Sep 14, 2009

விடுப்பு விண்ணப்பம்

விடுநர்,

படத்தில் உள்ளவர்பெறுநர்,

அன்பு (வலை) நண்பர்கள்.


படத்தில் உள்ள நான்,

15/09/09 - லிருந்து இரண்டு வார விடுப்பில் தாயகம் செல்லவிருப்பதால் , எதிர்வரும் சிறிது நாட்களுக்கு உங்களுடன் தொடர்புக் கொள்ள இயலாமல் போகலாம்.

ஆகவே, ( குசும்பாக ) "குறித்த நபரைக் காணவில்லை" - என விளம்பரம் செய்து
கூடி கும்மியடிக்காதீர்கள் .

திரும்பி வரும் போது உங்கள் எல்லோருக்கும் ஒரு இனிப்பான செய்தி கொண்டு வருகிறேன்.

அதுவரை...........!

Sep 13, 2009

"தா... டீ "அவலை நினைத்து
உரலை இடித்த
கதைப் போல,
உள்ளத்துள்
என்னை நினைத்து
ஏன்டி
விரலை கடித்த படி ?

.......

இப்படி இருக்குமா?
அப்படி இருக்குமா?
எப்படியிருக்கும்...... ? என
கனவுகளாய் நானும்
எத்தனைக் காலம்
சுமந்துத் திரிவது
பாதி காதலை..!


எதிர்வரும் என்...
'
ம்...
ஊஹும்' ...சரியல்ல
நம்...சந்ததிக்கு
'எது காதல்'

எடுத்துரைக்கும் கடமை
எனக்கிருக்கிறது.

அதற்காகவேனும்
தா...டீ..!
உன்னிடமுள்ள
மீதி காதலை...!

முதலில்
முழுமைப் பெறட்டும்
நம் காதல்.
பின்
செழுமைப் பெறட்டும்
நம் வாழ்வு!

Sep 11, 2009

"ச்சீ..ச்சீ "


ஓர் மதியவேளை.

உணவிற்குப் பின்
வேலைத்தளத்தில்
ஓய்வாய் படுத்திருக்கையில் ...

அருகே சிறு புதரில்
இரு சிட்டுக் குருவிகள்
விட்டு விட்டு
"கீச்... கீச் ..."
"ச்சீ...ச்சீ..." என
சிணுங்கல் ஒலியெழுப்பி
விளையாடிக் கொண்டிருந்தது.

புதரினை
உற்றுப் பார்த்தேன்.
சற்று நேரம்
அங்கே மௌனம்!

கண்டு கொண்டேன்.
காதலும், கூடலும்
அதுகளின்
களி விளையாட்டு.

கண்களை மூடி
காதுகளைத் திறந்து வைத்தேன்.

மீண்டும்
"கீச்...கீச்..."!
நான் உறங்கிவிட்டதாய்
அழைக்கிறது - ஆண்குருவி.

மீண்டும்
"ச்சீ...ச்சீ..."!
என் காதுகள்
உறங்கவில்லையென
எச்சரிக்கிறது - பெண்குருவி.

ஐந்தறிவுக் குருவியே
அருகில் ஆள் இருப்பதை
அறிந்து நாணம் கொள்கிறது.

பொது இடங்களிலும்
பொதுப் போக்குவரத்து
வாகனங்களிலும்
பயண நேரங்களில் ......
பக்கத்து இருக்கைக்
கூத்துக்களைக் கண்டு....

நம்ப முடியவில்லை
என்னால்!
மனிதனுக்கு ஆறறிவாம்...?!

Sep 9, 2009

எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க(ம்மா)ப்பா...!
நண்பர் ஜமால் என்னையத் தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்.வேலைப்பளு காரணமாக சிறிது நாள் பொறுத்தருளும்படி கேட்டுக் கொண்டேன் . இப்போ தோழி ஹேமா வும் அழைத்திருக்கிறார் . இதுக்கு பிறகும் தாமதித்தால் (ஏற்கனவே தாமதமாகி விட்டது), நண்பர்களின் கோவத்திற்கு ஆளாக நேரிடும்.ஆதலால், "அ" முதல் "ஃ" வரையில் மட்டும் எழுதுகிறேன். "ஆங்கில அகரத்தை" நானும் தவிர்த்து விடுகிறேன். அதற்காக ,"எனக்கு ஆங்கிலம் பிடிக்காது", என்று பொருள் படாது. "ஆங்கிலத்திற்கு என்னைப் பிடிக்காது ", என்று பொருள் கொள்க!


