Aug 6, 2009
ஆதலால் என் கணவா...
என்
உயிர் கணவனே,
நம் ஊர் பற்றி
உணராதவரா நீர்?
கல்லடி கூட தாங்கிக் கொள்வேன்.
ஊரார் சொல்லடியை...?
மழலையொன்று
இல்லையென்று
மலடி என்றென்னை ...!?
எழுத்துக்கள் அழியுமென்று
அழுகையை நிறுத்திவிட்டு...
இனியும்,
தொலைவில் இருந்தே
தொலைப்பேசி வழி என்னை
போற்றுவதை விட்டுத் தொலை!
ஊருக்கு விரைந்து வந்து...
உன் நெற்றிக்கண்ணை
என் நெற்றிப் பொட்டில் பதித்திடு .
போர்வைக்குள் வேர்வை நீரில்
என்னை வேக வை.
உன் உதிரச் சூட்டால்
என் உடலை அதிரச் செய்.
நம் உயிர்ச் செல்லால்
என் கருப்பையை
கனக்கச் செய் .
பத்தாம் மாதம் ...
மூச்சடக்கி மூச்சுத்திணறி
முகம் சுளிக்கும்படி
அசிங்கச் சொற்களால் உன்னை
அர்ச்சனை செய்தபடி
கருப்பையின்
உள்திரையோடு உரித்து
உன் கையில் தருவேன்.
தொப்புள் கொடியை நீயே அறு
தாய்மையின் புனிதம் நீயாய் உணர்.
இப்போது அங்கே ...
என்னை நினை.
உன்னை அறி.
வருவாய் விரைவாய்
உன் வெளிநாட்டு
வருவாய் மறந்து.
நம்
எதிர்க்காலம்
வரவாய் வரட்டும்
என்னுள்ளிருந்து...!
ஆதலால்,
என் கணவா...வா!
Subscribe to:
Post Comments (Atom)
//பத்தாம் மாதம் ...
ReplyDeleteமூச்சடக்கி மூச்சுத்திணறி
முகம் சுளிக்கும்படி
அசிங்கச் சொற்களால் உன்னை
அர்ச்சனை செய்தபடி
கருப்பையின்
உள்திரையோடு உரித்து
உன் கையில் தருவேன்.//
சத்ரியன்,ஒரு பெண்ணின் மனநிலையில் உணர்ந்து எழுதினமாதிரி இருக்கு.பார்த்த அனுபவமோ..இல்ல வீட்டு அனுபவமோ!
மிக மிக அருமைங்க.
ReplyDeleteஎந்த பத்தியை பாராட்டுவது என்று தெரியவில்லை.
மனைவியை விட்டு விட்டு வெளிநாட்டில் வாழும் மக்களில் நிலை ...
அந்த மனைவியின் நிலை - அருமை
//மிக மிக அருமைங்க.
ReplyDeleteஎந்த பத்தியை பாராட்டுவது என்று தெரியவில்லை.
மனைவியை விட்டு விட்டு வெளிநாட்டில் வாழும் மக்களில் நிலை ...
அந்த மனைவியின் நிலை - அருமை.//
வணக்கம் ஜமால்.
என் வலைப்பூப் பக்கம் இதுதான் உங்களின் முதல் வரவு என நினைக்கிறேன். கருத்திற்கும், வருகைக்கும் நன்றி.
வணக்கம் தூயா,
ReplyDeleteநீங்கள் ஏதோ கருத்துரை (அ) படம் அனுப்பியிருந்தீர்கள்.என் கணினி எதோ சதி செய்துவிட்டது.(அதைக் காண்பிக்கவே மாட்டேங்குதுங்க.)
(எதுவாயிருந்தாலும் இனிமேல் எழுத்தாவே அனுப்பிடுங்க)
ஆனாலும் நன்றி.
என்ன சொல்ல.... பணம் இல்லையேல் இங்கு வாழ இயலாது.. பணத்திற்காக அங்கே வாழ்வதால் எத்தனை இழப்புக்கள்.. பணமா? பாசமா? வாழ்வா... தேடித்தேடி அலைகிறோம், நினைப்பது கிடைப்பதில்லை.. நினையாத பல (உங்கள் கவிதைப் போல) கிடைக்கிறது...
