இளங்காலைப் பொழுது
தூரத்தில் ஏறியிறங்கும்
நீலம் பூத்த மலைத்தொடர்கள்
பனையோலை வேய்ந்த
பழங்குடிசை வீடு
ஈரத்தரையில் ஊர்ந்துச் செல்லும்
மரவட்டைகள்
புகை புடை சூழ மண்ணடுப்பில்
விறகெரித்துச் சமையல் செய்யும் பெண்
குப்பையைக் கிளறி
குஞ்சுகளை இரை திண்ணப் பழக்கும் கோழி
ஓடைநீரில் துண்டு விரித்து
மீன் பிடித்து விளையாடும் சிறுவர்கள்
குச்சியின் உச்சியில்
யோசனையாய்க் காத்திருக்கும் மீன்கொத்தி
தென்னங்கீற்று நுனியில்
தூளி போல் ஆடும் தூக்கணாங்கூடு
மரக்கிளையில் மறைந்தமர்ந்து
கொய்யாவைக் கொத்தும் கிளிகள்
தொங்கும் மாங்கனியை
தூரிகைப் பற்களால் கொறிக்கும் அணில்
காளைகளிரண்டை ஓட்டிக்கொண்டு
கலப்பைச் சுமந்து போகும் உழவன்
ஐந்தங்குல இடைவெளியில் அவனைப் பின் தொடர்ந்து
ஓட்டமும் நடையுமாய் செல்லும் நாய்
இப்படி
இயற்கையோடு இயைந்தே மனிதர்கள்
இன்புற்று வாழ்ந்ததற்கான அடையாளமாக
அதிசயமூட்டுகிறது
அருங்காட்சியகத்தில் ஒரு ஓவியம்.
ஆக இனி ஓவியத்தில் பார்க்கப் போகிறோம் என்பதையும் சொல்லி விட்டீர்கள்... மாறுவதற்கு முன் மா(ற்)ற வேண்டும் என்பதையும்...
ReplyDeleteதெரிந்தே தொலைப்பதை மீட்டெடுக்கவே முடியாதுங்க.
Deleteஎத்தனையோ நாளாகி விட்டது இது போலொன்று படித்து. கடைசி வரிகளின் சுருக் வலிக்கவே இல்லையே.. என்னில் என்ன கோளாறு என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
ReplyDeleteஎப்படி வலிக்கும்? நமக்குத்தான் எல்லாம் மரத்துப் போச்சே!
Deleteவணக்கம் அய்யா. நலமா? நெடுநாட்களாகி விட்டது.
அடாடா... இத்தனை இயற்கை சமீபகாலங்களில் எங்கும் கண்ணுக்கு விருந்தாகக் கிடைக்கல்லியே... தம்பி எங்க பாத்து ரசிச்சாருன்னு ஒரு எண்ணம் மனசுல ஓடிட்டிருந்துச்சு படிக்கறப்ப... கடைசி வரிகள் ‘சுருக்’ தந்தது மனசுல! இப்படியொரு நிலை இனி சாஸ்வதமானாலும் வியப்பதற்கில்லைப்பா!
ReplyDeleteஇந்த நிலையை ஏறக்குறைய நெருங்கி விட்டோம் கணேஷ் அண்ணா.
Deleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்
வலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - நான்காம் நாள்
தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா.
Delete