Sep 1, 2009

விழாக்காலம்



அறிவிப்பது என்னவோ
அம்மனுக்குத் திருவிழா
என்று.
அம்மனுக்குத்தான் தெரியும்
விழா யாருக்கென்று!

'என்னை ஒருமுறைப்
பாரேன்' என்று
அம்மனும் கூட

கண் சிமிட்டாமல்
உன் கண்
பார்த்துக் கொண்டிருக்க,

ஒற்றைக் கண்ணை
உருட்டி சிமிட்டி
உதட்டில் சிறிதாய்ப்
புன்னகைத் திரட்டி
கட்டை விரலை
முத்தமிட்டு
கலவரம் மூட்டுகிறாய்
காதல் கள்ளி.

உன்
தோழியிடமாவது
சொல்லி விட்டாயா?
நான்
'தோழனாய்' இருந்து
'காதலன்'
ஆகிவிட்டேன் என்று!

21 comments:

  1. //தோழியிடமாவது
    சொல்லி விட்டாயா?
    நான்
    'தோழனாய்' இருந்து
    'காதலன்'
    ஆகிவிட்டேன் என்று!//

    சத்ரியா...கேட்டுச் சொல்லவா !கவிதை அழகோ...அழகு.

    ReplyDelete
  2. //சத்ரியா...கேட்டுச் சொல்லவா
    !கவிதை அழகோ...அழகு.//

    ஹேமா,

    நீங்க 'அவங்களோட' தோழின்னு சொல்லவேயில்ல.
    அவங்களும் சொல்லல.

    ம்ம்ம்...! கேட்டுச் சொல்லுங்க , இப்பவே.

    ReplyDelete
  3. அறிவிப்பது என்னவோ
    அம்மனுக்குத் திருவிழா
    என்று.
    அம்மனுக்குத்தான் தெரியும்
    விழா யாருக்கென்று!


    hello ippa enakum therndichi viza yarukkunu

    nadakkattum nadakkattum

    ReplyDelete
  4. //ஒற்றைக் கண்ணை
    உருட்டி சிமிட்டி
    உதட்டில் சிறிதாய்ப்
    புன்னகைத் திரட்டி
    கட்டை விரலை
    முத்தமிட்டு
    கலவரம் மூட்டுகிறாய்
    காதல் கள்ளி.//


    அடடே படத்தை வைத்தே கவிதை படைத்து விட்டீர்களே!

    கவிதை அழகோ அழகு தேவதையைப் போல்!

    வாழ்த்துக்கள் சத்ரியன்...

    ReplyDelete
  5. நானும் கேட்டு சொல்லவா ராஸா

    -----------

    வரிகளேற்ற படத்தேர்வு அழகு.

    ReplyDelete
  6. இந்தப்புள்ளைய இன்னும் எத்தனை பேர் இடுகையில படமா போடுவீங்கன்னு தெரியலை.இதுக்கு முதல்ல காப்பி ரைட்ஸ் வாங்கணும்

    ReplyDelete
  7. //அறிவிப்பது என்னவோ
    அம்மனுக்குத் திருவிழா
    என்று.
    அம்மனுக்குத்தான் தெரியும்
    விழா யாருக்கென்று!//

    ம்ம் இந்தவரிதான் இந்தகவிதையின் ஹைலைட் சத்ரியன்

    ReplyDelete
  8. சத்ரியன்... என்னவென்று சொல்லுவது.
    அருமையிலும் அருமை.. சொன்னமாதிரி ஆடி மாச கூலு ஊத்திருவோம்

    //தோழியிடமாவது
    சொல்லி விட்டாயா?//

    நீங்க சொல்லிட்டீங்களா?

    ReplyDelete
  9. //அருமையிலும் அருமை..
    சொன்னமாதிரி ஆடி மாச கூலு ஊத்திருவோம்

    //தோழியிடமாவது
    சொல்லி விட்டாயா?//

    நீங்க சொல்லிட்டீங்களா?//

    அரங்க பெருமாள்,
    தாராளமா கொண்டாடிரலாம்.

