Oct 6, 2011

கார்காலம்


இருண்டு
திரண்ட
நீரிழைப்பொதி
அவிழ்ந்து சிதறியது.

நொடியில்
முளைத்து
நடை பயில்கின்றன

வண்ணவண்ணக்
காளான்கள்!

24 comments:

  1. ///நடை பயில்கின்றன

    வண்ணவண்ணக்
    காளான்கள்!///


    பலே நல்ல ரசிக்கும்படியான சிந்தனை.

    ReplyDelete
  2. கார்முகில் மழையை
    கண்டதும் உடனே
    காளான் குடையென
    கலர்கலர் குடையுடன்
    நடப்பதை சுட்டினீர்
    நன்றி!நன்றி
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  3. கருப்பும் ஒரு வண்ணம் தானோ
    ஆம் வண்ணம் தான்

    ReplyDelete
  4. வண்ணவண்ணக்
    காளான்கள்!//

    ஆஹா குடையை சூப்பரா சொல்லிட்டீங்க ம்ம்ம் சூப்பர்ப்....!!

    ReplyDelete
  5. வாங்க மனசாலி,

    கருத்து பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  6. cute one sathriyan..

    ReplyDelete
  7. வணக்கம் புலவர் ஐயா,

    தொடர்ந்த வருகைக்கும் , கருத்திற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  8. //கருப்பும் ஒரு வண்ணம் தானோ
    ஆம் வண்ணம் தான்//

    வாங்க சூர்யஜீவா,

    கருப்பு வண்ணமே தான். உதாரணத்து நம்மளையே எடுத்துக்குங்களேன்.

    மழையில் நனைந்த பனையின் நிறம்!

    ReplyDelete
  9. சிங்கையின் சீன சிட்டுக்கள்... நனைந்தபடி குடையுடன் சாலையில் குறுக்கும், நெடுக்குமாக நடக்கும் அழகைக் கண்டதும்,

    அடியேன் மனசுல “காளான்” முளைச்சிடுத்து...!

    ReplyDelete
  10. நடை பயில்கின்றன

    வண்ணவண்ணக்
    காளான்கள்!

    SUPER SATRIYAN

    ReplyDelete
  11. கலர் குடைகள் காளான்களாக காட்சி தந்த சிந்தனைக்கு பாராட்டு நண்பா...

    ReplyDelete
  12. நல்லாருக்குங்க!

    இதை யாரும் நேத்து பேஞ்ச மழையில் இன்னைக்கு முளைச்ச காளான்னு சொல்லிட முடியாது.
    இது இன்னைக்கு பேஞ்ச மழையில்
    இன்னைக்கே மொளைச்ச காளான்!

    ReplyDelete
  13. நல்ல கற்பனை.!......இல்லையில்லை நிசம்!...காளான்!. பாராட்டுகள்!
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  14. சிங்கையின் சீன சிட்டுக்கள்... நனைந்தபடி குடையுடன் சாலையில் குறுக்கும், நெடுக்குமாக நடக்கும் அழகைக் கண்டதும்,\\\\\

    ஏனுங்கோ.... சிட்டுகள மட்டுந்தான் உங்கள கண்ணில் படுமா?இல்லாவிட்டால்!சிட்டிகளைமட்டுந்தான்
    உங்கள கண் தேடுமா?

    ReplyDelete
  15. மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது. அதற்கேற்றார் போல ஒரு கவிதை. அருமை அண்ணா.

    ReplyDelete
  16. ரொம்ப அழகான கவிதை...
    ”இருண்டு
    திரண்ட
    நீரிழைப்பொதி
    அவிழ்ந்து சிதறியது”...என்ன ஒரு கவி நயம்....வார்த்தை கையாடல் அருமை!

    ReplyDelete
  17. வண்ண வண்ண காளன்களை பார்த்து ரசிப்பதர்காகவே வரவேற்கிறோம் கார் காலத்தை.

    ReplyDelete
  18. அருமையான கவிதை. நன்று.

    ReplyDelete
  19. அண்ணே அற்புத சிந்தனை .. மிகவும் ரசித்தேன் ..
    வாழ்த்துக்கள் அண்ணே

    ReplyDelete
  20. கவிதை அழகிய காட்சியாய் கண்ணில் விரிகிறது. நல்ல தேர்ந்த உவமை நயம். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  21. <> காளான் குடை இரண்டிற்கும் பொருந்தும், நல்ல கவிதை.

    ReplyDelete
  22. கார் காலத்தில் முளைத்த வண்ணக் காளான்கள் அழகிய கவி.

    ReplyDelete
  23. நடைபயிலும் வண்ண வண்ணக் காளான்கள் சிந்தனை ஊற்று அருமை சகோ !...எங்கே உங்கள் அடுத்த ஆக்கம் ?...அதைக் காண ஆவலுடன் வந்தேன் .இருப்பினும் நல்ல கவிதை வரிகளை ரசித்துச் செல்கின்றேன் .மிக்க நன்றி பகிர்வுக்கு .......

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.