உயிர் கணவனே,
நம் ஊர் பற்றி
உணராதவரா நீர்?
கல்லடி கூட தாங்கிக் கொள்வேன்.
ஊரார் சொல்லடியை ...
மழலையொன்று
இல்லையென்று
மலடி என்றென்னை ...
எழுத்துக்கள் அழியுமென்று
அழுகையை நிறுத்திவிட்டு...
இனியும்,
தொலைவில் இருந்தே
தொலைப்பேசி வழி என்னை
போற்றுவதை விட்டுத் தொலை!
ஊருக்கு விரைந்து வந்து...
உன் நெற்றிக்கண்ணை
என் நெற்றிப் பொட்டில் பதித்திடு .
போர்வைக்குள் வேர்வை நீரில்
என்னை வேக வை.
உன் உதிரச் சூட்டால்
என் உடலை அதிரச் செய்.
நம் உயிர்ச் செல்லால்
என் கருப்பையை
கனக்கச் செய் .
பத்தாம் மாதம் ...
மூச்சடக்கி மூச்சுத்திணறி
முகம் சுளிக்கும்படி
அசிங்கச் சொற்களால் உன்னை
அர்ச்சனை செய்தபடி
கருப்பையின்
உள்திரையோடு உரித்து
உன் கையில் தருவேன்.
தொப்புள் கொடியை நீயே அறு
தாய்மையின் புனிதம் நீயாய் உணர்.
இப்போது அங்கே ...
என்னை நினை.
உன்னை அறி.
வருவாய் விரைவாய்
உன் வெளிநாட்டு
வருவாய் மறந்து.
நம்
எதிர்க்காலம்
வரவாய் வரட்டும்
என்னுள்ளிருந்து...!
ஆதலால்,
என் கணவா...வா!
குறிப்பு:- இது ஒரு மீள்பதிவு.
எத்தனை பேருடைய மனசாட்சியோ? நன்று .சத்ரியன்.
ReplyDeleteநாடுவிட்டு நாடுவந்த கணவனை,
ReplyDeleteநாடும்படி...நங்கை நாடுவது மிக,மிக அருமை
அதுவும் பெண்ணின் நிலைபற்றி ஆண் எழுதிருப்பது
ஆச்சரியம்தான்! மிகப் புரிந்துணர்வுமிக்க ஒரு
நல்ல கணவர் நீங்கள்!!
நெகிழ்ந்துப்போனேன்...
ReplyDeleteSimply superb!
ReplyDeleteஒவ்வொரு வரிகளிலும் உணர்வின் வெளிப்பாடு...
ReplyDeleteசூப்பர்...
நினைவுகளை மீட்டிச் செல்கிறது மீள்பதிவு..
ReplyDeleteஉண்மைதான்... நிறைய பேரின் மனவழி தெரிகிறது கவிதையில்....
ReplyDeleteமிக...மிக... அருமை.
ReplyDeleteநயம் -1
ReplyDeleteதொலைவில் இருந்தே
தொலைப்பேசி வழி என்னை
போற்றுவதை விட்டுத் தொலை!
வருவாய் விரைவாய்
ReplyDeleteஉன் வெளிநாட்டு
வருவாய் மறந்து.
மிகவும் இரசித்தேன் நண்பா.!!!
ReplyDeleteநம்
ReplyDeleteஎதிர்க்காலம்
வரவாய் வரட்டும்
என்னுள்ளிருந்து///
மீள் பதிவா..:0 சூப்பர் கோபால்:)
\\வருவாய் விரைவாய்
ReplyDeleteஉன் வெளிநாட்டு
வருவாய் மறந்து.//
-- சூப்பர். சிலர் வருவாய்க்காக , பக்கத்தில் இருந்தும் ..... தவிர்க்கிறார்களே.. அவர்களை என்ன செய்வது ?
அருமை அருமை
ReplyDeleteமன விழி மூலம் காணத் தெரிந்தவர்களால்தான்
அந்த திருமணம் முடிந்தும் முடியாதது போல் வாழ்கின்ற
அந்தப் பெண்களின் மன நிலையை
இதுபோல் தத்ரூபமாக
படம் பிடித்துக் காட்ட இயலும்
மனங்கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்
இரசிக்கக்கூடிய அழகிய வரிகள்
ReplyDeleteவெளிநாட்டு வாழ்க்கையில் எத்துனை சுகங்களை இழந்து சுகம் தேடி சுகம் தேடி அகம் கொன்று அறுபட்டு கிடக்கிறோம் ....
ReplyDeleteதொப்புள் கொடியை நீயே அறு
ReplyDeleteதாய்மையின் புனிதம் நீயாய் உணர்.
நெகிழ்வு ...
நிறையப் பேரின் கனவு
ReplyDeleteஅருமை சத்ரியன்
கணவனைப் பிரிந்து வாழும்
ReplyDeleteஇக்கால மனைவியரின் உள்ளக்
குமுறலைத் தெள்ளத்தெளிவாக
உணர்த்தி நிற்கும் தங்கள்
கவிதை அருமை!.. வாழ்த்துக்கள்..
மனவிழியால் மங்கையின்
ReplyDeleteமனவலி உணர்த்திய
அற்புத கவிதைக்குப் பாராட்டுக்கள்.
சுட்டெரிக்குது கவிதை.
ReplyDeleteதாய்மைக்காக துன்பப்படும் பெண்ணின் உணர்வுகள் முழுவதுமாய் வெளிவந்திருக்கிறது.
aduththa pathivu eppoo>:)
ReplyDeleteஇந்நிலையில் சிக்கி தவிக்கும் பெண்கள் பேசமுடியாமல் அடக்கி வைத்தவைகள் உங்கள் வரிகளில்..
ReplyDeleteதொடரட்டும் தோழரே!
பல பெண்களின் குரலாக ஒலிக்கிறது. தங்கள் கவிதை. கவிதையை மிகவும் ரசித்தேன்.
ReplyDelete