    ReplyDelete
  10. //அறிவிப்பது என்னவோ
    அம்மனுக்குத் திருவிழா
    என்று.
    அம்மனுக்குத்தான் தெரியும்
    விழா யாருக்கென்று!

    hello ippa enakum therndichi viza yarukkunu

    nadakkattum nadakkattum //

    காயத்ரி,

    கண்டுபிடிச்சிட்டீங்களா? எதுக்கும் கொஞ்ச நாள் ரகசியமா இருக்கட்டும். "திருமண விழா" நடக்கும் வரைக்குமாவது.இல்லாட்டி, திருவிழா கூட நடத்தாம நிப்பாட்டிருவாங்க.

    ரகசியம் ரகசியம் ரகசியம்.

    ReplyDelete
  11. //ஒற்றைக் கண்ணை
    உருட்டி சிமிட்டி
    உதட்டில் சிறிதாய்ப்
    புன்னகைத் திரட்டி
    கட்டை விரலை
    முத்தமிட்டு
    கலவரம் மூட்டுகிறாய்
    காதல் கள்ளி.//

    அடடே படத்தை வைத்தே கவிதை படைத்து விட்டீர்களே!
    கவிதை அழகோ அழகு தேவதையைப் போல்!
    வாழ்த்துகள் சத்ரியன்...//

    யாழினி,

    எழுத வந்த வரிகளுடன் படத்தின் அழகும் நான்கு வரிகளை உருவாக்கிக் கொண்டது.(கலா உங்கள் தோழியா?)

    நன்றி.

    ReplyDelete
  12. //நானும் கேட்டு சொல்லவா ராஸா
    -----------

    வரிகளேற்ற படத்தேர்வு அழகு.//

    ஜமால்,

    எங்கேன்னு முதல்ல சொல்லுங்க.பிறகு கேட்கவா வேணாமான்னு சொல்றேன்.

    படத்தைத் தேர்ந்தெடுத்த பின் (அழகாகத் தெரிந்ததால்) சேர்ந்துக்கொண்ட வரிகள் அவை.

    ReplyDelete
  13. //இந்தப்புள்ளைய இன்னும் எத்தனை பேர் இடுகையில படமா போடுவீங்கன்னு தெரியலை.இதுக்கு முதல்ல காப்பி ரைட்ஸ் வாங்கணும்//

    வசந்த்,

    "காப்பி ரைட்ஸ்" எனக்குக் கிடைக்க பரிந்துரைச் செய்யுங்கோ. நல்லா இருப்பீங்க ராசா.(இடுகைக்கு மட்டுந்தான்)

    ReplyDelete
  14. //அறிவிப்பது என்னவோ
    அம்மனுக்குத் திருவிழா
    என்று.
    அம்மனுக்குத்தான் தெரியும்
    விழா யாருக்கென்று!//

    ம்ம்ம் இந்தவரிதான் இந்தகவிதையின் ஹைலைட் சத்ரியன்//

    வசந்த்,
    சரியாச் சொன்னீங்க.

    ReplyDelete
  15. ஆங்... நான் கூட அந்தப் புள்ளய மறந்துட்டேன்...

    ReplyDelete
  16. //ஆங்... நான் கூட அந்தப் புள்ளய மறந்துட்டேன்...//

    அரங்க பெருமாள்,

    எந்த புள்ளய மறந்துட்டீங்க?

    ReplyDelete
  17. நல்ல கவிதை அனுபவமோ??????????

    ReplyDelete
  18. //நல்ல கவிதை அனுபவமோ??????????//

    வாங்க சந்த்ரு,

    பின்னே, இல்லாமலா?

    ReplyDelete
  19. //தோழியிடமாவது
    சொல்லி விட்டாயா?
    நான்
    'தோழனாய்' இருந்து
    'காதலன்'
    ஆகிவிட்டேன் என்று!//

    அருமையான வரி.. ஆனால் அப்படி நடப்பதில்லை வாழ்வில்.. தோழனிடம் சொல்லிவிட்டேன் அந்த மணப்பெண் என் கதகளி என்று..

    ReplyDelete
  20. //உன்
    தோழியிடமாவது
    சொல்லி விட்டாயா?
    நான்
    'தோழனாய்' இருந்து
    'காதலன்'
    ஆகிவிட்டேன் என்று!//


    ம்ம்ம்ம் நல்ல அழகு

    ReplyDelete
  21. அன்பின் சத்ரியன்

    நல்ல கவிதை - ரசித்தேன் - படத்திற்காக கவிதையா - கவிதைக்காகப் படமா - எப்படி இருப்பினும் இரண்டுமே அழகு.

    நல்வாழ்த்துகள் சத்ரியன்

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.