Jul 30, 2011

நீயே சொல் - 08



*

ஒரு 
சொல் யோசிக்க
நீ
ஒதுக்கும்
நொடிப்பொழுதையும்
வீணாடிக்காமல்,

இதழ் மீது
சாய்ந்து
ஓய்வெடுக்கும்
உன்
எழுது கோலாய்
இருந்திருக்கலாம்
என் மீசை.


***


இவ்வுலகை
எழுத
இங்கே
அநேகம் பேர்
அவதரித்திருக்கிறார்கள்

உன்னை
எழுத 
உயிரூட்டப் பட்டவன்
நான்
ஒருவன் மட்டுமே!

வேறெதுவும்
எழுத வராதா
என்பவர்களுக்கு
வேறென்ன
சொல்லட்டும்
 நீயே சொல் ...?

Jul 29, 2011

எனக்கு வெட்கம் இல்லை...!

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்ளாத தமிழர்களில் நானும் ஒருவன். இது என்னைப் போன்றவர்களுக்கான பகிர்வு அல்ல. இந்தியர் என்பதில் பெருமைக் கொள்பவர்களின் கவனத்திற்காக.... காரணம் “மெய்ப்பொருள் காண்பதறிவு”.
இக் கட்டுரை எனக்கு மின்மடலில் வந்தது. 


இந்தியனாக இருப்பதற்காக நான் வெட்கப்படவில்லை-
-நிதின் குப்தா,அய்.அய்.டி-மும்பை.
      மிகவும் சுவாரசியமானதும்நமது விழிகளை விரியச் செய்வதுமான ஒரு கட்டுரை இங்கே மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளதுரசிக்கத் தயாராகுங்கள். இந்தியனாக இருப்பதற்காக நான் வெட்கப்படவில்லை என்று மும்பை அய்.அய்.டி-யில் பொறியியல் பட்டப்படிப்பு பயிலும் நிதின் குப்தா ராகுல் காந்திக்கு பதிலளித்துள்ளார்.


எல்லோருக்கும் இந்த பதில் சற்று வியப்பாகவும் குழப்பத்தையும் ஏற்படுத்தும். ”உத்தரப்பிரதேசத்தில் நடப்பதைப் பார்த்தப் பிறகுநான் இந்தியனாக இருப்பதற்காக வெட்கப்படுகிறேன்”, என்ற ராகுல் காந்தியின் அங்கலாய்ப்புக்கு நிதின் குப்தா கொடுத்துள்ள பதில் தான் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.


இதோ நிதின் குப்தாவின் கட்டுரை
:-
           

      உத்திரப்பிரதேசத்தைப் பார்த்து வெட்கப்படாதீர்கள்காங்கிரசு தான் உத்திரப்பிரதேசத்தை விடுதலைக்கு முன்பும்,விடுதலைக்கு பிறகும் என 1939 லிருந்து 1989 வரை ஆண்டுள்ளதுஉன் பாட்டி இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்ட அவசர நிலைப் பிரகடனம் மற்றும் இருமுறை நடந்த இடைக்கால ஆட்சி நீங்கலாக.இந்தியாவின் 14 பிரதமர்களில் பேர் உ.பியில் இருந்து வந்தவர்கள்.அதில் 6 பேர் காங்கிரசை சேர்ந்தவர்கள்.      உங்கள் கட்சிதான் அரை நூற்றாண்டுக் காலமாகவும்அரை டசன் பிரதமர்களும் இந்த மாநிலத்தில் இருந்து நாட்டையும்மாநிலத்தையும் ஆண்டுள்ளனர்.முலாயம் சிங் ஆட்சிக்கு வந்ததற்கு காரணம்உங்கள் கட்சி உ.பி.யில் காந்தியவாதியாக தங்களுடைய கொள்கையில் நடந்துக்கொள்ளதது தான்.ஆக 50 ஆண்டு கால காங்கிரசு கட்சி மற்றும் அதன் தலைவர்களின் பொன்னான ஆட்சியினால் தான்இப்படிப்பட்ட ஒரு கட்டத்திற்கு உ.பி மாநிலம் தள்ளப்பட்டுளது என்பதை நீ சிந்தித்துப் பார்த்தால் ஒருகால் உங்களுக்கு உண்மை விளங்கலாம்.

