Sep 29, 2011

தஞ்சாவூரு மண்ணு எடுத்து



தஞ்சாவூர்
மண் என்றில்லை,
பஞ்சாப்
மண் கொண்டும்
பொம்மை செய்யலாம்.

இத்தாலியில் இருந்தே
பொத்தானை அழுத்தி
இந்தியாவை
இயக்கி மகிழலாம்.

ஐ நா -வில்
அமர்ந்து கொண்டே
’அவனே’ காரணம் என
அப்பாவியாய்
அறிக்கை விடலாம்

கேப்பையில்
நெய் வடியும்
அரிய செய்தியுடன்
மா மா
ஊழல்
செய்தியையும்
உற்சாகமாய் ரசித்து விட்டு

வாயையும்
**த்தையும்
பொத்திக் கொண்டு
நாமெல்லாம்
வயித்து பிழைப்பை
பார்க்க போகலாம்..!

நாட்டை
பொம்மைகள்
பார்த்துக் கொள்ளும்!

***

டிஸ்கி : ’மா’ என்றால் ’பெரிய’ என்று பொருள். “மா மா” என்றால்?

 நன்றி : படம் அருளிய கூகிள் ஆண்டவருக்கு.

27 comments:

  1. படமும் படைப்பும் அருமை
    எல்லா திருடர்களும் போலீஸ் வேஷம் போட்டு
    பிரமாதமாக நடிக்கிறார்கள்
    உள்கோபம் அணையாமல் இருக்க
    இப்படிப் பதிவுகள் அடிக்கடி அவசியம் வேண்டும்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 2

    ReplyDelete
  2. hahahha...ennatha shathriyan solrathu..

    ReplyDelete
  3. படத்தின் விளக்கம் உங்கள் கவிதை சூப்பர்

    ReplyDelete
  4. இப்பவும் நாட்டை பொம்மைகள் தான் பார்த்துக்கொண்டிருக்கின்றன.

    ReplyDelete
  5. ரொம்பதான் வித்தையெல்லாம்
    காட்டுறீக,......
    சூடாத்தான் இருக்கிதுங்கோ கவி
    சக்கரையும் இல்லாமல்,பாலுமில்லாமல்..."க[டுப்}றுப்பாக".....

    ReplyDelete
  6. மா - பெரிய

    அப்ப மாமா?

    நான் கூட மாமான்னதும் சிதம்பரமோன்னு நினைச்சேன்.
    பொம்மைக் கவிதை அருமை.

    ReplyDelete
  7. வணக்கம் அண்ணே ..

    தங்களின் ஆதங்கம் புரிகிறது ..
    வாக்கு அளித்து அழகு பார்க்கும் மக்களை என்னவென்று
    கூறுவது ... அவன் தவறை தட்டி கேட்காமல் அவனுக்கு ஜால்ரா
    அடிக்கும் கயவர்கள் வாழும் கூடாரமிது...

    என்றைக்குதான் இவர்கள் உணர்ந்து ... ம்ம்ம்ம்.அதுக்குள்ள இவனுக நாட்ட
    இன்னொரு நாட்டுக்கு அடமானம் வச்சிடுவாணுக...

    ReplyDelete
  8. //மா மா ஊழல் செய்தியையும்// அதுவும் கொஞ்சமா?நஞ்சமா? நல்ல பகடி படக் கவிதை.

    ReplyDelete
  9. சாட்டை அடி
    நாக்கை பிடுங்கிக்கலாம்
    அப்படி ஒரு வரிகள்..

    ReplyDelete
  10. அசத்தல் கவிதை
    அந்த படம் சூப்பர். எங்க எடுத்தீங்க

    ReplyDelete
  11. மாமா ஆமா
    தேமா பாமா

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. கலக்கீட்டீங்க தல... என்ன பண்றது வயித்து பிழப்புக்காக நாம போயிக்கிட்டு தான் இருக்கோம்.. நம்ம வயித்துல அடிச்சுக்கிட்டே இருக்காங்க...

    ReplyDelete
  13. இது
    உண்மையில
    உண்மையில்ல

    பொம்மை!!!!

    ReplyDelete
  14. நாட்டை
    பொம்மைகள்
    பார்த்துக் கொள்ளும்!

    இது தான் அறிவியலின் வளர்ச்சியா?
    இல்லை...இல்லை....

    அறிவின் வீழ்ச்சியா?

    ReplyDelete
  15. நல்லாத்தான்
    நறுக்குன்னு
    கேட்டீங்க நண்பா..

    ReplyDelete
  16. சரியான சவுக்கு அடிதான், என்ன எந்த அரசியல் வாதிக்கும் சுரனையைத்தான் காணோம்!

    ReplyDelete
  17. சோனியா இப்படி பிடிவாதமாக இந்தியாவை தன் கைக்குள் வைத்துக்கொண்டு பொம்மையாய் மன்மோகன் சிங்கையும் வைத்துக்கொண்டு ஆட்டுவிப்பதை மிக அழகிய பொருத்தமான படத்துடன் நச் நச் நச் வரிகளுடன் எப்டிப்பா???? எப்டிப்பா???

    அருமையா சரியான நக்கல் வரிகள்பா....

    அன்பு வாழ்த்துகள் சத்ரியன் நச் வரிகளுக்கு.....

    ReplyDelete
  18. சகோதரா சத்ரியன்! உமது பக்கம் திறந்து படம் பார்த்ததும் விழுந்து விழுந்து சிரித்து விட்டேன்! அதை விட வரிகள் சொல்லவே தேவையில்லை. இந்திய அரசியல்....!!!! ஏன் இலங்கை என்ன குறைந்ததா?... ஓ! கடவுளரே!....ஆண்டவன் தான் காக்க வேண்டும். பாராட்டுகள்!
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  19. இத்தாலியில் இருந்தே
    பொத்தானை அழுத்தி
    இந்தியாவை
    இயக்கி மகிழலாம்.

    கருத்தாழ்ம் மிக்க பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  20. அந்த படத்தை பார்த்து சிப் சிப்பா வருது...

    ReplyDelete
  21. தஞ்சாவூர் பொம்மை தானாகவே தலையாட்டும் என்று தான் கேள்விப்பட்டிருக்கேன், ஆனால் இந்த மன்மோகன் பொம்மை அடுத்தவங்க ஆட்டிவிட்டால் தான் ஆடுது.

    நல்ல படைப்பு அண்ணா.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.