Nov 16, 2011

நூலிழை தவம்




அவளுக்கு பிடிக்காத ஒன்றை
அவளுக்கு பிடித்த சொல் கொண்டு
விளக்கியதும்
புன்னகையுடன்
தலை சாய்த்துக் கொண்டாள், தோளில்.

உயிர்ச்செல்கள் கூசியது
ஆனாலும் என்ன,
தோழிக்கில்லாத உரிமையா?!

***


இலக்கியத்தை
மொழி பெயர்த்தல் போல
எளிதாய் இருந்து விடுவதில்லை

அவள் பேசும்
சொற்களை மௌனப் படுத்தலும்
மௌனத்தை சொல் படுத்தலும்!

***

கழைக்கூத்தாடியின்
கயிற்று நடை தான்
ஆண் பெண் தோழமை.

நூலிழை இடைவெளியை
நூதனமாய் கையாளத் தவறி
இடறி விழும் தருணத்திற்காய்
வாய் பிளந்து காத்திருக்கிறது

துரோகம் அல்லது காதல்
என்னும் முதலை!


52 comments:

  1. // கழைக்கூத்தாடியின்
    கயிற்று நடை தான்
    ஆண் பெண் தோழமை.

    நூலிழை இடைவெளியை
    நூதனமாய் கையாளத் தவறி
    இடறி விழும் தருணத்திற்காய்
    வாய் பிளந்து காத்திருக்கிறது

    துரோகம் அல்லது காதல்
    என்னும் முதலை!//


    முத்தான முடிவு-கவிதை
    முத்தமிழின் வடிவு
    சத்தான பொருள்நயம்-நல்
    சரியான சொல்மயம்

    முதல்மறுமொழி முதல்
    ஓட்டு!

    புலவர் சா இராமாநுசம்






    புலவர்சா

    ReplyDelete
  2. ////கழைக்கூத்தாடியின்
    கயிற்று நடை தான்
    ஆண் பெண் தோழமை.////

    ஆண் பெண் நட்புக்கு அற்புதமான விளக்கம் பாஸ்

    ReplyDelete
  3. மூன்றாவது மிக அருமை சத்ரியன்

    ReplyDelete
  4. அருமை அருமை
    கழைக் கூத்தாடியின் லாவகம்
    நல்ல வித்தியாசமான சிந்தனை
    ரசித்துப் படித்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. //அவளுக்கு பிடிக்காத ஒன்றை
    அவளுக்கு பிடித்த சொல் கொண்டு
    விளக்கியதும்
    புன்னகையுடன்
    தலை சாய்த்துக் கொண்டாள், தோளில்.//

    மாமியாரைப் போலவே அன்பாக இருக்கிறாய் என்று சொன்னீர்களாக்கும்

    :)

    ReplyDelete
  6. //இலக்கியத்தை
    மொழி பெயர்த்தல் போல
    எளிதாய் இருந்து விடுவதில்லை
    //

    Not true.

    //துரோகம் அல்லது காதல்
    என்னும் முதலை//

    Excellant.

    Perumal

    ReplyDelete
  7. இலக்கியத்தை
    மொழி பெயர்த்தல் போல
    எளிதாய் இருந்து விடுவதில்லை
    அவள் பேசும்
    சொற்களை மௌனப் படுத்தலும்
    மௌனத்தை சொல் படுத்தலும்!

    -எக்ஸலண்ட் சத்ரியன் சார்... மிக ரசித்தேன் இந்த வரிகளை...

    ReplyDelete
  8. கழைக்கூத்தாடியின்
    கயிற்று நடை தான்
    ஆண் பெண் தோழமை.///

    ஆகா.... தத்துவத்தை அருமையா சொல்லி இருக்கீங்க.


    நம்ம தளத்தில்:
    பேஸ்புக், டிவிட்டர், கூகிள் ப்ளஸ், RSS - நமது தளங்களில் வைப்பது எப்படி?

    ReplyDelete
  9. அது இது எதுவென எதைக்குறிப்பிட்டு சொல்ல சத்ரியன்.. நிதர்சணம் சொல்லும் கவிதைகள் ம்ம் இந்த சலனங்கள் தோன்றி மறையும் என்பது மறுக்க இயலாது...

