Dec 17, 2011
Nov 16, 2011
நூலிழை தவம்
அவளுக்கு பிடிக்காத ஒன்றை
அவளுக்கு பிடித்த சொல் கொண்டு
விளக்கியதும்
புன்னகையுடன்
தலை சாய்த்துக் கொண்டாள், தோளில்.
உயிர்ச்செல்கள் கூசியது
ஆனாலும் என்ன,
தோழிக்கில்லாத உரிமையா?!
***
இலக்கியத்தை
மொழி பெயர்த்தல் போல
எளிதாய் இருந்து விடுவதில்லை
அவள் பேசும்
சொற்களை மௌனப் படுத்தலும்
மௌனத்தை சொல் படுத்தலும்!
***
கழைக்கூத்தாடியின்
கயிற்று நடை தான்
ஆண் பெண் தோழமை.
நூலிழை இடைவெளியை
நூதனமாய் கையாளத் தவறி
இடறி விழும் தருணத்திற்காய்
வாய் பிளந்து காத்திருக்கிறது
துரோகம் அல்லது காதல்
என்னும் முதலை!
Aug 10, 2010
நட்பின்றி இயங்காது உலகு
நட்பின் ப(பா)லம் அடுத்த பதிவிலும் தொடரும்.....
Apr 5, 2010
யார் அந்த அவர்?
"புணர்ச்சி பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான்
நட்புஆம் கிழமை தரும். " - குறள்
“அவருடைய ஆறு மாதப் பெண்குழந்தையின் பெயர் “ மதிவதனி”. என்ன செய்வது ? என் அன்பைத் தெரிவிக்க என்னால் செய்ய முடிந்தது இதுதான்” , என்றார். நெகிழ்ந்து விட்டேன்.
அவர் எந்த எண்ணத்தில் தன் மகளுக்கு மதிவதனி என்னும் பெயர் சூட்டினாரோ அதே காரணத்திற்காகத்தான் நானும் அப்பெயரைத் தெரிவு செய்திருந்தேன்.
ஆம்! நட்பு கொள்ள ஒத்த சிந்தனையே போதும்...!
யார் அந்த அவர்?
சென்னை கே.கே. நகரில் “ டிஸ்கவரி புக் பேலஸ்” என்னும் புத்தகக்கடையின் நிறுவனரும், முதலாளியுமான இளம் தொழில் முனைவர் திரு.வேடியப்பன் அவர்கள் தான் - அந்த அவர்.
“இதென்ன பெரிய விஷயம்..?”, எனக் கேட்பது புரிகிறது. அதற்கு பதில் இதோ....
2. வளரும் எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர்.
“இதற்காகத்தானே நாங்கள் இருக்கிறோம்”, என அகமகிழ்ந்து உங்களுக்குத் தேவையான நூல்களின் பட்டியலைக் கொடுங்கள். நான் வாங்கி அனுப்பி வைக்கிறேன் என்றார். பட்டியலைச் சொன்னேன். ”நம் கடையிலேயே நீங்கள் கேட்டிருக்கும் பெரும்பாலான புத்தகங்கள் இருக்கிறது, ஒன்றிரண்டு நம் நண்பர்களிடம் பெற்று அனுப்பி வைக்கிறேன் அது என் பொறுப்பு”, என்றார்.
1. 401 காதல் கவிதைகள் - சுஜாதா
2.விஞ்ஞானச் சிறுகதைகள் - சுஜாதா
3.காமக் கடும்புனல் - மகுடேஷ்வரன்
4.விஷ்ணுபுரம் - ஜெயமோகன்
5.கன்னியாக்குமரி - ஜெயமோகன்
6.சங்கச்சித்திரங்கள் - ஜெயமோகன்
7.பாரதிதாசன் கவிதைகள் -பாரதிதாசன்
8.ராஜீவ் கொலை வழக்கு - ரகோத்தமன்
9.ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள் - நிலாரசிகன்
10.ஞானத்தின் பிரம்மாண்டன் - ஜக்கி வாசுதேவ்
11.ஆன்மீகத்தில் பொருந்தாத மறைஞானியின் சுய சரிதை- ஓஷோ
இத்துடன் என் செல்ல மகள் சாரலின்பாவிற்கும் சில புத்தகங்கள் எல்லாம் சேகரித்து எனக்கு வேண்டிய நூல்களை (தற்போது நான் பணிபுரியும்) சிங்கப்பூருக்கும், என் மகளுக்கான நூல்களை எங்கள் வீட்டிற்கும் (தமிழ் நாடு) அனுப்பி வைத்தார்.
நண்பர்களே!
என்னைப் போன்று அயல் நாட்டில் பணியில் இருப்பவரோ, அங்கேயே நிரந்தரமாய் வாழ்பவர்களோ உங்களுக்கும் விரும்பிய புத்தகங்கள் வாங்கும் தேவை இருப்பின் நீங்களும் திரு.வேடி அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள். வாங்கிப் படித்து மகிழுங்கள். அவர் தொழில் மென்மேலும் சிறக்க வாழ்த்துங்கள்....!
அவரது வலைப்பூவின் முகவரி : http://discoverytamilbooks.blogspot.com/
அவரைத் தொடர்பு கொள்ளும் முன் இங்கே சுட்டிப் பாருங்கள்.
இவை எல்லாவற்றையும் விட மிக நெருங்கிய நண்பராகி விட்டார். அதுவே எனக்கு பெருமகிழ்ச்சி.
வேடியப்பன் அவர்களைத் தொடர்பு கொள்ள:-
டிஸ்கவரி புக் பேலஸ் ,
6 மகாவீர் காம்பளக்ஸ் ,
முனுசாமி சாலை (பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்),
கேகே.நகர், சென்னை 78
தொடர்பு எண் :9884060274, 9940446650
Mar 12, 2010
நண்பனின் நண்பன் உயிர் காப்போம்
' நாடோடி ' திரைப்படம் பார்த்து , அதில் இடம் பெற்ற கதாபாத்திரங்களின் நட்பை நம்மில் பலரும் சிலாகித்திருப்போம். அப்படத்தில் ஒரு வாசகம் இடம் பெற்றிருக்கும்
“ நண்பனின் நண்பன் நமக்கும் நண்பன் ” என்று.
இன்று அவ் வசனத்தின் அவசியம் உணரவேண்டிய ஒரு அவசர தருணம்.
இங்கே செ.சரவணகுமார் சுட்டி முழு விவரங்களை அறிக.
நம்மால் இயன்றதை செய்து ஒருவரின் உயிரைக் காக்க உங்களின் வலைப்பூவிலும் இணைப்புக் கொடுக்கலாமே...!
http://saravanakumarpages.blogspot.com/2010/03/blog-post_11.ஹ்த்ம்ல்