ஆரம்பிக்கறேன்...


ட்டகாசம் பண்ணியது : என்னைப் பற்றி அப்படி யாரும் (குறிப்பா எங்க ஊர்ப் பெண்கள்) சொன்னதாகத் தெரியவில்லை. எதுக்கும் அம்மாவிடம் ஒருமுறை கேட்டு பாத்திடனும்.
ன்புக்குரியவர்கள் : இதையும் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லாருமே.!

ள் மாறாட்டம் : கொஞ்ச வருசத்துக்கு முன் எனது படுக்கையறையில் எனக்கு பதில் தலையணை உறங்கிக் கொண்டிருக்க நான் நள்ளிரவுக் காட்சி பார்த்துக் கொண்டி( "பத்மா" திரையரங்கில் இடம் பிடித்தி)ருப்பேன்.இதுக்கு பேரும் ஆள்மாறாட்டம் தானே?
சைக்குரியவர்கள்: அன்னையும், பிதாவும் .(விரைவில் ...பட்டியல் கூடவிருக்கிறது )

ன்பமான செய்தி : என்னையும் ஒருத்தி ஏற்றுக் கொண்டது.
லவசமாய் கிடைப்பது : ஆசை.

யென பல்லிளித்து : பல் மருத்துவரிடம்.....! (ஒரேயொரு முறை, என்னைப் பார்த்து குரங்கும், குரங்கைப் பார்த்து நானும் ..!)
தலில் சிறந்தது : அன்பு.

ணர்வுகள் அழுதது : கேடு கெட்ட இந்த 21 ஆம் நூற்றண்டில் வாழ்கிறோமே என்று...!
லகத்தில் பயப்படுவது : .........யா - விற்கு ! (ஸ்ரேயாவா ...ச்சே ச்சே ... இல்லப்பா. இது வேற ...யா! )


னமாய் நின்றது : கடந்த நவம்பர் 3 - ஆம் நாள் எனது தம்பி திடீர் மரணத்தைத் தழுவிய செய்தியறிந்து.
மை கண்ட கனவு : உரியவளிடம் இன்னும் தெரிவிக்காத (முதல்) காதல் !

ன்ன கற்பனை : உலகை முழுதாய் சுற்றிப் பார்த்து விட வேண்டும்.(அதுக்காக யாரும் உலகப் படத்தை மின்னஞ்சல் அனுப்பி வைக்காதிங்க அப்பு ... கடுப்ப்ப்ப்பாயிருவேன்.)
ப்போதும் உடனிருப்பது : இதுவரை உயிர்!

ழைகள் பற்றி : போதுமான விழிப்புணர்ச்சி ஏற்படுத்தத் தவறி இருக்கிறோம்.
ன் இந்தப் பதிவு : வேறென்ன ? உங்களின் போறாத காலம்.

க்கியம் : நேரம் கிடைக்கும் போது என்னுள்!

ஸ்வர்யத்தில் சிறந்தது : இதையெல்லாம் "பொறுமை" யாப்படிக்கிறீங்களே. அதேதான் !


துங்கி நின்றது : ஹி...ஹி...வெட்கமாய் உள்ளது போங்கோ ..(?!)
ரு ரகசியம் : சொல்றேன். ஆனா, அது மட்டும் ரகசியம்.......!


லையின் கீற்றுக்கள் : நான் குடிசையில் பிறந்தவன்....(இதற்கு மேல் என்னச் சொல்ல ? )
சையில் பிடித்தது : சலசலக்கும் நீரின் ஓசை.


ஒளடதம் : புரியவில்லை .(ஹேமா சொன்ன பிறகு புரிஞ்சிடுச்சி ,எனது மூத்த தங்கை.)
ஒளவை மொழி ஒன்று : ஊக்கமது கைவிடேல் .


