Sep 11, 2009

"ச்சீ..ச்சீ "


ஓர் மதியவேளை.

உணவிற்குப் பின்
வேலைத்தளத்தில்
ஓய்வாய் படுத்திருக்கையில் ...

அருகே சிறு புதரில்
இரு சிட்டுக் குருவிகள்
விட்டு விட்டு
"கீச்... கீச் ..."
"ச்சீ...ச்சீ..." என
சிணுங்கல் ஒலியெழுப்பி
விளையாடிக் கொண்டிருந்தது.

புதரினை
உற்றுப் பார்த்தேன்.
சற்று நேரம்
அங்கே மௌனம்!

கண்டு கொண்டேன்.
காதலும், கூடலும்
அதுகளின்
களி விளையாட்டு.

கண்களை மூடி
காதுகளைத் திறந்து வைத்தேன்.

மீண்டும்
"கீச்...கீச்..."!
நான் உறங்கிவிட்டதாய்
அழைக்கிறது - ஆண்குருவி.

மீண்டும்
"ச்சீ...ச்சீ..."!
என் காதுகள்
உறங்கவில்லையென
எச்சரிக்கிறது - பெண்குருவி.

ஐந்தறிவுக் குருவியே
அருகில் ஆள் இருப்பதை
அறிந்து நாணம் கொள்கிறது.

பொது இடங்களிலும்
பொதுப் போக்குவரத்து
வாகனங்களிலும்
பயண நேரங்களில் ......
பக்கத்து இருக்கைக்
கூத்துக்களைக் கண்டு....

நம்ப முடியவில்லை
என்னால்!
மனிதனுக்கு ஆறறிவாம்...?!

18 comments:

 1. மானங்கெட்டவர்கள்...

  ஆறறிவு இருக்குன்னு யார் சொன்னது

  நாலறிவுதான் இருக்கு...

  நச்சுன்னு சொல்லிட்டீங்க சத்ரியன்

  ReplyDelete
 2. சந்தர்ப்பச் சூழ்நிலை என்று தான் கொள்ள வேண்டும்.

  ReplyDelete
 3. //மானங்கெட்டவர்கள்...
  ஆறறிவு இருக்குன்னு யார் சொன்னது
  நாலறிவுதான் இருக்கு...
  நச்சுன்னு சொல்லிட்டீங்க சத்ரியன்//

  வசந்த்,

  அப்ப இவ்வளவு நாளா நாந்தான் ஏமாந்திருந்திட்டனோ? வசந்த்து மட்டும் சொல்லாம விட்டிருந்தீங்க நம்பி நாசமா போயிருப்பேன்.

  ReplyDelete
 4. //சந்தர்ப்பச் சூழ்நிலை என்று தான் கொள்ள வேண்டும்.//

  வாங்க லோகு,

  ரொம்ப சின்னவரா இருக்கீங்க. (புகைப்படத்துலப்பா‍ ‍ சுய விவரம் படிச்சிட்டனே!)

  பொது இடங்களில் "நாய்கள் மாதிரியான செயல்களை"யா சூழ்னிலையெனக் கொள்ள முடியும்?

  ReplyDelete
 5. அருமைங்கோ
  அருமையிலும் அருமை
  எதார்த்தம் பிளஸ் மொழி உங்கள் கவிதைக்கு அழகு சேர்ப்பது

  ReplyDelete
 6. ஆமாம் வெட்கமில்லை போலும். நானும் இவ்வாறானவர்களை கண்டு தலையில் அடித்துக் கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
 7. வேணாம் சத்ரியன் இதைப்பற்றிக் கதைச்சால் ஒரு பதிவே போடலாம்."ச்சீ..ச்சீ "" விடுங்கோ வெட்கம் கெட்டதுகளை.

  கவிதை சிந்தனை அழகாயிருக்கு.

  ReplyDelete
 8. //அருமைங்கோ
  அருமையிலும் அருமை
  எதார்த்தம் பிளஸ் மொழி உங்கள் கவிதைக்கு அழகு சேர்ப்பது//

  பாலா,

  நம்ம மொழி எல்லாத்துக்கும் அழகு தான்.

