Jul 5, 2011

குழப்ப தெய்வம்



காற்றுக்கு அசையும்
நாற்றினைப் போல்
உன்
கூற்றுக்கு அசைந்தபடியே


என் ஜீவன்!

*
*
*
 நேர்த்திக்கடன் செலுத்த
கோயிலுக்குப் புறப்பட்டோம்.
கூடவே 
உன் நினைவும்...

குழப்பத்தில்
குலதெய்வம்!


36 comments:

  1. குழதெய்வம் ஆணா பெண்ணா?

    ReplyDelete
  2. நல்லாருக்குண்ணே, வரிகளுக்கேற்ப படமும் அருமை....

    ReplyDelete
  3. உன்
    கூற்றுக்கு அசைந்தபடியே\\\\\


    அது என்ன கூற்றென்று !

    இந்த அசைவு அசைகிறீக....

    ReplyDelete
  4. நேர்த்திக்கடன் செலுத்த
    கோயிலுக்குப் புறப்பட்டோம்.\\\\
    இந்தப் புறப்பட்டோம்.
    யாருடன் ?கூடவே இங்கொன்று வருகிறது.....
    சரி,,,,



    கூடவே
    உன் நினைவும்...\\\\\
    அது கூடப் போகும் போது
    அதென்ன! இன்னொன்றின் நினைவு?



    குழப்பத்தில்
    குலதெய்வம்!\\\\
    ஆமா...ஒன்றுமாறி ஒன்றென்றால்......
    பாவம் குல தெய்வம் அதுதாய்யா
    வீட்டுக்காரம்மா
    குழப்பத்தில் இருக்காமல் வேறு
    எப்படித்தான் இருப்பார்கள்!!

    ReplyDelete
  5. சட்டுப்புட்டென்று அலசிக் கழுவி
    காயவைத்து இஸ்திரி போட்டு
    இனிமேல் குழம்பாமல்...குழப்பாமல்
    பத்திரமாக வைத்திருங்கோ உங்க
    மனசை!!

    ReplyDelete
  6. படங்கள் ,கவிதை சூப்பர்!

    ReplyDelete
  7. சத்ரியன்,சுத்தமா சரண்டர் ஆயிட்டீங்க போல!நறுக்கென்று நல்ல கவிதை.

    ReplyDelete
  8. first one class..

    2 வது குல தெய்வத்தையே குழப்பிய காதலே நீ வாழ்க..

    ReplyDelete
  9. கண்ணழகரே....நல்ல கூத்துத்தான்.நீங்களே இப்பிடிக் குழம்பினா குலதெய்வம் பாவம் குழம்பாம.....அதுக்கு என்ன தேரியும்!

    கலா...நோண்டி நோண்டி இப்பிடியெல்லாம் சொல்லப்படாது.
    பாவம்ல குலதெய்வம்!

    ReplyDelete
  10. நல்லா இருக்குங்க...

    ReplyDelete
  11. என்னமோ போங்க... ஒரு பொண்ண பெத்தவரு மாதிரியா எழுதிறீங்க.. இதுல லேபிள் லவ்வாம்ல..

    நைஸ்..

    ReplyDelete
  12. காற்றுக்கு அசையும் நாற்று நல்ல உவமை
    ஒத்துப்போதல் கூட அத்தனை நளினமாய்
    இயல்பாய் என்பது அருமையான கற்பனை
    ஒருவேளை வேண்டுதலும் அவள் நினைவும்
    முரண்பட்டிருக்குமோ?
    இல்லையேல் கடவுள் குழம்ப சந்தர்ப்பம் இல்லையே!
    அதுதான் கொஞ்சம் குழப்புகிறது
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. //குலதெய்வம் ஆணா பெண்ணா?//

    மாப்ள,

    ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கீங்க. வந்தனம்.

    மொதல்ல வந்த நீங்களே இப்படி ஏடா கூடமா கேள்வி கேட்டா, இன்னும் வரவிருக்கிறவங்க சும்மா போவாய்ங்களா?

    மேற்கொண்டு இல்ல கேட்டு வெப்பாய்ங்க.

