Sep 26, 2011

எதிரி



எதிரிலும்,சுற்றிலும்
எங்கிலும் இல்லை

உன்னுள் தேடு
கண்டு அழி
உன்னையறிதலில்
உள்ளது உலகம்.

வெளியில் உலவும்
எதிரியே - உன்
வெற்றிகளின் ஆணிவேர்
அவனை அப்படியே
இருக்க விடு...!

எச்சரிக்கையாய்
இருக்க வேண்டியது
நண்பர்களாய்
நீ
நம்பிக் கொண்டிருப்பவர்களிடமே!

ஏனெனில்,
நம்பிக்கை துரோகங்களே
நம்
வரலாறு முழுதும்
வலம் வந்தபடி இருக்கிறது.

வரலாறும் அதை
சளைக்காமல் சுமந்தபடி 
காலத்தைக் கடக்கிறது.

28 comments:

  1. ஏனெனில்,
    நம்பிக்கை துரோகங்களே
    நம்
    வரலாறு முழுதும்
    வலம் வந்தபடி இருக்கிறது.//

    அதிலும் தமிழனே தமிழனுக்கு செய்யும் துரோகம்தான் மனசை அதிரச்செய்கிறது....!!! அதற்க்கு சமகாலத்தில் வாழும் இந்த இருவரும் வரலாற்றில் எட்டப்பனாக, பாடம் படிப்பார்கள் நம் வருங்கால சந்ததியினர்....!!!

    ReplyDelete
  2. தமிழ்மணம் இணைச்சி ஒட்டும் போட்டாச்சு.

    ReplyDelete
  3. நம்பிக்கை துரோகத்திற்கு சரியான சாட்டையடி வரிகள் அமைத்த கவிதை....

    பொருத்தமான படம்....

    எப்டியெல்லாம் சிந்திக்கிறீங்க சத்ரியன்?

    உண்மையே....

    மனிதனுக்கு மனிதனே எதிரி... அவனை சுற்றி இருப்போரும் அண்டி இருப்போரும் எல்லோருமே நல்லவர்கள் நம்பகமானவர்கள் என்று நம்பும் நிலையில் இல்லை இப்போதைய காலக்கட்டம்....

    அதை நச் என்ற வரிகளால் சொல்லி சென்ற கவிதை மிக மிக அருமை சத்ரியன்.....

    கொஞ்சம் இல்ல ரொம்பவே உஷாரா இருங்கப்பா.. எந்த நேரம் என்ன வேணாலும் நடக்கலாம் உங்க முதுகிலேயே துரோகக்கத்தி செருகப்படலாம்.. அதனால் நம்பிக்கை மனதிலும் கண்களில் உஷார்த்தன்மையும் இருப்பது அவசியம்னு உணரவைத்த சபாஷ் போடவைத்த கவிதை வரிகளுக்கு அன்பு வாழ்த்துகள் சத்ரியன்...

    ReplyDelete
  4. ஓட்டு போடுவது எப்படின்னு தெரியலை. கத்துக்கிட்டு போடுவேன்பா எல்லாருக்கும்...

    ReplyDelete
  5. கவிதை அருமை

    உன்னையறிதலில்
    உள்ளது உலகம்.

    அழகான உண்மையான வரிகள்

    தமிழ் மணம் இரண்டு

    ReplyDelete
  6. //நம்பிக்கை துரோகங்களே
    நம்
    வரலாறு முழுதும்
    வலம் வந்தபடி இருக்கிறது.
    வரலாறும் அதை
    சளைக்காமல் சுமந்தபடி
    காலத்தைக் கடக்கிறது. //

    அருமை.
    படமும் கவிதைக்கு பொருத்தமாய்.

    ReplyDelete
  7. // ஏனெனில்,
    நம்பிக்கை துரோகங்களே
    நம்
    வரலாறு முழுதும்
    வலம் வந்தபடி இருக்கிறது//

    உண்மை!உண்மை! உண்மை!
    முக்காலும் உண்மை!
    தெளிவாய் சொன்னீர் உண்மை!
    தெளிவோம் அனைவரும் உண்மை!

    மேலும் நீர் வலைவழி வார
    உண்மை!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. அழகிய அற்புதமான
    உண்மை வரிகள்
    படம் நிறையச் சொல்லுகிறது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 5

    ReplyDelete
  9. வணக்கம் நாஞ்சிலாரே,

    ஒரு அதிசயத்தைப் பார்த்தீங்களா?
    தலைச்சிறந்த ஒருவருக்கும், சில தருதலைகளுக்கும் வரலாறு “ஒரே” கால கட்டத்தில் பதிவாகி விடுகிறது.