      ஆகையினால் இன்னும் நீ வெட்கப்படுவதற்கானத் தருணம் வரவில்லை அ()ருமை ராகுல் அவர்களே.. கடந்த காலத்தில் உங்கள் கட்சி விவசாயிகளைச் சுரண்டவதற்காகப் பயன்படுத்திய அதே சட்டங்களையும்,வழிமுறைகளையும் தான் தற்போது மாயாவதி பயன்படுத்தி வருகிறார்.
நீண்ட நெடுங்காலமாக ஆட்சியில் இருந்த உன் கட்சி ஏன் இந்தச் சட்டத்திட்டங்களை மாற்றவில்லை?   மாயாவதி செய்வதை நான் நியாயப்படுத்தவில்லை.மாயாவதி செய்துக் கொண்டிருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாததுதான்.ஆனால் உன் கட்சியின் கடந்தக்கால ஆட்சியையும்தற்போது உன் விமர்சன்ங்களையும் வைத்துப் பார்க்கும் போதுஉன் நோக்கம் மற்றும் நிலைத்தன்மை மீது கேள்வி எழுகிறது.நீ கட்டாயம் வெட்கப்பட வேண்டும்.ஆனால் ஏமாற்றமோ அதிருப்தியோ அடைய வேண்டாம்நான் சில சம்பவங்களை இங்கு எடுத்துக்காட்டாகத் தருகிறேன்