: ம்ம்ம்ம்ம்..... எதை மறுப்பது.?
(அ)றிணையில் பிடித்தது : "வடிவேலு"வும் (எங்கவீ ட்டு நன்றியுள்ளவன்), எங்க வீட்டு மாடுகளும் !


யப்பா ....ஒரு வழியா முடிஞ்சது ! இதுக்கே மூச்சுத் தெனருதே...!


பி. கு.:-

திட்டணும்னு நெனைக்கிறவங்களுக்கு மட்டும் ...

வெளிநாட்டிலிருந்தால் : ramheartkannan@gmail.com
உள்ளூரிலிருப்பவர்கள் :- கைத் தொலைப்பேசி வழி !

*********************************************


நீங்கல்லாம் வந்து ,

இழுத்துக்கிட்டு போங்கப்பா...


திரு. கருணாகரசு :அன்புடன் நான் ,

திரு.அன்புடன் புகாரி : அன்புடன் புகாரி.

தோழி.யாழினி : நிலவில் ஒரு தேசம் ,

'கவிதை நதி' திரு.விசயபாரதி: நட்புடன் நான்

Sep 6, 2009

புதுப் பட்டியல்
பிச்சை எடுக்க
திருவோடு ஏந்தி
வருவது தானே வழக்கம்?

கடந்த
கால் நூற்றாண்டுக் காலமாக
பழத் தட்டேந்தி வருகிறார்கள்.

உழைத்து வாழ
வக்கற்றவனுக்கு
மணவாழ்க்கை என்ன
ம்ம்...யிருக்கா?

வாழ்க்கைத் துணையாய்
வருபவளுக்கு
உணவும்,உடையும் - தனது
உழைப்பால் கொடுக்க
முடியாதவனுக்கு
மனைவி என்பவள் எதற்கு?

இரவுக் கழிவு
வெளியேற்ற இயக்கத்திற்கா?

இத்தனைக்காலம் பழகிப்போனதை
இனி மாற்றுவதெப்படி
என வினவும்
மனம் முடமாகிப் போன
மானங்கெட்ட இளைஞனா நீ?

உனக்காகச் சொல்கிறேன்.

இனி
வழக்கமாய் கேட்கும்
வரதட்சணைப் பட்டியலில்
புதிதாய் இதையும்
இணைத்துக் கொள்.

மனைவியாய்
வரவிருப்பவளிடம்
வரதட்சணையாக
இரு பிள்ளைகளும்
பெற்றுக் கொண்டு
வந்து விடச் சொல்.

தாம்பத்தியச் சிரமம்
சிறிதுமின்றி
"நான்தான் அதுகளின்
தகப்பன் ",எனச்
சொல்லித் திரியலாம்
சொரணையின்றி......!

அடுத்தவன் உழைப்பிற்கு
ஆசைப்படுபவன் தானே நீ?

Sep 3, 2009

மனித நேயம்'வணங்காமண் ' கப்பலில்
கொழும்புத் துறைமுகம்
வரைச் சென்று
இரு மாதங்களாகி

இன்னமும்
வன்னி முகாம்களுக்குச் செல்ல
வழி மறிக்கப்பட்டு

நங்கூரம் பாய்ச்சிய நிலையில்
நாதியற்று கிடக்கிறது.

மனித நேயம்...!!!!!!!


Sep 1, 2009

விழாக்காலம்அறிவிப்பது என்னவோ
அம்மனுக்குத் திருவிழா
என்று.
அம்மனுக்குத்தான் தெரியும்
விழா யாருக்கென்று!

'என்னை ஒருமுறைப்
பாரேன்' என்று
அம்மனும் கூட

கண் சிமிட்டாமல்
உன் கண்
பார்த்துக் கொண்டிருக்க,

ஒற்றைக் கண்ணை
உருட்டி சிமிட்டி
உதட்டில் சிறிதாய்ப்
புன்னகைத் திரட்டி
கட்டை விரலை
முத்தமிட்டு
கலவரம் மூட்டுகிறாய்
காதல் கள்ளி.

உன்
தோழியிடமாவது
சொல்லி விட்டாயா?
நான்
'தோழனாய்' இருந்து
'காதலன்'
ஆகிவிட்டேன் என்று!