    ReplyDelete
  10. அவளுக்கு பிடிக்காத ஒன்றை
    அவளுக்கு பிடித்த சொல் கொண்டு
    விளக்கியதும்
    புன்னகையுடன்
    தலை சாய்த்துக் கொண்டாள், தோளில்.//

    கஷ்ட்டம்தான்யா....

    ReplyDelete
  11. கழைக்கூத்தாடியின்
    கயிற்று நடை தான்
    ஆண் பெண் தோழமை.//

    மிகசரியாக சொன்னீர் மக்கா, அனுபவத்தில் சொல்கிறேன் இதுதான் உண்மையும் கூட....!!!

    ReplyDelete
  12. நூலிழை இடைவெளியை
    நூதனமாய் கையாளத் தவறி
    இடறி விழும் தருணத்திற்காய்
    வாய் பிளந்து காத்திருக்கிறது

    துரோகம் அல்லது காதல்
    என்னும் முதலை!
    //

    ஹா சும்மா நச்சுன்னு சொல்லிட்டீங்க...!!!

    ReplyDelete
  13. துரோகம் பற்றிய கவிதை கலக்கல் நண்பா..பெரும்பாலும் கொடுமைகள் சமூகத்தில் நிகழ்வது துரோகம் என்ற ஒன்றால் தான்.. கவிதைகள் அனைத்தும் அழகு... அருமை நண்பா.

    ReplyDelete
  14. //அவள் பேசும்
    சொற்களை மௌனப் படுத்தலும்
    மௌனத்தை சொல் படுத்தலும்!//

    நெசந்தானுங் சாமீ..

    என்னமோ போங்க யூத்தபில் கவிஞரே.

    ReplyDelete
  15. //கழைக்கூத்தாடியின்
    கயிற்று நடை தான்
    ஆண் பெண் தோழமை.//
    ஆஹா ரசித்தேன் சத்ரியன்.

    ReplyDelete
  16. இலக்கியத்தை
    மொழி பெயர்த்தல் போல
    எளிதாய் இருந்து விடுவதில்லை

    அவள் பேசும்
    சொற்களை மௌனப் படுத்தலும்
    மௌனத்தை சொல் படுத்தலும்

    Beautiful

    ReplyDelete
  17. முதல் இரண்டும் தங்களின் ஆழ்ந்த அனுபவங்களாக இருக்கும் என்று எண்ணுகிறேன் ,,'
    மூன்றாவது சிப்பி உடைத்த முத்தாய் பளிச்சென்று நெஞ்சுக்குள் ஒட்டிக்கொள்கிறது அண்ணே .. வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்,.,.,.

    ReplyDelete
  18. அநியாயத்துக்கு இப்படி அசத்திறீங்களே மச்சான். அப்பா அந்த மொழிபெயர்ப்பு அருமை என்றால், கழைக்கூத்தாடி அருமையோ அருமை!

    ReplyDelete
  19. அவளுக்கு பிடிக்காத ஒன்றை
    அவளுக்கு பிடித்த சொல் கொண்டு
    விளக்கியதும்
    புன்னகையுடன்
    தலை சாய்த்துக் கொண்டாள், தோளில்.\\\\\\\

    அப்படியென்ன மந்திரம் தலைவா?
    இதைத்தான்”மதி”யை மயக்கவைப்பதென்பதும்,
    மதிமயங்குவதென்பதும்இதுதானோ!

    கைவசம் ரொம்பதான் கலைகள்
    வைத்திருக்கிறீர்கள் போலும்,உங்கள்
    கை வசம் வர........

    உயிர்ச்செல்கள் கூசியது
    ஆனாலும் என்ன,
    தோழிக்கில்லாத உரிமையா\\\\\
    செய்வதையும் செய்துவிட்டு
    இப்படியொரு”பூச்சு” தேவையா?
    சாயம் வெளுக்காமல் இருந்தால் சரிதான்!

    ReplyDelete
  20. இலக்கியத்தை
    மொழி பெயர்த்தல் போல
    எளிதாய் இருந்து விடுவதில்லை

    அவள் பேசும்
    சொற்களை மௌனப் படுத்தலும்
    மௌனத்தை சொல் படுத்தலும்\\\\\

    ரொம்பதான் பாடப் புத்தகங்களைப் புரட்டிப்,பார்த்து
    படித்துக்”கொடுத்து” வாத்தியார் வேலைபாத்திருக்கிறீர்கள்
    போலும்!