    அதை எழுதத் தூண்டியது. எழுதி விட்டேன்.

    ReplyDelete
  10. //கொஞ்சம் இல்ல ரொம்பவே உஷாரா இருங்கப்பா.. எந்த நேரம் என்ன வேணாலும் நடக்கலாம் உங்க முதுகிலேயே துரோகக்கத்தி செருகப்படலாம்.. //

    மஞ்சு மேடம்,

    ஆனைக்கும் அடி சறுக்கி விடுகிறது. பார்ப்போம்.

    ReplyDelete
  11. //ஓட்டு போடுவது எப்படின்னு தெரியலை. //

    முதலில் ஓட்டுரிமை வரட்டும்.

    ReplyDelete
  12. வணக்கம். வாங்க எம்.ஆர். அண்ணே,

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  13. வாங்க குமார்,

    எல்லாம் தெரிந்திருந்தும் நம் சமூகம் “இன்னும் கசாப்பு கடைக்காரனை”த்தான் நம்புகிறது.

    ReplyDelete
  14. வணக்கம்,

    வாங்க புலவர் ஐயா.

    ReplyDelete
  15. வாங்க ரமனி ஐயா,

    கவிதைக்கான கரு சமூகம் அருளியது.
    படம் “கூகிள்” அருளியது.

    உங்களின் கருத்திற்கு நன்றி.

    ReplyDelete
  16. ம்ம்ம்ம...கவிதையும்,படமும்
    அருமை.

    ReplyDelete
  17. சரியாக சொன்னீர்கள் சத்திரியன்... துரோகம் தான் தமிழனின் வாழ்வை தலைகீழாக்கியது..
    துரோகிகளுக்கு நல்ல சாட்டையடி இந்த கவிதை

    ReplyDelete
  18. புதுசா ஒன்னும் இல்லையா மாம்ஸு

    ReplyDelete
  19. தமிழ்மணம் ஏழாவது ஓட்டு போட்டாச்சு நண்பரே... கவிதை செம தாக்குதல்...

    ReplyDelete
  20. கூடவே இருந்து குழிபறிக்கும் குள்ளநரிக்கூட்டமும்,பசுத்தோல் போர்த்திய பன்றிகள் கூட்டமும் தமிழனைச்சுற்றி,தமிழனுக்குள்ளும் எப்போதுமே இருந்து கொண்டுதான் இருக்கிறது.கெடுக்கிறது.இனம் கண்டு ஒதுக்க வேண்டும்.பதிவின்,கவிதையின் சாராம்சம் அருமை.

    ReplyDelete
  21. ////உன்னுள் தேடு
    கண்டு அழி
    உன்னையறிதலில்
    உள்ளது உலகம்.////

    தன்னம்பிக்கை வரிகள்!! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  22. //உன்னுள் தேடு
    கண்டு அழி
    உன்னையறிதலில்
    உள்ளது உலகம்.//

    நீங்க பெரிய ஆளு சத்ரியன்.

    ReplyDelete
  23. படம் நச்!
    கவிதை நறுக்!

    ReplyDelete
  24. இந்த படத்தை எங்கிருந்து புடுச்சீங்க?

    ReplyDelete
  25. கவிதை நல்லாயிருக்கு

    ம்ம் எச்சரிக்கையை இருங்கள்
    ஆனால் தீயவர்களிடம் மட்டும்
    நேர்மையானவர்களை சந்தேகப்பட்டு
    மனதை உடைத்து விடாதீர்கள்

    ReplyDelete
  26. எச்சரிக்கையாய்
    இருக்க வேண்டியது
    நண்பர்களாய்
    நீ
    நம்பிக் கொண்டிருப்பவர்களிடமே!//

    மிக சரியாக சொல்லியுள்ளீர்கள் நண்பரே... இதை வாழ்வில் நான் உணர்ந்திருந்தால் இன்னேரம் நிறைய வாய்ப்புகள் என்னை நழுவியிருக்காது... தழுவியிருக்கும்.. கவிதையில் கலக்கலாக பகிர்ந்தீங்க நன்றி

    ReplyDelete
  27. ஏனெனில்,
    நம்பிக்கை துரோகங்களே
    நம்
    வரலாறு முழுதும்
    வலம் வந்தபடி இருக்கிறது.

    வரலாறும் அதை
    சளைக்காமல் சுமந்தபடி
    காலத்தைக் கடக்கிறது.

    உண்மைதான் நண்பா..

    நாம் வரலாற்றைப் படிப்பவராக மட்டுமே இருக்கிறோம்!!

    நம் வரலாறு படைக்கும் நாள்தான் இந்த வரலாற்று ஏடுகள் மாற்றி எழுதப்படும்!

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.