நீ கண்டிப்பாக வெட்கப்பட வேண்டுமா?     .
      சுவிசு வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்ப்பட்டியலை ஏன் கொடுக்க மறுக்கிறார் என்பதை முதலில் பிரணாப் முகர்சியிடம் கேளுங்கள்.
      அசன் அலி மீதான விசாரணையை யார் இழுத்தடிக்கிறார்கள் என்று உன் அம்மாவிடம் கேள்?
      மேலும் கேள்இரண்டாம் அலைக்கற்றை (2G) ஊழலில் 60% பணமூட்டை யாருக்கு கிடைத்தது என்று?
      பொதுவாய விளையாட்டுப் போட்டி ஊழலில் (cwg) சில நூறு கோடிகளைத் தான் கல்மாடி களவாடினார்மீதியை யார் அள்ளிக்கொண்டார்கள்?
      இந்தியன் ஏர்லைன்சை என்ன செய்தீர்கள்ஏன் அது வருமானம் வரும் வழித்தடங்களில் பயனிக்கவில்லைஎன்று பிரபுல் பட்டேலிடம் கேள்உன் கட்சியை சேர்ந்த மந்திரிகளின் வேண்டுமென்றே செய்யப்பட்டத் தவறுகளுக்கு ஏன் வருமான வரி செலுத்தும் மக்கள் ஏர் இந்தியாவிற்கு பணம் செலுத்த வேண்டும்?
      மேலும், உங்களால் ஒரு வானூர்தி சேவையை ஒழுங்காக நடத்த முடியவில்லைநீங்கள் நாட்டை வழிநடத்துவீர்கள் என்று நாங்கள் எப்படி நம்புவது?
      எது / ஏன் உங்களை அமைதியாக வைத்துள்ளது என்று மன்(மண்ணு)மோகன் சிங்கிடம் கேள்?
      கல்மாடியும்.ராசாவும் பலியாடுகள் தான்சில பெரியத் தலைகளின் பெயர்களைக் காப்பாற்றுவதற்காக. 1992 ல் நடந்த பங்குச் சந்தை முறைகேட்டில் எப்படி ஹர்சத் மேத்தாவோ அது போல.
      20,000 க்கும் அதிகமான மக்கள் கொள்ளப்பட்ட போபால் நச்சு வாயுக்கசிவு சம்பவத்தின் குற்றவாளியைத் தப்பிக்க விட்டவர்கள் யார்?
      1984 ல் நடந்த சீக்கியர்களின் படுகொலைக்கு காரணகர்த்தா யார்?
      உயர் நீதி மன்றம் இந்திரா காந்தியின் லோக் சபா வெற்றியை செல்லாது என்று அறிவித்த பின்பும், 76-77 ல் எப்படி நாட்டை அவசர நிலைக் கட்த்திற்குத் தள்ளினார் என்பதையும் படித்துப் பார்அவர் எந்த அளவிற்கு மக்களாட்சியையும் நீதியையும் மற்றும் பத்திரிக்கை சுதந்திரத்தையும் ம(மி)தித்தார் என்பதை என்னால் பந்தயம் கட்ட முடியும்.
      இவற்றிற்கான விடைகள் உனக்கு ஏற்கனவே தெரியும் என்று என்னால் யூகிக்க முடிகிறதுஆக என்னுடையக் கேள்விமாயாவதிஉன் குடும்பம் மற்றும் உன் கட்சி இவற்றில் ஏன் இரட்டை நிலைப்பாடு அல்லது இரட்டை வேடம் கொண்டிருகிறாய்?
      நான் மாயாவதியைக் கண்டிக்கிறேன்ஆனால் அவர் ஒருவரைப் பார்த்துதான் நீ வெட்கப்பட வேண்டுமாஉனக்கு நெருக்கமானவர்களைப் பற்றி என்ன நிலைப்பாடுநாட்டின் முன்னேற்றத்திற்கு(இழிநிலைக்குஅவர்களின் பங்களிப்பானது ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்டது.
      விவசாயிகளிடமிருந்து நிலங்கள் பிடுங்கப்பட்டதைப் பற்றி பேசுகிறாயேஉன் கட்சியின் கீழ் உள்ள விதர்பாவில் எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்அது உன்னை வெட்கப்படச் செய்யவில்லையா?
      உன் கட்சி 72,000 கோடி உருவா விவசாயக் கடன்களை கொடுத்துள்ளதுஆனால் அவை அனைத்தும் விவசாயிகளுக்குப் போய் சேராதக்காரணத்தினால் தானே அவர்கள் தற்கொலைக்கு ஆளாகிறார்கள்.
      ஆக ஏழைக் கிராமவாசிகளுடன் உட்கார்ந்து உணவு உட்கொள்ளுவது போல புகைப்படம் எடுத்து அதன் மூலம் புகழ் தேடஆதாயம் தேட நினைப்பதற்குப் பதிலாகஉன் கட்சியின் கீழ் உள்ள ஆட்சிப் பகுதியில் ஏன் உன் கொள்கைகளை நீ பரிசீலிக்கக் கூடாது?
      பொதுப் பணத்தை எடுத்து விவசாயக் கடன்கள் என்ற பெயரில் கொடுத்து அந்தப் பணத்தைக் கையாடல் செய்த உன் கட்சியைப் பார்த்து வெட்கப்படு.
ஏன் உ.பி-யில் நடந்தக் கைதை மட்டும் விளம்பரப்படுத்துகிறாய்?
      2001 செப்டம்பரில் போசுடன் வானூர்தி நிலையத்தில் வைத்து எஃப்.பி.ஐ (F.B.I) யினால் நீ கைது செய்யப்பட்டாய்உன் நினைவலைகளை சற்று புதுப்பித்துக் கொள் அ()ருமை ராகுல் அவர்களே..
      1,60,000 அமெரிக்க டாலர் பணத்தை எடுத்துச் சென்றீர்கள்ஏன் அவ்வளவு பணத்தை எடுத்துச் சென்றீர்கள் என்று உங்களால் விளக்கம் கொடுக்க முடியவில்லைஉன்னுடன் உனது தோழியான “வெரொனிக் கார்டெல்லி” இருந்தார்.இவர் யார்பிரபல போதைக்கும்பல் தலைவனின் மகள் தானேஇது எதேச்சையான நிகழ்வா என்பது வாசர்களின் சிந்தனைக்கு.
      ஒன்பது மணி நேரம் நீ வானூர்தி நிலையத்திலேயே வைக்கப்பட்டிருந்தாய்பின்னர் திரு.வாஜ்பாய் அவர்களின் தலையீட்டினால் விடுதலை செய்யப்பட்டாய்அதுவும் இங்கு முதல் தகவல் அறிக்கைக்கு ஒப்பான ஒரு வழக்குப் பதிவை எப்.பி.அய் மேற்கொண்டப் பிறகுதான் விடுதலை செய்தார்கள்இந்தக் கைதைக் கண்டுக்கொள்ளாமல் விடும்படி எப்.பி.அய்-யிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதுஇதற்கு பதிலாக உன்னிடமிருந்து கடிதம் ஒன்றை எப்.பி.அய் கேட்டது.
      “உன்னிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை எனில் எஃப்.பி.ஐ-யிடம் இதுப் பற்றி பேச எங்களுக்கு அனுமதி வழங்குங்கள்” என்று உனக்கு எழுதியக் கடிதத்தில் சுப்ரமணிய சாமி குறிப்பிட்டுள்ளார்உன்னிடம் இருந்து எந்த பதிலும் இல்லைஇந்தக் கைது ஏன் முதன்மை செய்தியாக வரவில்லை ராகுல்ஒருகால் “நான் இந்தியனாக இருக்க வெட்கப்படுகிறேன்” என்று நீ ஊடகங்களிடம் சொல்லியிறுக்கலாம்.