    ReplyDelete
  21. கழைக்கூத்தாடியின்
    கயிற்று நடை தான்
    ஆண் பெண் தோழமை.

    நூலிழை இடைவெளியை
    நூதனமாய் கையாளத் தவறி
    இடறி விழும் தருணத்திற்காய்
    வாய் பிளந்து காத்திருக்கிறது

    துரோகம் அல்லது காதல்
    என்னும் முதலை\\\\\\


    உண்மையாக....நான் வம்புக்குவரமாட்டேன்
    உண்மையாகவே அருமையாய் இருக்கிறது

    ReplyDelete
  22. எல்லாருமே சொல்லிட்டாங்க.மனவிழி என்ன சொன்னாலும் பொய்யில்லை.அந்தக் கண் அப்பிடி.ஏன்னா எல்லாம் சொந்த அனுபவமல்லோ. !.

    ReplyDelete
  23. //முத்தான முடிவு-கவிதை
    முத்தமிழின் வடிவு
    சத்தான பொருள்நயம்-நல்
    சரியான சொல்மயம்

    முதல்மறுமொழி முதல்
    ஓட்டு!

    புலவர் சா இராமாநுசம்//

    வணக்கம் ஐயா,

    உங்களின் வருகையே பெருமை தான் எனக்கு.

    ReplyDelete
  24. //////கழைக்கூத்தாடியின்
    கயிற்று நடை தான்
    ஆண் பெண் தோழமை.////

    ஆண் பெண் நட்புக்கு அற்புதமான விளக்கம் பாஸ்//

    வாங்க K S S R,

    மிகுந்த எச்சரிக்கையாய் இருக்கவேண்டிய இடம் பாஸ். அதான்!

    ReplyDelete
  25. //மூன்றாவது மிக அருமை சத்ரியன்//

    உணர்ந்ததுங்க சரவணன்.

    ReplyDelete
  26. வாங்க ரமனி ஐயா.

    உங்கள் போன்றோரின் ஊக்கம் நல்லனவற்றை எழுதத் தூண்டுகிறது.

    ReplyDelete
  27. //மாமியாரைப் போலவே அன்பாக இருக்கிறாய் என்று சொன்னீர்களாக்கும் //

    கோவியண்ணே,

    இப்படியுமா யோசிப்பீங்க.

    ( நான் மனைவிய சொல்லலீங்களே!)

    ReplyDelete
  28. ////இலக்கியத்தை
    மொழி பெயர்த்தல் போல
    எளிதாய் இருந்து விடுவதில்லை
    //

    Not true.//

    வாங்க பெருமாள் சார்,

    இலக்கியத்தை மொழி பெயர்த்தலின் சிரமம் தெரியும், அதைவிட சிரமம் நான் சொல்லவந்திருப்பது.

    //துரோகம் அல்லது காதல்
    என்னும் முதலை//

    Excellant.//

    அனுபவம் சாமீ அனுபவம்!

    ReplyDelete
  29. //இலக்கியத்தை
    மொழி பெயர்த்தல் போல
    எளிதாய் இருந்து விடுவதில்லை
    அவள் பேசும்
    சொற்களை மௌனப் படுத்தலும்
    மௌனத்தை சொல் படுத்தலும்!

    -எக்ஸலண்ட் சத்ரியன் சார்... மிக ரசித்தேன் இந்த வரிகளை...//

    வாங்க கணேஷ் சார்,

    எல்லோருக்கும் அனுபவம் இருக்கு போல.

    ReplyDelete
  30. //கழைக்கூத்தாடியின்
    கயிற்று நடை தான்
    ஆண் பெண் தோழமை.///

    ஆகா.... தத்துவத்தை அருமையா சொல்லி இருக்கீங்க.//

    பிரகாஷ் அண்ணே,

    அதனோட கஷ்டம் அனுபவிச்சு பாத்தாத்தானே தெரியுது.

    ReplyDelete
  31. //அது இது எதுவென எதைக்குறிப்பிட்டு சொல்ல சத்ரியன்.. நிதர்சணம் சொல்லும் கவிதைகள் ம்ம் இந்த சலனங்கள் தோன்றி மறையும் என்பது மறுக்க இயலாது...//

    வாங்க தமிழ் மேடம்,

    சரியா தான் சொல்லியிருக்கீங்க.

