ,, ... மன்னிக்கபாடா மாற்றங்கள் தேவை இல்லை ,.,.
மாற்றத்தை ஏற்காவிட்டால்
ReplyDeleteமடையர்களாகிடுவோம்.
>>’
ரசித்த வரிகள்
“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
ReplyDeleteவருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
வேண்டாம் ஐயா இந்த வலைபூக்களில் எங்களின் மாற்றத்தை கொச்சைப் படுத்துகிறார்கள் எனவே இதற்கும் ஒரு தடை கொண்டு வந்து விடபோகிரார்கள் சிறப்பான வரிகள் உண்மையில் போய் சேரவேண்டிய வர்களுக்கு போய் சேரவேண்டும் பாராட்டுகள் .
ReplyDeleteஏனெனில்
ReplyDeleteமாற்றத்தை ஏற்காவிட்டால்
மடையர்களாகிடுவோம்.
ரசித்தேன் சத்ரியன்
மாற்றத்தை ஏற்காவிட்டால்
ReplyDeleteமடையர்களாகிடுவோம்.//
மாற்றத்தை ஏற்றாலும் மடையர்களாகத்தான் இருக்க போகிறோம்... என்ன செய்ய... உங்களது ஆதங்க கோபக் கவிதை ஏற்க வேண்டியது நண்பரே!
சாட்டையை இன்னும் சுழட்டியிருக்கலாம் அண்ணே...
ReplyDelete