      அல்லது நீ போலியானக் கைதைத் தான் வெளிச்சம் போட்டுக் காட்டுவாய். (.பி-யில் நடந்ததுஉண்மையானக் கைதை அல்ல ( போஸ்டனில் நடந்தது). அப்படிதானேதயவுகூர்ந்து பதிலளிக்கவும்.எதாவது ஒரு தருணத்தில் நீ வெட்கப்பட விரும்பினால்தொடர்ந்துப் படிக்கவும்.



2004ல் பிரதமர் பதவியைத் தியாகம் செய்தார் என்று உன் அம்மா அழைக்கப்படுகிறார்.
      இந்தியக் குடியுரிமையியல் சட்டத்தின் படிவெளிநாட்டை சேர்ந்தவர் இந்தியக் குடியுரிமை பெறும் போது அல்லது குடிமகனாக ஆகும் போதுசில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்தியர்களுக்கான அனைத்து சட்டத்திட்டங்களும் அவர்களுக்கும் பொருந்தும் அவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும்.(படிக்கவும் பின்ணிணைப்பு 1&2)
      நீ இத்தாலியில் பிறந்தவராக இருப்பினும் நீ இத்தாலியின் பிரதமராக வரமுடியாது.அதேபோல இத்தாலி நாட்டு குடிமக்களும் இந்தியாவின் பிரதமராக வரமுடியாதுஅவர் இங்கே பிறக்காமல் போனால்.
      மே-17,2004, மாலை 3.30 மணிக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் உன் அம்மாவிற்கு அனுப்பியக் கடிதத்தில் இதே சட்டவிதிகளைக் குறிப்பிட்டுள்ளார்அதே நாளில் மாலை 5 மணிக்கு பதவி ஏற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.கடைசி நேரத்தில் மன்(மண்ணுமோகன் சிங் உள்ளே இழுத்து வரப்பட்டார்உன் அம்மாவால் இயற்றப்பட்ட மற்ற தியாகம் செய்யும் நாடகங்கள் அனைத்தும் ஒரு கண் துடைப்பே.
      இப்படி இருக்கும் போதுஉன் அம்மாவே வெவ்வேறு மக்களவை உறுப்பினர்கள் கையொப்பம் இட்ட 340 ஆதரவுக் கடிதங்களைக் குடியரசுத் தலைவர் திரு.கலாம் அவர்களுக்கு அனுப்பி வைத்திருந்தார்.
      அதில் ஒரு கடிதத்தில்சோனியா காந்தியாகிய நான் ரேய் பாரலியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுபிரதமராக ஆவதற்கு இக்கடிதத்தின் மூலம் முன்னிலைப்படுத்த விழைகிறேன்.
      ஆக உன் அம்மாவிற்கு உண்மைத் தெரியும் வரை அல்லது சட்டச்சிக்கல் தெரியும் வரை அவர் மிகவும் விருப்பத்துடனேயே இருந்திருக்கிறார் என்பது இதன் மூலம் தெரிகிறதுஆக உன் அம்மா எந்தத் தியாகங்களையும் செய்யவில்லைஅவரால் பிரதமராக ஆகமுடியாது என்பதே உண்மை நிலைமை.
      இதைப் பார்த்து நீ வெட்கப்பட்டிருக்கலாமே அ()ருமை ராகுல் அவர்களே!!!
உங்களைப் பற்றி சற்றுச் சிந்தியுங்கள்
      ஆர்வார்ட் பல்கலைக்கழகத்தில் கட்டணக்கல்விப் பிரிவிலே நீ சேர்ந்தாய்.அதே ஆண்டு ராசீவ் காந்தி ஆட்சி அதிகாரத்தில் இருந்த போதுஆர்வார்ட்க்கு 11 மில்லியன் டாலர் இந்துசா சகோதரர்களால் கொடுக்கப்பட்டதுபிறகு 3மாதத்தில் நீ அந்தப் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டாய்.இதில் வருத்தம் என்னவெனில் அந்த நேரத்தில் மன்(மண்ணு)மோகன் சிங் ஆர்வார்டின் தலைமைப் பொறுப்பில் இல்லைஇல்லையெனில் உனக்கு வாய்ப்புக் கிடைத்திருந்திருக்கும்.என்ன செய்ய உன் கெட்ட வாய்ப்புஒரே ஒரு மண்ணுமோகன் சிங் தான் உள்ளார்.