    ReplyDelete
  32. //அவளுக்கு பிடிக்காத ஒன்றை
    அவளுக்கு பிடித்த சொல் கொண்டு
    விளக்கியதும்
    புன்னகையுடன்
    தலை சாய்த்துக் கொண்டாள், தோளில்.//

    கஷ்ட்டம்தான்யா....//

    மனோ அண்ணே,

    ஐ திங்க்.......சம்திங்!சம்திங்.!

    ReplyDelete
  33. //கழைக்கூத்தாடியின்
    கயிற்று நடை தான்
    ஆண் பெண் தோழமை.//

    மிகசரியாக சொன்னீர் மக்கா, அனுபவத்தில் சொல்கிறேன் இதுதான் உண்மையும் கூட....!!!//

    ஒத்துக்கிட்ட பிறகு நான் துவைக்க விரும்பல மக்கா!

    ReplyDelete
  34. //துரோகம் பற்றிய கவிதை கலக்கல் நண்பா..பெரும்பாலும் கொடுமைகள் சமூகத்தில் நிகழ்வது துரோகம் என்ற ஒன்றால் தான்.. கவிதைகள் அனைத்தும் அழகு... அருமை நண்பா.//

    வாங்க ராஜேஷ்,

    உணர்ந்தால் தப்பிக்கொள்ளலாம்.

    ReplyDelete
  35. ////அவள் பேசும்
    சொற்களை மௌனப் படுத்தலும்
    மௌனத்தை சொல் படுத்தலும்!//

    நெசந்தானுங் சாமீ.. //

    என்னங்.. மாப்ள! பாதி தான் வெளிய வருது.

    //என்னமோ போங்க யூத்தபில் கவிஞரே.//

    என்ன இது..?

    ReplyDelete
  36. ///கழைக்கூத்தாடியின்
    கயிற்று நடை தான்
    ஆண் பெண் தோழமை.//
    ஆஹா ரசித்தேன் சத்ரியன்.//

    சண்முகம் அண்ணே,

    நன்றி.

    ReplyDelete
  37. //இலக்கியத்தை
    மொழி பெயர்த்தல் போல
    எளிதாய் இருந்து விடுவதில்லை

    அவள் பேசும்
    சொற்களை மௌனப் படுத்தலும்
    மௌனத்தை சொல் படுத்தலும்

    Beautiful//

    நன்றிங்க சகோதரி.

    ReplyDelete
  38. //முதல் இரண்டும் தங்களின் ஆழ்ந்த அனுபவங்களாக இருக்கும் என்று எண்ணுகிறேன் ,,'//

    அரசன்,
    அண்ணனை இப்படி நடு வீதியில வெச்சி தான் சிரிக்க விடுவதா?

    //மூன்றாவது சிப்பி உடைத்த முத்தாய் பளிச்சென்று நெஞ்சுக்குள் ஒட்டிக்கொள்கிறது அண்ணே .. வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்,.,.,.//

    நன்றிங்க.

    ReplyDelete
  39. //அவளுக்கு பிடிக்காத ஒன்றை
    அவளுக்கு பிடித்த சொல் கொண்டு
    விளக்கியதும்
    புன்னகையுடன்
    தலை சாய்த்துக் கொண்டாள், தோளில்.\\\\\\\

    அப்படியென்ன மந்திரம் தலைவா?
    இதைத்தான்”மதி”யை மயக்கவைப்பதென்பதும்,
    மதிமயங்குவதென்பதும்இதுதானோ!

    கைவசம் ரொம்பதான் கலைகள்
    வைத்திருக்கிறீர்கள் போலும்,உங்கள்
    கை வசம் வர........//

    அதுவொரு கலைங்க. ரகசியம்.

    //உயிர்ச்செல்கள் கூசியது
    ஆனாலும் என்ன,
    தோழிக்கில்லாத உரிமையா\\\\\
    செய்வதையும் செய்துவிட்டு
    இப்படியொரு”பூச்சு” தேவையா?
    சாயம் வெளுக்காமல் இருந்தால் சரிதான்!//

    வெளுக்கத்தான் நீங்க வந்திருக்கீங்களே! ஆத்தீ!

