Jul 26, 2011

நிலாச்சோறு



 நீ 
தயாராகவே தான்
இருக்கிறாய்.

உன்னைக் காட்டி
சோறூட்ட
தாயவளுக்கு தான்
நேரமில்லை.

***

24 comments:

  1. அருமை அருமை
    பசியும் இருக்கிறது
    பசிக்கு சோறும் இருக்கிறது
    ஊட்டுவதை பார்த்துப் பசியாற
    நிலவும் காத்திருக்கு
    இவைகளை
    இணைத்து மகிழ்வு கொள்ளத்தான்
    யாருக்கும் நேரமில்லை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமை...என் வாழ்த்துக்களை பிடியுங்கள்...

    ReplyDelete
  3. பிடி நண்பா பூங்கொத்து

    வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  4. பள்ளிக்கூடமும் இருக்கின்றது
    ஆசிரியர்களும் இருக்கின்றார்கள்
    படித்திடத்தான்
    புத்தகங்கள் இல்லை

    ReplyDelete
  5. சின்ன விஷயம்.பெரிய வலி.வழிதான்....!

    ReplyDelete
  6. அவளுக்கு தான்
    நேரமில்லை.\\\\\\

    ஜயா,சாமி நேரத்தின் மேல்ப் பழியா?
    நேரம் அப்படியேதான் மெதுவாய் நகர்கிறது,
    அவளை சுறுசுறுப்பாக "நேரத்துடன்"
    போட்டி போடச் சொல்லுங்கள அப்போது எல்லாம் ஒழுங்காக நடந்தேறும் கடமைகளிலிருந்தும்
    தவறக்கூடாதென்றும் சொல்லுங்கள

    ReplyDelete
  7. //அருமை அருமை
    பசியும் இருக்கிறது
    பசிக்கு சோறும் இருக்கிறது
    ஊட்டுவதை பார்த்துப் பசியாற
    நிலவும் காத்திருக்கு
    இவைகளை
    இணைத்து மகிழ்வு கொள்ளத்தான்
    யாருக்கும் நேரமில்லை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்//

    வணக்கம் ரமணி ஐயா.

    ReplyDelete
  8. //அருமை...என் வாழ்த்துக்களை பிடியுங்கள்..//

    வணக்கம். முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

    உங்களது உரிமையான வாழ்த்தினை கைகளில் ஏந்திக்கொண்டேன் நண்பா.

    ReplyDelete
  9. //பிடி நண்பா பூங்கொத்து //

    நன்றி விஜய்.

    ReplyDelete
  10. //அருமை..//

    நன்றிங்க குமார்.

    ReplyDelete
  11. //தமிழரசி said...
    class one ya...//

    நன்றிங்க தமிழ்.

    ReplyDelete
  12. //பள்ளிக்கூடமும் இருக்கின்றது
    ஆசிரியர்களும் இருக்கின்றார்கள்
    படித்திடத்தான்
    புத்தகங்கள் இல்லை//

    மாப்ள,

    பின்னூட்டமே
    இப்பிடி எதிர் கவுஜயா எழுதினா எப்பிடி?

    ReplyDelete
  13. //சின்ன விஷயம்.பெரிய வலி.வழிதான்....!//

    பிழைப்புக்காக பிள்ளைகளைத் தவிர்க்கும் சூழலில் உலகம்.

    வழிதான்..! எனக்கும் தெரியவில்லை.

    ReplyDelete
  14. //அவளுக்கு தான்
    நேரமில்லை.\\\\\\

    ஜயா,சாமி நேரத்தின் மேல்ப் பழியா?
    நேரம் அப்படியேதான் மெதுவாய் நகர்கிறது,
    அவளை சுறுசுறுப்பாக "நேரத்துடன்"
    போட்டி போடச் சொல்லுங்கள அப்போது எல்லாம் ஒழுங்காக நடந்தேறும் கடமைகளிலிருந்தும்
    தவறக்கூடாதென்றும் சொல்லுங்கள்//

    நான் தாயைக் குறிப்பிட்டிருக்கிறேன் காலா.

    ReplyDelete
  15. உண்மைதான் யாருக்குமே நேரமில்லை இப்போது கோபால்..:(((

    ReplyDelete
  16. சில வார்த்தைகளில் யதார்த்தம்.அருமை.

    ReplyDelete
  17. பதிவிடுவதற்கே நேரமில்லை... பின்னே எங்கே சோறூட்டுவதற்கு நேரம்....

    ReplyDelete
  18. இயந்திரமயமாகிப் போன வாழ்க்கை முறையின் அவலத்தை இரண்டே வரிகளில் சொல்லிப் போகிறது கவிதை நறுக்கென்று.
    மற்ற கவிதைகளும் அருமை.

    ReplyDelete
  19. மண்வாசனை கிராமங்களிலும்
    சிறுகச் சிறுகச் குறைகிறது
    பிள்ளைக்கு தாய் ஊட்டும்
    நிலாச் சோறு

    சிதர்சனமான வரிகள் தோழரே
    என் வாழ்த்துக்களையும் எடுத்துக் கொள்ளுங்கள்

    ReplyDelete
  20. ஓரிரு வரிகளால் உணர்த்திய
    வலிதரும் உண்மை வரிகள்
    அருமை!...வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. யதார்தத்தின் உண்மைகள் அழகிய வரிகளில்.
    உங்களை முத்தான மூன்று பதிவை எழுத அழைத்திருக்கிறேன். பார்க்கவும் எனது இன்றைய பதிவு

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.