      ராசீவ் கொலை செய்யப்பட்டக் காரணத்தினாலேயே நீ ஆர்வார்டிலிருந்து நீக்கப்பட்டாய் என்றும் சிலக் கருத்து நிலவுகிறதுஇருக்கலாம்ஆனால் பிறகு என்ன மயித்துக்கு நீ பொருளாதார வல்லுனர்னு பொய்ப்பேசித் திரியிர.அதுவும் ஆர்வார்டிலிருந்து.
      நீ இந்தி தேர்விலும் தேர்ச்சிப் பெறவில்லைஆனால் நீமிக அதிக அளவில் இந்திப் பேசப்படும் மாநிலத்தில் இருந்து முன்னிருத்தப்பட்டிருக்கிறாய்.
உன் அம்மாவின் கல்வித் தகுதி
      கேம்பிரிட்சு பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் பயின்றதாக வேட்புமனுத் தாக்கலின் போது தன்னுடையக் கல்வித் தகுதியில் உன் அம்மாக் குறிப்பிட்டுள்ளார். [பார்க்க பின்ணிணைப்பு-6,7,-37]
      கேம்பிரிட்சு பல்கலைக்கழகத்தைப் பொருத்தமட்டில்சோனியா என்றப் பெயரில் ஒரு மாணவரும் படிக்கவில்லை என்று சொல்லிவிட்டது.[பார்க்க பின்ணிணைப்பு-7-39]. இது தொடர்பாக சுப்பரமணியசாமி தொடர்ந்த வழக்கில்,சோனியா தனது வேட்புமனுத் தாக்கலின் போது கேம்பிரிட்சு பல்கலைக்கழகம் தொடர்பான சர்ச்சையை விட்டுவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
      சோனியா உயர்நிலைக் கல்வியையேத் தாண்டவில்லைவெறும் அய்ந்தாவது மட்டுமே தேர்ச்சிப் பெற்றவர்இந்தச் சூழ்நிலையில் அவர் தன் கல்விப் பின்புலத்தை தனது இரண்டாம் அலைக்கற்றை வழக்கின் குற்றவாளி கருநா(ய்)நிதியுடன் பகிர்ந்துக் கொள்கிறார்.
      நீயும்உன் அம்மாவும் உங்களுடைய கல்வித் தகுதியை பொய்யாகக் காட்டியுள்ளீர்கள்பிறகு “அரசியலிலே படித்த இளைஞர்கள் வேண்டும்” என்று வேறு சொல்லுகிறீர்கள்காந்தி தென் ஆப்பிரிக்கா சென்று தனது பட்டப்படிப்பை முடித்து முதல் மாணவராக தேர்ச்சிப் பெற்றுபின்பு தென் ஆப்பிரிக்க மக்களுக்காக அவற்றை விடுத்து போராடினார்.பின்புதான் இந்தியாவிற்காக போராடினார்.
ஏன் கல்வித் தகுதியைப் பொய்க் கூறவேண்டும்
      தலைசிறந்த தலைவராக வருவதற்கு கல்வித் தகுதி தேவையில்லை தான்ஆனால் பிறகு ஏன் நீயும் உன் அம்மாவும் பொய்யான கல்வித்தகுதியைக் காட்ட வேண்டும்.
      உனது கல்வித் தகுதியில் பொய் பேசியதற்காக நீ வெட்கப்பட்டிருந்திருக்க வேண்டும்இப்படி பொய் பேசியதற்கு உன்னிடம் காரணம் இருக்கிறது என்று எனக்குத் தெரியும்காரணம் இந்தியாவில் நாங்கள் கல்வியை மதிக்கின்றோம்.ஆனால் நீ ஒரு முன்மாதிரி இளைஞனாக இருக்கும் போது யார் கல்வியைக் கருத்தில் கொள்கிறார்கள்?
முன்மாதிரி இளைஞர்
       நீ உன்னுடைய 38வது அகவையில் தான் முதல் முறையாக உள்ளூர் தொடர்வண்டியில் பயணப்பட்டாய்தேர்தல் பரப்புரைக்காக சில சிற்றூர்களுக்கு சென்றாய்.அதனால் முன் மாதிரி இளைஞர் என்ற பட்டத்தை வென்றுள்ளாய்.
