Oct 8, 2011

தீ




ஈரைந்து புலன்கள்
இருளில் கனல்கிறது

ஒளி தராமல்
ஒலி தரும்

‘இதை’

போய்
தீ
எனச் சொல்கிறார்களே!

*

34 comments:

  1. இதில் உயிரும் உடலும் பாதி பாதி.. இதற்கு இல்லை சாதி... உச்சத்தில் மோதி... எச்சத்தில் மீதி.. உருவாகும் சேதி.. இப்படி குறில்களில் முடியும் எழுத்து ஒட்டு மொத்தமாக பாஷையின் அர்த்தமில்லாமல் நெடிலாக ' ஒலி ' எழுப்புவதால் தான் தீ என்கிறார்களோ! கவிதை சூப்பர்ர்ர்

    ReplyDelete
  2. கவிதை தீ'பிடிக்க தீ'பிடிக்க அருமையா இருக்கு...!!!!

    ReplyDelete
  3. அண்ணே... எப்படிண்ணே... ரொம்பவே கவிதை சூடா இருக்கு...

    ReplyDelete
  4. அருமையான உணர்வுள்ள கவிதை நண்பரே

    தமிழ்மணம் நாலு

    ReplyDelete
  5. ஹா வஹ் தாஜ்...இந்த விளம்பரம் மாதிரி சொல்லனும் வாவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  6. // ‘இதை’

    போய்
    தீ
    எனச் சொல்கிறார்களே!//


    தப்பு தானே!
    காமத் தீ என்று தானே
    சொல்லியிருக்க வேண்டும்!

    நன்றே நன்றே! நன்றி நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  7. அது தானே புகைந்தால் தானே தீ!?

    ReplyDelete
  8. "பற்றவைத்துக்கொண்டு"...தீ..!தீ என்றால்,பாருங்க எல்லோரும் சூடாஇருக்கு,சூடாஇருக்கு என்கிறார்கள.
    "அணைக்கவேமாட்டீர்களா?"


    ஐய்யா பெரியவரே!அந்தப் படம்.......

    ReplyDelete
  9. ‘இதை’

    போய்
    தீ
    எனச் சொல்கிறார்களே\\\\
    அப்பப்பா.... எவ்வளவு கரிசனை
    ம்ம்ம்ம.....கவலைபடாதீகோ
    சொல்பவர்கள சொல்லட்டும்
    "இதில்"விழுந்து கருகாமப்பாத்துக்குங்கோஓஓஓஓ
    உங்க..கரு..கரு..கரு நல்லாத்தான்இருக்கிறது கவிதையை சொன்னேன்டா....

    ReplyDelete
  10. //ஒளி தராமல்
    ஒலி தரும்//

    ??????

    ReplyDelete
  11. //மாய உலகம் said...
    இதில் உயிரும் உடலும் பாதி பாதி.. இதற்கு இல்லை சாதி... உச்சத்தில் மோதி... எச்சத்தில் மீதி.. உருவாகும் சேதி.. இப்படி குறில்களில் முடியும் எழுத்து ஒட்டு மொத்தமாக பாஷையின் அர்த்தமில்லாமல் நெடிலாக ' ஒலி ' எழுப்புவதால் தான் தீ என்கிறார்களோ!

    கவிதை சூப்பர்ர்ர்..//

    அப்படியும் இருக்கலாம் ராஜேஷ்.

    ReplyDelete
  12. //MANO நாஞ்சில் மனோ said...
    கவிதை தீ'பிடிக்க தீ'பிடிக்க அருமையா இருக்கு...!!!!//

    நாஞ்சில்-ண்ணா. ’இந்த’ - தீ -யை யாருக்குதான் பிடிக்காது.!

    ReplyDelete
  13. /தமிழ்வாசி - Prakash said...
    அண்ணே... எப்படிண்ணே... ரொம்பவே கவிதை சூடா இருக்கு...//

    ப்ரகாஷ்,

    வாரக்கடைசி! அதான் கொஞ்சம்...!

    ReplyDelete
  14. //M.R said...
    அருமையான உணர்வுள்ள கவிதை நண்பரே//

    நன்றிங்க M.R.