ReplyDelete//பணமா? பாசமா? வாழ்வா... தேடித்தேடி அலைகிறோம், நினைப்பது கிடைப்பதில்லை.. நினையாத பல (உங்கள் கவிதைப் போல) கிடைக்கிறது...//
ReplyDeleteஉண்மைதான் ,அரங்கபெருமாள்.
எதிர்ப்பாராததே பெரும்பாலும் கிடைக்கிறது. நம் இணைய நட்புகளைப் போல்!
எங்கே போனீங்க? அப்பப்போ இடைவெளி விழுது....!
தாயின் பிரசவ வலியை மிக அழகாக உங்கள் வரிகள் பிரசவித்து விட்டது....
ReplyDeleteதிரை கடலோடி திரவியம் தேடுபவர்களை போட்டு இந்த வாங்கு வாங்கிட்டீங்க.....
ஆயினும்.... அந்த பிரிவின் வேதனையை மிக அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள்....
வாழ்த்துக்கள் சத்ரியன்....
//திரை கடலோடி திரவியம் தேடுபவர்களை போட்டு இந்த வாங்கு வாங்கிட்டீங்க.....//
ReplyDeleteவணக்கம் கோபி,
நானும் கடலோடி தான்.மிகுந்த வலியோடு தான் எழுதி முடித்தேன்.
தொடர்ந்து வாருங்கள். நட்பும்,கருத்துப் பகிர்வுகளும் தொடரட்டும்.
உன் நெற்றிக்கண்ணை
ReplyDeleteஎன் நெற்றிப் பொட்டில் பதித்திடு .
போர்வைக்குள் வேர்வை நீரில்
என்னை வேக வை.
உன் உதிரச் சூட்டால்
என் உடலை அதிரச் செய்.
நம் உயிர்ச் செல்லால்
என் கருப்பையை
கனக்கச் செய் .
பத்தாம் மாதம் ...
மூச்சடக்கி மூச்சுத்திணறி
முகம் சுளிக்கும்படி
அசிங்கச் சொற்களால் உன்னை
அர்ச்சனை செய்தபடி
கருப்பையின்
உள்திரையோடு உரித்து
உன் கையில் தருவேன்.
தொப்புள் கொடியை நீயே அறு
தாய்மையின் புனிதம் நீயாய் உணர்.
வார்த்தைகளில் வலியை புதைத்து வைத்து எழுதுவது சாதரண விஷயம் அல்ல
கருப்பையின்
உள்திரையோடு உரித்து
உன் கையில் தருவேன்
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா வேற ஒன்னும் சொல்ல முடியல
அன்பின் சத்ரியன்
ReplyDeleteஅயலகங்களில் வருவாய்க்காக தனித்திருக்கும் ஆண்களின் உயிர் இங்கு தாயகத்தில் படும் பாடு ....ம்ம்ம்ம்
நல்ல இயல்பான சொற்களில் எளிமையான வரிகளில் மனநிலை அழகாக எடுத்துரைக்கப் ப்ட்டிருக்கிறது.
சத்ரியன் - உங்கள் இதயத்தின் ஆழத்தலிருந்து எழுந்த கவிதை - பேனா நுனியில் இருந்து வந்த கவிதை அல்ல.
நெற்றிக்கண்ணை நெற்றிப் பொட்டில் பதித்து, வேர்வை நீரில் வேகவைத்து, உதிரச் சூட்டால் உடலை அதிரச் செய்து, கருப்பை(ய்)யை கனக்கச் செய்து, ஐயிரண்டு திங்கள் பொறுத்திருந்தால்
கருப்பையின் உள்திரையோடு கையில் ஒரு மழலைச் செல்வம் - தாய்மையின் புனிதம் உணர
அடடா அடடா என்ன கற்பனை வளம் - பாராட்டுகள் சத்ரியன்
நல்வாழ்த்துகள் சத்ரியன்