மரணம்
உயிரின்
இடப்பெயர்வு.
அப்பா மரணித்தபோதும்
தம்பி மரணித்தபோதும்
இருமுறை
நானும்
மரணித்திருக்கிறேன்.
நீங்களும் கூட
அதை அனுபவித்திருக்கக் கூடும்.
உயிருக்கு நெருக்கமானவரின்
மரணத்தை ஒன்றி பார்த்திருந்தால்!
மரணம்
உயிர் கொண்டாடும்
திருவிழா.
இல்லையென்றால்
எல்லா உயிர்களும்
மரணத்தை விரும்பும் மர்மம்
என்னவாக இருக்க முடியும்?
மரணத்தை விரும்பும் மர்மம்
என்னவாக இருக்க முடியும்?
அண்ணே, மரணம் கூட விரும்புமா மரணத்தை?
ReplyDeleteஅப்பா மரணித்தபோதும்
ReplyDeleteதம்பி மரணித்தபோதும்
இருமுறை
நானும்
மரணித்திருக்கிறேன்.//
ஓ கண்களில் கண்ணீர், நானும் பலமுறை மரணத்திருக்கிறேன்.
அருமை என்ற ஒற்றை இலக்க வார்த்தை தவிர, மற்றவை மரணித்து விட்டன உங்கள் கவி வரிகளில்
ReplyDeleteவரிகள்
ReplyDeleteசற்றென்று நனைத்தது
விழிகளை
உண்மைதான் கவிஞரே
நானும் உணர்ந்திருக்கிறேன்
கனத்த வரிகள்!
ReplyDeleteபல முறை மரணிக்கிறோம் ஒரு முறை மரணிக்க!
அருமையான கவிதை.
ReplyDelete//மரணம்
ReplyDeleteஉயிர் கொண்டாடும்
திருவிழா.//
வித்யாசமான சிந்தனை.
சில சமயம் எனக்கு கூட தோன்றும், நாம் எல்லோருமோ மரணத்தை நோக்கித்தான் பயணப்படுகிறோம் என்று.
அருமையான கவிதை.
//நீங்களும் கூட
ReplyDeleteஅதை அனுபவித்திருக்கக் கூடும்.
உயிருக்கு நெருக்கமானவரின்
மரணத்தை ஒன்றி பார்த்திருந்தால்!//
உண்மை...மரணத்தை நோக்கிச்செல்லுகிற வாழ்க்கையில் பலமுறை மரணிக்கிறோம்.
எதிர்பார்ப்புடன் வந்தேன். தெளிவாயிருக்கு.
ReplyDeleteஆனால் எந்த மரணமும் எந்த மனிதர்களின் குணாதிசியங்களையும் மாற்றுவதில்லையே? அதைப் பற்றி எழுதுங்க.
ReplyDeleteமா-ரணம் ...
ReplyDeleteமரணம் எல்லோருக்கும் வருமென்றாலும் பிரியமானவர்களின் பிரிவு நம்மையும் வாழும் போதே மரணிக்க செய்கிறது!!!
ReplyDeleteஉயிருக்கு நெருக்கமானவரின்
ReplyDeleteமரணத்தை ஒன்றி பார்த்திருந்தால்!//
கண்டிப்பாக சத்ரியன்
ஆழச் சிந்தித்த கவிதை வரிகள்.தவிர்க்கவே முடியாத ஒன்று !
ReplyDeleteஜனனத்தில் இருந்து
ReplyDeleteஒரு நீண்ட பயணம்
மரணத்தை நோக்கி ....
அது புரியாமல்தானே
ReplyDeleteஇத்தனை துன்பங்களும் போராட்டங்களும்
அருமையான அசத்தலான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 4
//நீங்களும் கூட
ReplyDeleteஅதை அனுபவித்திருக்கக் கூடும்.
உயிருக்கு நெருக்கமானவரின்
மரணத்தை ஒன்றி பார்த்திருந்தால்!//
உண்மை.
என் தந்தையின் மரணம் 5 வருடம் ஆகியும்
ReplyDeleteஅந்த மரணத்தின் வாசனை என்னை விட்டு
இன்றும் அகலவில்லை.
//நீங்களும் கூட
ReplyDeleteஅதை அனுபவித்திருக்கக் கூடும்.
உயிருக்கு நெருக்கமானவரின்
மரணத்தை ஒன்றி பார்த்திருந்தால்!//
உண்மை தான் சத்ரியன் நீங்க சொன்ன மாதிரி எல்லாரும் மரணத்தை அனுபவித்தவர்கள் தான ஆவோம்..
//மரணம்
உயிர் கொண்டாடும்
திருவிழா.// தத்துவமா ஒரு வரி எக்சிலண்ட்..
////மரணம்
ReplyDeleteஉயிரின்
இடப்பெயர்வு./////
என்ன ஓரு அழகான வரி.....அற்புதமான கவிதை
நானும் மரணித்திருக்கிறேன் பல முறை.
ReplyDeleteஉயிரின் இடப்பெயர்வு மரணம்
அருமை நண்பா .
//மரணம்
ReplyDeleteஉயிர் கொண்டாடும்
திருவிழா.//
மரணத்தைப்பற்றி இப்படிகூட சொல்ல முடியுமா?
ரொம்ப எளிமையா சொல்லிட்டீங்கண்ணே அருமை....
உங்கள் வரிகளை படிக்கும்போது தத்துவஞானி சாக்ரடீஸ் சொன்ன....