    ReplyDelete
  14. //நல்லாருக்குண்ணே, வரிகளுக்கேற்ப படமும் அருமை....//

    வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிங்க வாத்தியாரே!

    ReplyDelete
  15. // கலா said...
    உன்
    கூற்றுக்கு அசைந்தபடியே\\\\\


    அது என்ன கூற்றென்று !

    இந்த அசைவு அசைகிறீக....//

    கலா,

    அதாவது, அது வந்து...அது வந்து... அட பொண்டாட்டி என்ன சொன்னாலும், கேட்டு பயந்து நடந்துக்கறது.

    ReplyDelete
  16. கலா said...
    நேர்த்திக்கடன் செலுத்த
    கோயிலுக்குப் புறப்பட்டோம்.\\\\
    இந்தப் புறப்பட்டோம்.
    யாருடன் ?கூடவே இங்கொன்று வருகிறது.....
    சரி,,,,

    கூடவே
    உன் நினைவும்...\\\\\

    அது கூடப் போகும் போது
    அதென்ன! இன்னொன்றின் நினைவு?//

    கலா இப்பிடியெல்லாம் ஆராய்ச்சி பன்ணப்பிடாது. ரசிக்கக் கத்துக்கணும். ஆமா!

    ReplyDelete
  17. //குழப்பத்தில்
    குலதெய்வம்!\\\\

    ஆமா...ஒன்றுமாறி ஒன்றென்றால்......
    பாவம் குல தெய்வம் அதுதாய்யா
    வீட்டுக்காரம்மா
    குழப்பத்தில் இருக்காமல் வேறு
    எப்படித்தான் இருப்பார்கள்!!//

    கலா,

    குலதெய்வத்தோட குழப்பம் என்னன்னா,

    நமக்குத் தெரிய ஒருத்தியத்தானே கல்யாணம் கட்டினான். இப்ப என்ன(பழைய) நெனைப்புல வேற ஒருத்தியையும் சேத்து அழைச்சிக்கிட்டு வர்ரானே!-அப்படின்னு குழப்பம்!

    ReplyDelete
  18. // கலா said...
    சட்டுப்புட்டென்று அலசிக் கழுவி
    காயவைத்து இஸ்திரி போட்டு
    இனிமேல் குழம்பாமல்...குழப்பாமல்
    பத்திரமாக வைத்திருங்கோ உங்க
    மனசை!! //

    அதான் தொவைச்சி தொங்க உட்டுட்டு போயிட்டீங்களே! இதுக்கும் மேலயா தொவைக்கனும்!?

    ReplyDelete
  19. //படங்கள் ,கவிதை சூப்பர்!//

    நன்றிங்க தென்றல்!

    ReplyDelete
  20. //சத்ரியன்,சுத்தமா சரண்டர் ஆயிட்டீங்க போல!நறுக்கென்று நல்ல கவிதை.//

    விடுங்க பாஸ். வீட்ல தானே! வேறெங்கயும் சரண்டர்னாதான் கஷ்டம்.

    ReplyDelete
  21. குலதெய்வமே குழப்பத்திலா???? அதுசரி!

    ReplyDelete
  22. //first one class..

    2 வது குல தெய்வத்தையே குழப்பிய காதலே நீ வாழ்க..//

    சப்போர்ட் பண்ண தமிழரசி ஒருத்தர் போதும், இன்னும் நிறைய பேரைக் குழப்பி விட்ருவேன்.

    ReplyDelete
  23. //கண்ணழகரே....//

    ஹேமா,

    கலா அங்க தொவைச்சி இஸ்திரி போட்டுக்கிட்டிருக்கா. இத வேற பாத்தான்னா , என் வீட்ல குண்டு (மனைவியச் சொல்லல) வெடிக்க வெச்சிருவா.

    //நல்ல கூத்துத்தான்.நீங்களே இப்பிடிக் குழம்பினா குலதெய்வம் பாவம் குழம்பாம.....அதுக்கு என்ன தெரியும்!//

    ஆமா ஆமா! தெய்வம் ஒன்னுந்தெரியாத பாப்பா.