  ReplyDelete
 9. //ஆமாம் வெட்கமில்லை போலும். நானும் இவ்வாறானவர்களை கண்டு தலையில் அடித்துக் கொண்டிருக்கிறேன்.//

  யாழினி,

  என் வயித்தெரிச்சலை எழுத போய், நீங்க ஏன் தலையில அடிச்சிக்கிட்டு? இது நான் என் கிராமத்தை விட்டு , வெளிநாட்டிற்கு வேலைக்கு வந்த புதிதில் "அங்கே" காணாத காட்சிகளை "இங்கே" கண்டதில் எழுதியது.

  ReplyDelete
 10. //வேணாம் சத்ரியன் இதைப்பற்றிக் கதைச்சால் ஒரு பதிவே போடலாம்."ச்சீ..ச்சீ "" விடுங்கோ, வெட்கம் கெட்டதுகளை.

  கவிதை சிந்தனை அழகாயிருக்கு.//

  ஹேமா,

  அப்போ "ச்சீ..ச்சீ ", என்ற தலைப்பில் ஒரு கச்சேரியை ஆரம்பிச்சிடுவோமா?

  ReplyDelete
 11. கலக்கலா இருக்கு சத்ரியன். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. சத்ரியன்,வந்திடுங்கோ குழந்தை நிலாவுக்கு பத்து வரங்கள் எடுக்க.

  //அப்போ "ச்சீ..ச்சீ ", என்ற தலைப்பில் ஒரு கச்சேரியை ஆரம்பிச்சிடுவோமா?//

  அய்யோ....ஆளை விடுங்க.வாயைக் கிளறாம.

  ReplyDelete
 13. //கலக்கலா இருக்கு சத்ரியன். வாழ்த்துக்கள்//

  நன்றி நவாஸ்.

  ReplyDelete
 14. //சத்ரியன்,வந்திடுங்கோ குழந்தை நிலாவுக்கு பத்து வரங்கள் எடுக்க.

  //அப்போ "ச்சீ..ச்சீ ", என்ற தலைப்பில் ஒரு கச்சேரியை ஆரம்பிச்சிடுவோமா?//

  அய்யோ....ஆளை விடுங்க.வாயைக் கிளறாம.//

  ஹேமா,

  வாரேன்.ஆனா, ஊருக்குப் போகிறதால‌ (இரண்டு வார விடுப்பில்) அவசரம் அவசரமாக சில அலுவல்களை முடிக்க வேண்டியுள்ளது.அதில் உழன்றுக் கொண்டிருக்கிறேன்.முயற்சிக்கிறேன். இல்லையென்றால் திரும்பி வந்த பின் தொடர்கிறேன்.

  ReplyDelete
 15. //அருமை...//

  வாங்க ஆனந்த்,

  ஹேமாவிற்குச் சொல்லியிருக்கும் அதே காரணத்தால் வலைகளைச் சுற்றிப் பார்க்க இப்போதைக்கு நேரமில்லை. விரைவில் வருகிறேன் நண்பா!

  ReplyDelete
 16. நல்லா இருக்கு சத்ரியன்.

  ReplyDelete
 17. அன்பின் சத்ரியன்

  கீச் கீச் - ச்சீ ச்சீ - எப்போழுதும் பெண் தான் கவனமாக இருப்பாளா ....

  நண்பா - அயலகக் கலாச்சாரம் வேறு - தாயகக் கலாச்சாரம் வேறு. இங்கே காணாததை அங்கே கண்டால் - அதனை அச்சூழ்நிலையுடன் ஒட்டிப் பார்க்க வேண்டும். தவறெனக் கவிதை எழுதக் கூடாது. சிட்டுக்குருவிகள் காத்லும் கூடலும் இயல்பானவை நண்பா

  நல்வாழ்த்துகள் சத்ரியன்

  ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.