Oct 24, 2011

போர் எச்சரிக்கை



கவிஞனை
தீர்க்கதரிசி என்பார்கள்!

”தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்” - என,
எட்டையபுரத்து இளம்பரிதி சுட்டிய
பெரும் பிணியாம் “பசி”! 

அதை
எரித்து அழித்திட 
ஒற்றை தீக்குச்சியை
உரசக் கூட
ஒருவரும் நம்மில் - முன்
வருவதாய் இல்லை.

இதே போக்கை தொடர்வதும்
இதற்கொரு விடிவை தருவதும்
 நம் அனைவரின் கரங்களில்!

என் சொற்களை
எச்சரிக்கையாய் ஏற்றுக்கொண்டாலும் சரி.
துச்சமாய் தட்டிக்கழித்தாலும் சரி.

இன்னும்
குறுகிய காலத்தில்
உலக பசியினைப் போக்க
முயற்சிக்க மறந்தோமானால்,
மூன்றாம் உலகப்போரின்
முதல் தீப்பொறியை
ஏழைகளின் வயிற்றை எரிக்கும்
பசி தான் பற்ற வைக்கப்போகிறது.

கவனத்தில் கொள்ளுங்கள்.
காலந்தோறும் கவிஞனை
தீர்க்கதரிசி என்றே சொல்கிறார்கள்!

31 comments:

  1. உங்கள் மனவிழியிலிருந்து கிளம்பிய நெருப்புப்பொறிகளாய் வார்த்தைகள்!

    ReplyDelete
  2. பெரும் பிணியாம் “பசி”!

    அதை
    எரித்து அழித்திட
    ஒற்றை தீக்குச்சியை
    உரசக் கூட
    ஒருவரும் நம்மில் - முன்
    வருவதாய் இல்லை.]]


    :(

    உண்மை தான் ...

    ReplyDelete
  3. கவனத்தில் கொள்ளுங்கள்.
    காலந்தோறும் கவிஞனை
    தீர்க்கதரிசி என்றே சொல்கிறார்கள்!///

    ரைட்டு.
    கவிதை அருமை. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. அற்றார் அழிபசி தீர்த்தல் என்றே
    வள்ளுவனும் கூறியுள்ளார்
    உலகு இதைப் புறக் கணிக்கு மானால் உம் வாக்கு உண்மையாகும்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  5. சீக்கிரமே பசியால் வாடுபவர்களை ஒழித்து கட்டி விடுவார்கள் போல் தெரிகிறதே

    ReplyDelete
  6. அனைவரும் உணர வேண்டிய அவசியத்தை எச்சரிக்கை செய்த விதம் சிறப்புங்க அண்ணே ..
    வரிகளில் வழக்கம் போல் அனல் தெறிக்கிறது ...

    ReplyDelete
  7. உண்மையான வரிகள், நெருப்பாக வெளி வந்திருக்கிறது, உணவை வேஸ்ட் செய்யாமல் இருப்போம்.

    ReplyDelete
  8. மனதை வருடிவிட்டது.....

    ReplyDelete
  9. //மூன்றாம் உலகப்போரின்
    முதல் தீப்பொறியை
    ஏழைகளின் வயிற்றை எரிக்கும்
    பசி தான் பற்ற வைக்கப்போகிறது.//

    உண்மை.

    நல்ல எச்சரிக்கை.

    ReplyDelete
  10. அருமை அருமை..

    சிறு தீப்பொறி ஒன்று கொடு போதும்
    காட்டுத் தீயை பரவ விடுகிறேன்..

    பசியால் கொடும்பிணி தாக்கி இறக்கும் முன்
    இன்னுயிரை காத்து விடுகிறேன்.

    அழகிய நிதர்சன கவி நண்பரே.

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்...

    ReplyDelete
  12. மனதை நெகிழச் செய்த கவிதை.,

    ReplyDelete
  13. சத்ரியா...காதல் தாண்டி காலக்கவிதை.தீப்பொறி வார்த்தைகளை நினைத்தால் எதிர்காலம் பற்றிய பயம் இன்னும் கூடுகிறது !