      அன்றாடம் 25 மில்லியன் மக்கள் தொடர்வண்டியில் பயணிக்கின்றார்கள்.நீ தான் முதல் ஆள்தொடர்வண்டியில் பயணித்ததற்காக முன் மாதிரி இளைஞர் என்ற பெயரைப் பெற்றுள்ளாய்ஆயிரமாயிரம் அஞ்சலக ஊழியர்கள் அஞ்சல்களை எடுத்துக்கொண்டு பல சிற்றூர்களுக்கு செல்கின்றார்கள்அவர்களில் யாருக்கும் முன் மாதிரி இளைஞர் என்ற பெயர் இதுவரைக் கிடைக்கவில்லைநீ இளைஞனுமல்லமுன் மாதிரயான ஆளுமல்லஆனால் இன்னும் நீ முன் மாதிரி மற்றும் இளைஞர்களாக இருக்கக் கூடிய ராகுல் டிராவிட் போன்ற போட்டியாளர்களை தோற்கடிக்கிறாய்.
      சேக்சுபியர் சொல்கிறார்பெயரில் என்ன இருக்கிறது என்றுஅவருக்கு ஒன்றுமே தெரியவில்லைஎல்லாமே பெயரில்தான் இருக்கிறதுஅதுவும் குடும்பப்பெயரில்.
உன்னுடைய குடும்பப் பெயரைப் பற்றி பேசுவோம்.
      நீ உண்மையாகவே காந்தியை மதிக்கிறாயாஅல்லது பணத்தில் அவரது சிரித்தப் படம் இருக்கிறது என்பதற்காகவா?ஏனெனில் உன்னுடையக் கடவுச்சீட்டில் உன் பெயர் ராகுல் காந்தி அல்லராகுல் வின்சி. நீ காந்தி என்று உன் குடும்பப் பெயரை எழுதியிருந்தால் அந்த வார்த்தைத் தரும் உணர்ச்சிகள் என்ன என்பதை பட்டறிந்து உணர்ந்திருப்பாய்உன் குடும்ப மக்கள் தான் காந்தி என்ற பெயரை தேர்தலில் போட்டியிடும் நேரத்தை தவிரமற்ற நேரங்களில் அதிகம் பயன்படுத்துவதில்லைஅங்கதானே முழு அர்த்தமும் அடங்கியிருக்குகொஞ்சம் சிந்தித்துப் பார் உன்னுடையப் பெயரை ராகுல் வின்சி என்று வைத்துக் கொண்டுத் தேர்தலில் போட்டியிட்டால்...!
      உலகப்புகழ் பெற்ற தலைவர்களான நெல்சன் மண்டேலாஇளைய மார்டின் லூதர் கிங் மற்றும் சான் லெனான் போன்று காந்தியும் ஒருவர்அவர் பெயரைக் கலங்கப்படுத்துவதுதான் வருத்தமாக இருக்கிறதுஉன் நேருக் குடும்பம் மற்றும் உன் கட்சியை சேர்ந்தவர்களால்மேற்குறிப்பிட்டத் தலைவர்களைப் போல் மக்களை வசிகரிக்க இயலாதக் காரணத்தால்தேர்தலில் போட்டியிடும் போது மட்டும் காந்தியின் பெயரைப் பயன்படுத்துவதுஆனால் கடவுச்சீட்டில் வசதியாக வேறு ஒரு பெயரைப் பயன்படுத்திக் கொள்வதுஉன்னுடைய இந்த இரட்டை நிலைத் தன்மைக் குறித்து நீ வெட்கப்படலாமே.
அரசியலில் இளைஞர்கள்
       இப்போது நீ அரசியலுக்கு இளைஞர்கள் வர வேண்டும் என்கிறாய்நீ முதலில் அரசியலில் சேர்ஏனெனில் நீ இன்னும் அரசியலில் சேரவில்லைநீ சேர்ந்திருப்பது குடும்பத் தொழிலில்.
      முதலில் நீ அரசியலிலே சேர்ந்து ராகுல் காந்தி என்றப் பெயரைப் பயன்படுத்தாமல் ராகுல் வின்சி என்றப் பெயரைப் பயன்படுத்தி தேர்தலில் போட்டியிட்டு வென்றுக்காட்டுபிறகு வந்து இளைஞர்களையும் படித்தவர்களையும் அரசியலிலே ஈடுபடக் கூப்பிடு.
பின்குறிப்பு:-         
எனக்கு வந்த மின்னஞ்சலில்,      இந்த கடைசிச் சொல்லுக்கு முன் உள்ள “ஈடுபடக்” என்னும் வரையில் தான் இருந்தது.  கட்டுரையை முடிப்பதற்காக “கூப்பிடு” என்னும் சொல்லைப் பயன்படுத்திக் கொண்டேன்.
மற்றும், இடையிடையே வரும் “பின்னிணைப்பு” களும் எனக்கு வரவில்லை. அதனால் எதையும் நான் இணைக்கவில்லை.