    //கலா...நோண்டி நோண்டி இப்பிடியெல்லாம் சொல்லப்படாது.
    பாவம்ல குலதெய்வம்!//

    இதையும் இப்பிடி பொது எடத்துலதான் சொல்லனுமா? தனி மெயில்ல அது சொல்லி என்னைய காப்பாத்தியிருக்க வேணாமா?

    ReplyDelete
  24. //நல்ல கவிதை.//

    நன்றிங்க அய்யா.

    ReplyDelete
  25. //நல்லா இருக்குங்க...//

    ஊக்கத்திற்கு நன்றிங்க கலாநேசன்.

    ReplyDelete
  26. //என்னமோ போங்க... ஒரு பொண்ண பெத்தவரு மாதிரியா எழுதிறீங்க.. இதுல லேபிள் லவ்வாம்ல..//

    மாப்ள, இதெல்லாம் நல்லாவா இருக்கு?!!!

    லவ்- கூடவே பொறந்தது மாப்ள்.

    //நைஸ்..//

    நன்றிங்க.

    July

    ReplyDelete
  27. //நல்லா இருக்குங்க..//

    நன்றிங்க குமார்.

    ReplyDelete
  28. //காற்றுக்கு அசையும் நாற்று நல்ல உவமை
    ஒத்துப்போதல் கூட அத்தனை நளினமாய்
    இயல்பாய் என்பது அருமையான கற்பனை//

    வாங்க அய்யா,

    குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலைக்கொள்ள வைக்கணும்னா- ஒத்து வாழ்தல் தானே சிறப்பு.அதன் வெளிப்பாடுதான். அந்த பயிரின் படம் கூட எங்கள் வயலில் உள்ள பயிர்தான். கவிதையின் கருவும் எங்கள்...!

    //ஒருவேளை வேண்டுதலும் அவள் நினைவும் முரண்பட்டிருக்குமோ?//

    முரண்படாத வேண்டுதலே உலகி இல்லீங்களே!

    //இல்லையேல் கடவுள் குழம்ப சந்தர்ப்பம் இல்லையே!//

    அவரு குழம்பாம என்ன செய்வார்.இத்தனைக்கு பின்னும் இவன் தெளிவா இருக்கானேன்னு- அவருக்கு குழப்பம்.

    //நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்//

    வாழ்த்திற்கும், வருகைக்கும் நன்றி.

    ReplyDelete
  29. //குலதெய்வமே குழப்பத்திலா???? அதுசரி!//

    ஆமாங்க அருணா.

    ReplyDelete
  30. நேர்த்திக்கடன் செலுத்த
    கோயிலுக்குப் புறப்பட்டோம்.
    கூடவே
    உன் நினைவும்...//

    காற்றுக்கு அசையும் நாற்றும் அழகு. கவிதையும் அழகு. பாரட்டுக்கள்.

    ReplyDelete
  31. நல்லா இருக்கு

    ReplyDelete
  32. அதான் தொவைச்சி தொங்க உட்டுட்டு போயிட்டீங்களே! இதுக்கும் மேலயா தொவைக்கனும்!?\\\\\\\

    ஐய்யயோ....ஆட்டைக்கடித்து,மாட்டைக்கடித்து இப்போ நானா!?
    ஏன்சாமி எல்லோரும் என்மேல் கோபப்படவா?இப்படியொரு பதில்!
    எனக்கே தெரியாமல்,,,,என்னது?இதுதான் ஒருதலைக் காதலோ?ஹ..ஹா..ஹா.....
    ஹேமா பாத்தாயா?உன் கண்ணழகரின்
    விளையாட்டை!

    ReplyDelete
  33. பார்த்தேன் இரசித்தேன் நல்ல படைப்பு.
    பகிர்வுக்கு மிக்க நன்றி...
    எனது முதற்ப்பாடல் என் வலைத்தளத்தில்
    அறிமுகம் செய்துள்ளேன்.உங்கள் பொன்னான கருத்துகளையும் வாழ்த்துக்களையும் மிகவும்
    பணிவன்போடு எதிர்பார்க்கின்றேன். வாருங்கள் உங்கள் வரவுக்காக காத்திருக்கின்றேன் என்றும்
    அன்புடன் உங்களுள் ஒருத்தியாக இந்த அம்பாளடியாள்.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.