"மரணத்தைப் பற்றி கவலைப்படாதே நீ இருக்கும்வரை மரணம் வரப்போவதில்லை, அது என்னவென்று உனக்கு தெரியாது அது வந்தபோது நீயே இருக்கப்போவதில்லை பிறகு ஏன் கவலை”
இந்த வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது.
இல்லையென்றால்
ReplyDeleteஎல்லா உயிர்களும்
மரணத்தை விரும்பும் மர்மம்
என்னவாக இருக்க முடியும்?// அட என்னவொரு தேர்ந்த வரிகள்., அசத்தல் நண்பா..
ஏன் இப்படி பீதியை கிளப்புகிறீர்கள் மாப்பு!
ReplyDeleteஆழ்மன உயிர்த்தேடல் அருமை..
ReplyDeleteபிறப்பும், இறப்பும்..
ReplyDeleteவிழிப்பதும், தூங்குவதும் போல இயல்பானது என்பர் வள்ளுவர்..
பிறப்பைப் போல இறப்புக்கும் மதிப்பு உண்டு..
அதனை அழகாகச் சொன்னீர்கள் கவிஞரே..
உயிரின் இடப்பெர்யர்வு ...
ReplyDeleteநம்மை நசுக்கி கசக்கும் பெரும்துயரம் ..
நல்ல வரிகளில் இயல்பான கவிதைக்கு என் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் அண்ணே
இதோ இந்த உயிரின் கதறலையும் கேளுங்க
ReplyDeleteநண்பா...
http://gunathamizh.blogspot.com/2011/10/blog-post_21.html
>>நீங்களும் கூட
ReplyDeleteஅதை அனுபவித்திருக்கக் கூடும்.
உயிருக்கு நெருக்கமானவரின்
மரணத்தை ஒன்றி பார்த்திருந்தால்!
குட் ஒன்
எல்லா உயிர்களும்
ReplyDeleteமரணத்தை விரும்பும் மர்மம்
என்னவாக இருக்க முடியும்?\\\\\\\\\\
அநியாயம்,அட்டூழியம்,கொலைவெறி,இனவெறி
நடக்கும் நாடுகளில்,,,...
விரும்பாமலே உயிர்களெல்லாம் மடியவைக்கப்பட்டன,
படுகின்றன பூக்களும்,பிஞ்சுகளும்.
பல,பல,பல...முறைகள் உயிர் போயும்.....
வாழ்ந்துகொண்டிருக்கும், அந்தப்பறவைபோல் நானும்...
தென்றலில் பின்னோட்டமும் வாழ்க்கைமுறையில்
அடங்கும் சிலருக்கு...
மனம் தொட்ட வரிகள்
ReplyDeleteத.ம 11
மரணம் சிலருக்கு மகா ரணம்.. அன்பு.
ReplyDeleteசிலருக்கு மாந்தோரணம்..( பிடிக்காதவருக்கு) ஆத்திரம்.
மொத்தத்தில் மரணம் உடலுக்கு ஆத்மாவுக்கு?
மரணம் என்று ஒன்று இருப்பதையே மறந்துவிடும் மாக்கள்... அன்பானவர்களின் பிரிவால் மனம் அடிக்கடி மரணிக்கிறது வலியுடன்.
ReplyDeleteம ரணம் சோகம்தான் இன்னிக்கு நினைவு நாளா கோபால்..
ReplyDeleteநல்ல தத்துவங்கள்.
ReplyDelete'மரணம்
ReplyDeleteதனியே வந்தால் அழகு
மொத்தமாய் வரும் மரணத்தின் மீது
சுத்தமாய் மரியாதையில்லை'
வைரமுத்துவின் வரிகள் இவை. மரணம் தனியே வந்தாலும் படையாய் வந்தாலும் இழப்பின் பாரமென்னவோ என்றும் இருப்பவர்களுக்குத்தான். மனம் கொண்ட ரணம் அறிந்து நெகிழ்ந்தேன் இக்கவிதை மூலம்.
மரணம்
ReplyDeleteஉயிர் கொண்டாடும்
திருவிழா.
இல்லையென்றால்
எல்லா உயிர்களும்
மரணத்தை விரும்பும் மர்மம்
என்னவாக இருக்க முடியும்?
அடடா இதனால்த்தான் சந்தோசமான இந்த விசயத்தைவிரும்பிக் கேட்பவர்க்கு இறைவன் கொடுக்க மறுக்கின்றாரோ!...
(அட எனக்குத்தான் சகோ ஹி...ஹி ..ஹ...)அருமையான
சிந்தனை ஊற்று .வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு ....
மரணம்
ReplyDeleteஉயிர் கொண்டாடும்
திருவிழா.
கனமான பகிர்வு..
அப்பாவின் மரணத்தின்போது நானும் மரணித்திருக்கிறேன்
ReplyDelete//மாற்றத்தை ஏற்காவிட்டால்
ReplyDeleteமடையர்களாகிடுவோம்.
ஆகையால்
அனைத்தையும் பொத்திக்கொண்டு
அறிவாளிகளாவோம்.!
//
நக்கல் சார் உங்களுக்கு
கவிதையிலே கலாய்க்கிரிங்க
ReplyDelete''..மரணம்
ReplyDeleteஉயிரின்
இடப்பெயர்வு.''
நானும் 4 தடவை மரணித்துள்ளேன்.
ஒவ்வொருவர் கவிதையிலும் நாம் எத்தனையைப் படிக்கிறோம்.
வாழ்த்துகள்
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com