Jul 26, 2011

நிலாச்சோறு



 நீ 
தயாராகவே தான்
இருக்கிறாய்.

உன்னைக் காட்டி
சோறூட்ட
தாயவளுக்கு தான்
நேரமில்லை.

***

Jul 20, 2011

கரையாதச் சொற்கள்-1



தினமும்
வந்து போகிறேன்
என்றோ இட்ட
கோலம்
பொலிவற்று கிடக்கிறது
வாசலில்...

நீ
தேடும் நாளில்
நான்
வந்து வந்து போனதற்கான
வடுக்கள்
வாசலில் நிறைந்திருக்கும்

அந்த
கோலம் போல!

*


அலைகளற்ற நீரில்
கரையிலிருந்து குதிக்கும்
தவளையைப் போல
கவலையற்ற மனதில்
காத்திருந்து குதித்து விடுகிறது

உன்
நினைவுகள்...!

*

Jul 5, 2011

குழப்ப தெய்வம்



காற்றுக்கு அசையும்
நாற்றினைப் போல்
உன்
கூற்றுக்கு அசைந்தபடியே


என் ஜீவன்!

*
*
*
 நேர்த்திக்கடன் செலுத்த
கோயிலுக்குப் புறப்பட்டோம்.
கூடவே 
உன் நினைவும்...

குழப்பத்தில்
குலதெய்வம்!