    ReplyDelete
  40. //அநியாயத்துக்கு இப்படி அசத்திறீங்களே மச்சான். அப்பா...!
    அந்த மொழிபெயர்ப்பு அருமை என்றால், கழைக்கூத்தாடி அருமையோ அருமை!//

    வாங்க மாப்ள,

    உண்மைய ஒத்துக்க நெஞ்சுரம் வேணும்.
    மாப்பிள்ளைக்கு இருக்கு.

    ReplyDelete
  41. //ரொம்பதான் பாடப் புத்தகங்களைப் புரட்டிப்,பார்த்து
    படித்துக்”கொடுத்து” வாத்தியார் வேலைபாத்திருக்கிறீர்கள்
    போலும்!//

    பின்னே! சும்மாவா?

    ReplyDelete
  42. //கழைக்கூத்தாடியின்
    கயிற்று நடை தான்
    ஆண் பெண் தோழமை.

    நூலிழை இடைவெளியை
    நூதனமாய் கையாளத் தவறி
    இடறி விழும் தருணத்திற்காய்
    வாய் பிளந்து காத்திருக்கிறது

    துரோகம் அல்லது காதல்
    என்னும் முதலை\\\\\\


    உண்மையாக....நான் வம்புக்குவரமாட்டேன்
    உண்மையாகவே அருமையாய் இருக்கிறது//

    உண்மையச் சொன்னா வம்புக்கு வரமாட்டீங்க தானே.

    இனிமே வரவிடாம பண்றேன்.

    ReplyDelete
  43. //எல்லாருமே சொல்லிட்டாங்க.மனவிழி என்ன சொன்னாலும் பொய்யில்லை.அந்தக் கண் அப்பிடி.ஏன்னா எல்லாம் சொந்த அனுபவமல்லோ. !.//

    ஹெலோ ஹேமா மேடம்,

    எல்லாரும் சொன்னா என்ன? நீங்க சொல்லவேண்டியதைச் சொல்லாம போனா என்ன அர்த்தம்?

    அந்தக் ’கண்’ அப்படி என்னத்தைச் செஞ்சதோ!

    என்னது? எல்லாம் சொந்த அனுபவமா..! எப்படி தான் கண்டுக்கிடறாங்கன்னு தெரியலையே!

    ReplyDelete
  44. //எல்லாருமே சொல்லிட்டாங்க.மனவிழி என்ன சொன்னாலும் பொய்யில்லை.அந்தக் கண் அப்பிடி.ஏன்னா எல்லாம் சொந்த அனுபவமல்லோ. !.//


    இந்தக் "கண்ணுல.." அப்படியென்னதான் தெரிகிறது "அந்தக்கண்ணுக்கு" நான் பார்த்தமட்டிலும் எதையும் காணோமே?

    ReplyDelete
  45. பிரமாதம் சத்ரியன். ஆண் பெண் நட்புக்கான அளவீட்டை அழகாகவே உவமை கொண்டு விளக்கியுள்ளீர்கள். இறுதிவரை இலக்கின் மேலேயே கவனம் வைத்து இறங்கிவிடுவான் கழைக்கூத்தாடி. தோளில் சாய்ந்த கணம் உறுதி உடைபட்டுவிடாமல், மெளனமோ, சொல்லோ தவறாய் மொழிபெயர்க்கப்பட்டுவிடாமல் காலமெல்லாம் விழிப்பாயிருக்கவேண்டியக் கட்டாயத்தை அழகாய்ச் சொல்லிப் போகிறது கவிதை.

    ReplyDelete
  46. சத்ரியன்,தங்களின் பதிவைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்,நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.

    ReplyDelete
  47. நல்ல கவிதைகள்.மிக நல்ல பதிவு.நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  48. நல்ல கவிதைகள்.மிக நல்ல பதிவு.நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  49. மிகவும் சிறப்பான நறுக்குகள் எளிமையான அமைப்பு பாராட்டுகள் நன்றி

    ReplyDelete
  50. ''...இலக்கியத்தை
    மொழி பெயர்த்தல் போல
    எளிதாய் இருந்து விடுவதில்லை

    அவள் பேசும்
    சொற்களை மௌனப் படுத்தலும்
    மௌனத்தை சொல் படுத்தலும்!

    ...''
    இன்னும் பல. அருமையான கருத்துகள். வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  51. நன்றாகச் சொல்லியுள்ளீர்கள் சத்ரியன்.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.