    ReplyDelete
  14. மிகவும் உருக்கமான வேண்டுகள் .உங்கள் உணர்வுகளைக் கண்டு பெருமைகொள்கின்றேன் சகோ .வாழ்த்துக்கள் உங்கள் வேண்டுகோள் நிறைவேற .என் தளத்தில் புதிய கவிதை ஒன்று காத்திருக்கின்றது வாருங்கள்
    வந்து உங்கள் பொன்னான கருத்தைக் கூறுங்கள் .பிடித்திருந்தால்
    மறக்காமல் ஓட்டுப் போடுங்கள் .மிக்க நன்றி ஊக்குவிப்புகளிற்கு .

    ReplyDelete
  15. //கவனத்தில் கொள்ளுங்கள்.
    காலந்தோறும் கவிஞனை
    தீர்க்கதரிசி என்றே சொல்கிறார்கள்!//

    உண்மைதான்,நன்று சத்ரியன்.

    ReplyDelete
  16. நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை அண்ணே. உலக நாடுகள் ஒன்றும் கண்டுகொள்வதாய் தெரியவில்லை. சோமாலியாவில் எண்ணெய் வளம் இல்லையென்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  17. இதே போக்கை தொடர்வதும்
    இதற்கொரு விடிவை தருவதும்
    நம் அனைவரின் கரங்களில்!//

    மிக்க உண்மை நண்பரே!... கவிஞன் தீர்க்கதரசி தான்.. அனைவரும் கவனிக்க வேண்டிய கவிதை...

    ReplyDelete
  18. தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா... மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்...

    ReplyDelete
  19. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா.

    ReplyDelete
  20. இருட்டு இருட்டுன்னு புலம்பறதை விட உன்னால் முடிந்தால் ஓர் மெழுகுவர்த்தியை ஏற்று எனக்கு பிடிச்ச வரிகள் இவை

    நீங்கள் அதை சொல்லியுள்ளீர்கள் சத்ரியன்

    மூன்றாம் உலகப்போரின்
    முதல் தீப்பொறியை
    ஏழைகளின் வயிற்றை எரிக்கும்
    பசி தான் பற்ற வைக்கப்போகிறது.

    கவனத்தில் கொள்ளுங்கள்.



    உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. super

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  22. நிச்சயமாய் கவனத்தில் கொள்ள வேண்டியதுதான்.

    உங்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. //மூன்றாம் உலகப்போரின்
    முதல் தீப்பொறியை
    ஏழைகளின் வயிற்றை எரிக்கும்
    பசி தான் பற்ற வைக்கப்போகிறது.//

    //ஒற்றை தீக்குச்சியை
    உரசக் கூட
    ஒருவரும் நம்மில் - முன்
    வருவதாய் இல்லை.//

    தீர்க்கத் தரிசியின் இவ்வரிகள் நிதர்சனம்.

    தொலை நோக்குப் பார்வை கவிஞனுக்குத் தேவை என்பர். சத்ரியன்! இவ்வரிகளில் தாங்கள் அந்த ஆளுமையைப் பதிதுள்ளீர்கள்! சிந்திக்க, சீர் செய்யத் தூண்டும் அருமையான கவிதை.

    ReplyDelete
  24. உண்மைதான்.
    அருமையாகச் சொன்னீர்கள்

    ReplyDelete
  25. சத்தியமான வாசகம்
    அழகான படைப்பாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. தீப்பொறியாக பற்றட்டும் கருத்து உலகில்! உணர்வுப் பொறிகள்! உண்மை! வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  27. அடிவயிற்றில் பகீரென்கிறது, கவிதை படித்துமுடித்த கணம். இன்றே மாறட்டும் நம் மனம், பெருகட்டும் இருப்பதைப் பகிரும் குணம்.

    ReplyDelete
  28. //
    இன்னும்
    குறுகிய காலத்தில்
    உலக பசியினைப் போக்க
    முயற்சிக்க மறந்தோமானால்,
    மூன்றாம் உலகப்போரின்
    முதல் தீப்பொறியை
    ஏழைகளின் வயிற்றை எரிக்கும்
    பசி தான் பற்ற வைக்கப்போகிறது.

    //

    உண்மையான வரிகள்

    ReplyDelete
  29. கருத்துள்ள கவிதை

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.