Aug 10, 2009

குழந்தைக் காதலி



உண்ணக் கொடுத்த
கஞ்சிக் கிண்ணத்தை
கவிழ்த்துக் கொட்டி

கண் காது மூக்கு
கை கால் வாயெனப் பூசி
விரல்களைச் சப்பி
விளையாடும்
குழந்தையைப் போல்

காதல் நிரம்பிய - என்
நெஞ்சக் கிண்ணத்தைக்
கவிழ்த்துக் கொட்டி
விளையாடுகிறாய்
நீ!

கேட்டால் ...
காதலில் இன்னும்
குழந்தை நான் என
குதித்தாடுகிறாய்...!


8 comments:

  1. //கேட்டால் ...
    காதலில் இன்னும்
    குழந்தை நான் என
    குதித்தாடுகிறாய்...!//

    அடடேய்ய்ய்ய்ய்... நல்லாயிருக்கே

    ReplyDelete
  2. இப்படி ஒரு காதலியா!அதுவும்
    இந்தக் காலத்தில்..ஆமா! அப்படி,இப்படி
    ஒன்றும் இல்லையே, நன்றாகத்தானே
    இருக்கின்றார் கவனம் எதுக்கும்
    ஒருதரம் “அங்கு” கொண்டு போய்
    காண்பிக்கிறது நல்லதுங்கோ

    குதித்தாடினால் பரவாயில்லை
    தாண்டவம் ஆடாமல் பாத்துக்கிட்டா
    சரிதான்.

    உங்கள் குழந்தைக் காதலியை
    வடித்த விதம் வரவேற்கின்றது.

    குழந்தை காதலியை குழந்தை
    நிலாவுடன் விளையாட
    விடலாமில்ல...நீங்கதான்
    கேட்டுச் சொல்லுங்க
    என்று என்னையே கேட்கக்
    கூடாது.

    ReplyDelete
  3. கலக்கீட்டிங்க சத்ரியன்.. இதே வேலைதான்,கேட்டா இதே பதிலுதான்.. மனசப் படிச்ச மாதிரி ஒரு உணர்வு.

    ReplyDelete
  4. வணக்கம் ஞானசேகரன்,

    //அடடேய்ய்ய்ய்ய்... நல்லாயிருக்கே...///

    நிஜமாவா...? நன்றி.

    ReplyDelete
  5. கலா சொன்னது...

    //குழந்தை காதலியை, குழந்தை
    நிலாவுடன் விளையாட
    விடலாமில்ல...நீங்கதான்
    கேட்டுச் சொல்லுங்க
    என்று என்னையே கேட்கக்
    கூடாது.//

    அது என்னோட மட்டுந்தான் விளையாடுமாம்!

    அதனால "மார்கண்டேயினி" க்கு ஒரு வேலை குறைஞ்சிடுச்சி.

    (குழந்தை நிலா...எங்க போனீங்க நீங்க?. மார்கண்டேயினி (1000 வருஷமாமில்ல...!) உங்கள என்னமோ கேக்கனுமாம்!)

    ReplyDelete
  6. அரங்கபெருமாள் சொன்னது...

    //கலக்கீட்டிங்க சத்ரியன்.. இதே வேலைதான்,கேட்டா இதே பதிலுதான்.. மனசப் படிச்ச மாதிரி ஒரு உணர்வு.//

    அங்கேயும் அப்படித்தானா?.ம்ம்ம்ம்... ந‌டத்துங்க.

    ReplyDelete
  7. //சத்ரியன்...ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் என் பிரியமானவள் சொன்ன (கவனிக்கவும்,சொன்ன‍. எழுதிய அல்ல.)ஒரு கவிதை.

    "புரியாத பிரியம்
    பிரியும்போது
    புரியும்".

    புரிகிறதா?//

    கலா இதைக் கவனிச்சீங்களா.அப்போ !

    //(குழந்தை நிலா...எங்க போனீங்க நீங்க?. மார்கண்டேயினி (1000 வருஷமாமில்ல...!) உங்கள என்னமோ கேக்கனுமாம்!)//

    சத்ரியன்,வந்திட்டேன் வந்திட்டேன்.
    கொஞ்சம் வேலை கூட.கவிதை கலக்கல் அனுபவம்.குழந்தையாய் ரசித்தேன்.எப்பிடி சொல்லன்னு தெரியல.

    கலா குழந்தைங்க இரண்டு விளையாடுறதை ரசிக்கணுமே தவிரக் குழப்பக்கூடாது.காதல் விளையாட்டைக் குழப்பின பவம் எங்களுக்கு வேணாம்ப்பா.

    ReplyDelete
  8. ஹேமா சொன்னது...
    //கலா குழந்தைங்க இரண்டு விளையாடுறதை ரசிக்கணுமே தவிரக் குழப்பக்கூடாது.காதல் விளையாட்டைக் குழப்பின பவம் எங்களுக்கு வேணாம்ப்பா.//

    கலா, கேட்டுக்குங்க. அதுக்கெல்லாம் குழந்தை மனசு வேணும்.(ஹேமாவுக்கு மாதிரி)

    கடவுளே அதுமாதிரி எனக்கும் ஒரு மனசு கொடப்பா!

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.