    ReplyDelete
  15. //தமிழரசி said...
    ஹா வஹ் தாஜ்...இந்த விளம்பரம் மாதிரி சொல்லனும் வாவ்வ்வ்வ்வ்வ்வ்//

    தமிழ்,

    எதுவா இருந்தாலும் டீலிங் தமிழ்-லயே இருக்கட்டும்.

    நன்றிங்க.

    ReplyDelete
  16. //புலவர் சா இராமாநுசம் said...
    // ‘இதை’

    போய்
    தீ
    எனச் சொல்கிறார்களே!//

    தப்பு தானே!
    காமத் தீ என்று தானே
    சொல்லியிருக்க வேண்டும்!

    நன்றே நன்றே! நன்றி நன்றி!//


    சின்னப்பையன்! எனக்குத் தெரியுது தப்புன்னு.

    நன்றிங்க ஐயா.

    ReplyDelete
  17. //கோகுல் said...
    அது தானே புகைந்தால் தானே தீ!?//

    அந்த தீயில “ஆவி” பறக்கும் கோகுல்.

    ReplyDelete
  18. //thendralsaravanan said...
    சூடான கவிதை!//

    இங்கே அடைமழைக்காலம், தென்றல்.

    ReplyDelete
  19. //கலா said...
    பற்றவைத்துக்கொண்டு
    "...தீ..!தீ என்றால்,
    பாருங்க எல்லோரும் சூடாஇருக்கு,சூடாஇருக்கு என்கிறார்கள.
    "அணைக்கவேமாட்டீர்களா?"//

    அட நீங்க வேற!
    தை பிறந்தால் வழி பிறக்கும்-னு நம்பியிருக்கிறேன்.

    //ஐய்யா பெரியவரே!அந்தப் படம்.......//

    அணைஞ்சி போச்சி.

    ReplyDelete
  20. //சே.குமார் said...
    கவிதை "தீ" அருமை.//

    நன்றிங்க குமார்.

    ReplyDelete
  21. // பழமைபேசி said...
    //ஒளி தராமல்
    ஒலி தரும்//

    ??????//

    வணக்கம் பழமைபேசியண்ணே,

    எதுக்கு இத்தனை கேள்வி குறிகள். தம்பிய ஒரு தட்டு தட்டினா எல்லா உண்மைகளையும் உளறிடப்போறேன்.

    அந்த ////ஒளி தராமல்
    ஒலி தரும்//-ன்னா,

    ”தீ”-யின் இயல்பு ஒளி தருவது, ஆனால் பாருங்கோ, இந்த

    ”காமத்தீ” மட்டும் (மெல்லிய முனகல்) ஒலி தருகிறதே.

    அதான் ஒரு ”டவுட்டு” வந்துருச்சி. இதையும் “தீ” பட்டியல்ல சேத்துட்டாங்களேன்னு.

    வெளக்கம் தெரிஞ்சவுங்க வெளிச்சம் போட்டு காட்டுங்க.

    ReplyDelete
  22. தீஈஈஈஈஈஈஈ...........

    ஹி ஹி ஹி... ஜூப்பரு..

    ReplyDelete
  23. ஊருக்கு டிக்கெட் எடுத்தாச்சா மாம்ஸூ

    ReplyDelete
  24. ஆழமான கருத்துகளை
    அற்புதமாய் கூறி இருக்கீங்க அண்ணே

    ReplyDelete
  25. ஒரு விவாதிக்க வேண்டிய கருத்தை நாளே வரியில் அற்புதமாய்..
    அசத்தல்..

    ReplyDelete
  26. நச்சென்று நாலு வார்த்தை திருக்குறளைப்போல்
    ஓர் அழகிய கவிதை .வாழ்த்துக்கள் சகோ .......நன்றி
    பகிர்வுக்கு .

    ReplyDelete
  27. அடடா அருமையான கவிதை

    ReplyDelete
  28. ஆகா! என்ன ஒரு மறை பொருள் கவிதை. எப்படியும் கற்பனை பண்ணலாம். வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www. kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  29. இதில் அழகா... உணர்வா... அழகியலோடு கலந்த உணர்வுக்கவிதை..

    அந்தத் தீயைக் கொழுந்து விட்டு எரியச்செய்யும் குளிர்வாடைக் க்காற்றைப்பற்றியும் எழுதலாமே சத்ரியன்..

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.