Aug 12, 2009

நீயே சொல்-01
இனி ...
வருடாவருடம்
'கல்யாண நாள்' வரும்.
நீயும் கொண்டாடுவாய்
அவனுடன்.


இனியும்
வருடாவருடம்
'காதலர் தினமும்' வருமே!
நான் யாருடன்...?11 comments:

 1. ஒரு டாக்டர் பொண்ணு "நோ" சொன்னா "நர்ஸ் பொண்ண காதலி.. கட்சி தாவல் இங்கே தர்மமடா..

  /வசூல்ராஜ MBBS// பட பாடல்

  ReplyDelete
 2. சத்திரியன்,பின்னூட்டங்கள் நகைச்சுவையாக இருந்தாலும் கவிதைக் கற்பனை அற்புதம்.

  அந்தக் காதல் உண்மை இல்லை என்ற உண்மையை ஒப்புக்
  கொள்ளுங்கள்.அதனால் பெரிய வேதனை இல்லை.

  ReplyDelete
 3. எங்கிருந்தாலும் வாழ்க......என்று பாடி
  வாழ்திவிட்டு கவலைப்படாமல் ம்கிழ்ச்சியாய்
  இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

  காதலர் தினம் வரட்டும் அதுக்கப்புறம் பார்த்துகலாம்
  இன்னும் கொஞ்ச நாட்கள் உண்டு யாராவது சிக்கலாம்
  இல்லையா?

  ReplyDelete
 4. அரங்க பெருமாள் சொன்னது...//ஒரு டாக்டர் பொண்ணு "நோ" சொன்னா "நர்ஸ் பொண்ண காதலி.. கட்சி தாவல் இங்கே தர்மமடா..//

  உண்மையிலேயே தர்மம் தானா, அரங்க பெருமாள்?

  இது தெரியாம புலம்பிட்டு இருக்கிறனோ?

  ReplyDelete
 5. ஹேமா சொன்னது...//பின்னூட்டங்கள் நகைச்சுவையாக இருந்தாலும் ...//

  எப்போதும் இறுக்கமாகவே இருந்தால் மனிதன் கல்லாகி விடக்கூடும் இல்லையா ஹேமா.? அதான் சின்னச்சின்ன குறும்புகள்.

  //கவிதைக் கற்பனை அற்புதம்.//

  நானும் நம்புறேன்.

  //அந்தக் காதல் உண்மை இல்லை என்ற ...//

  உண்மயாப் பொய்யா என எதைக் கொண்டு கண்டறிவது ஹேமா?

  ReplyDelete
 6. கலா சொன்னது...

  //காதலர் தினம் வரட்டும் அதுக்கப்புறம் பார்த்துகலாம்...//

  அப்போ காதலர் தினத்தன்னைக்கு வழியே இல்லை.

  //இன்னும் கொஞ்ச நாட்கள் உண்டு யாராவது சிக்கலாம்
  இல்லையா? //

  இந்த முகரைக்கு (முகத்துக்கு) ஒன்னு சிக்கனதே அரிய விஷயம்! மேற்கொண்டு இன்னொன்னை எங்கே போய் தேடறதோ போங்க?

  (என்னைப்பற்றி நல்லவிதமா யாரிடமாவது எடுத்துச் சொல்லி இந்தச் சிறியவனுக்கு உதவலாமே கலா )

  ReplyDelete
 7. சத்ரியன் நான் எப்பவும் நினைப்பதுண்டு.முதல் காதல்,முதல் முத்தம்,முதல் கல்யாணம் எதுவாக இருந்தாலும் மனதில் எது ஆழமாக - மறக்க முடியாததாக அதை விட்டு அடுத்ததை நினைக்க ஏற்க முடியாததாக இருக்கோ அதுதான் உண்மையும் முதலுமான ஒன்று மட்டும்.நடுவில் வந்து போகிற ஆயிரங்கள் எல்லாமே சும்மா !

  ReplyDelete
 8. நீங்க சிறியவன் சரி நான் ஒத்துகிறன்
  இந்தக் குழந்தையிடம் தூது விடலாமோ?
  இது சரியா?முறையா?இதைப்பற்றி {ஒன்ணுமே}
  தெரியவும்,புரியவும் முடியாத வயசு அண்ணா.

  ReplyDelete
 9. //சத்ரியன் நான் "எப்பவும்" நினைப்பதுண்டு.முதல் காதல்,முதல் முத்தம்,முதல் கல்யாணம் எதுவாக இருந்தாலும் மனதில் எது ஆழமாக - மறக்க முடியாததாக ... !//

  நானும் "எப்போதாவது" நினைப்பதுண்டு ஹேமா.

  ReplyDelete
 10. //நீங்க சிறியவன் சரி நான் ஒத்துகிறன்
  இந்தக் குழந்தையிடம் தூது விடலாமோ?
  இது சரியா?முறையா?இதைப்பற்றி {ஒன்ணுமே}
  தெரியவும்,புரியவும் முடியாத வயசு அண்ணா.//

  மன்னிச்சிக்கிங்க குழந்தை! குழந்தையும்,தெய்வமும் ஒன்னுன்னு சொல்வாங்களே.அதனால தெய்வத்த தூதனுப்பலாம்னு....

  ( இத கவனிங்க ஹேமா,மார்கண்டேயினி ன்னா மார்கண்டேயனுக்கு அக்காவா இருக்கும்னு நினைச்சேன்.அதுல மண்ண‌ள்ளி போட்டுட்டாக)

  ReplyDelete
 11. ஒரு பரிட்சையில் தோல்வியுற்றால் பள்ளிக்கு செல்லக்கூடாது என நினைத்தல் கூடாது.தர்மம் நியாயம் ஏன் சாமி நினைக்கிறீங்க... தப்பு நமமளுது, கிளி வளர்க்க ஆசைப்படுவது தப்பில்ல...கிளிக்கு நம்ம சரிப்படுவோமான்னு பார்க்கனும்ல. சரிவிடுங்க...
  கிளியை வளர்க்க கூண்டில் அடைத்து அதன் சுதந்திரத்தை பறிப்பதை விட, அதை பறக்க விட்டு, எங்கோ சுதந்திரமாக(அதற்கு பிடித்தாற் போல) திரியும் என எண்ணுவதும் சுகம்தான்.

  ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.