Sep 6, 2009
புதுப் பட்டியல்
பிச்சை எடுக்க
திருவோடு ஏந்தி
வருவது தானே வழக்கம்?
கடந்த
கால் நூற்றாண்டுக் காலமாக
பழத் தட்டேந்தி வருகிறார்கள்.
உழைத்து வாழ
வக்கற்றவனுக்கு
மணவாழ்க்கை என்ன
ம்ம்...யிருக்கா?
வாழ்க்கைத் துணையாய்
வருபவளுக்கு
உணவும்,உடையும் - தனது
உழைப்பால் கொடுக்க
முடியாதவனுக்கு
மனைவி என்பவள் எதற்கு?
இரவுக் கழிவு
வெளியேற்ற இயக்கத்திற்கா?
இத்தனைக்காலம் பழகிப்போனதை
இனி மாற்றுவதெப்படி
என வினவும்
மனம் முடமாகிப் போன
மானங்கெட்ட இளைஞனா நீ?
உனக்காகச் சொல்கிறேன்.
இனி
வழக்கமாய் கேட்கும்
வரதட்சணைப் பட்டியலில்
புதிதாய் இதையும்
இணைத்துக் கொள்.
மனைவியாய்
வரவிருப்பவளிடம்
வரதட்சணையாக
இரு பிள்ளைகளும்
பெற்றுக் கொண்டு
வந்து விடச் சொல்.
தாம்பத்தியச் சிரமம்
சிறிதுமின்றி
"நான்தான் அதுகளின்
தகப்பன் ",எனச்
சொல்லித் திரியலாம்
சொரணையின்றி......!
அடுத்தவன் உழைப்பிற்கு
ஆசைப்படுபவன் தானே நீ?
Subscribe to:
Post Comments (Atom)
உங்கள் சமூகச் சிந்தனை,மிகவும் அருமை.வரதட்சனை வாங்குவோருக்கு ஒரு சாட்டை அடி...
ReplyDeleteஎன்ன சத்ரியன், காதலில் இருந்து கல்யாணத்துக்கு வந்தாச்சா? கலக்குரீங்க போங்க...
நான்,ஹேமா மற்றும் நம் நண்பர்கள் காதலை சொல்ல சொல்லி கத்திக் கொண்டிருந்தோம். நீங்க அவங்க பொற்றோரிடமே சொல்லீட்டிங்க போல.
பத்திரிக்கை கொடுத்தனுப்பங்க சத்ரியன்
வரதட்சணை கேட்க்கும்
ReplyDeleteஇவர்களுக்கும்
வர தட்சணை கேட்க்கும்
அவர்களுக்கும்
பால் மட்டுமே
வித்தியாசம்
//மனைவியாய்
ReplyDeleteவரவிருப்பவளிடம்
வரதட்சணையாக
இரு பிள்ளைகளும்
பெற்றுக் கொண்டு
வந்து விடச் சொல்.//
ஆகா... நச் நச் நச்...... என்னப்பா சவுக்கால அடிக்கிறீங்க... வலிக்குப்பா.. நன்றாக இருக்கு நண்பா
கிளாஸ் சகோதரா......
ReplyDeleteகைத்தட்டல்களும் பாராட்டுக்களும்....
ReplyDelete//மனைவியாய்
ReplyDeleteவரவிருப்பவளிடம்
வரதட்சணையாக
இரு பிள்ளைகளும்
பெற்றுக் கொண்டு
வந்து விடச் சொல்.
தாம்பத்தியச் சிரமம்
சிறிதுமின்றி
"நான்தான் அதுகளின்
தகப்பன் ",எனச்
சொல்லித் திரியலாம்
சொரணையின்றி......! //
அற்புதமான வரிகள்...
//நான்,ஹேமா மற்றும் நம் நண்பர்கள் காதலை சொல்ல சொல்லி கத்திக் கொண்டிருந்தோம். நீங்க அவங்க பொற்றோரிடமே சொல்லீட்டிங்க போல.
ReplyDeleteபத்திரிக்கை கொடுத்தனுப்பங்க சத்ரியன்//
அரங்க பெருமாள்,
உங்களை எல்லாம் அழைக்காமலா? கொஞ்சம் பொருத்திருங்கள்.
நிஜமாவே கலக்கவிருக்கிறேன்
//வரதட்சணை கேட்க்கும்
ReplyDeleteஇவர்களுக்கும்
வர தட்சணை கேட்க்கும்
அவர்களுக்கும்
பால் மட்டுமே
வித்தியாசம்//
ஜமால்,
கொஞ்சம் குழப்பமாயிருக்கே.
சத்ரியன் நல்ல சிந்தனைதான்.
ReplyDeleteஅருமையா இருக்கு.ஆனா சொல்றபடி நடந்தும் காட்டணும்.சரியா !பாருங்க ஞானம் வலிக்குதுங்குகிறார்.
சரி...சரி வாங்க உப்புமடச் சந்திக்கு ஒருக்கா.கூப்பிட்டு இருக்கிறேன்.
//ஆகா... நச் நச் நச்...... என்னப்பா சவுக்கால அடிக்கிறீங்க... வலிக்குப்பா.. நன்றாக இருக்கு நண்பா//
ReplyDeleteவாங்க ஞானசேகரன்,
வடிக்கிற, படிக்கிற நமக்கே இவ்வளவு ஆத்திரம் வரும்போது, வரதட்சணைக் கேட்டு வருபவன்களைக் கண்டால் ,பாவம் பெண் பிள்ளையைப் பெற்றிருக்கும் ஏழைப் பெற்றோர்கள் எவ்வளவு ஆத்திரப் படுவார்கள்.
இதைப்படித்த பின்னும் எவன் ஒருவன் வரதட்சணைக் கேட்கிறானோ அவன் "ஆண் பால்" பிறவியாய் இருக்க மாட்டான்.
//கிளாஸ் சகோதரா......//
ReplyDeleteவசந்த்...,
எனக்கேதும் "ப்ராக்ரஸ்" அட்டை உண்டா?
//கைத்தட்டல்களும் பாராட்டுக்களும்....//
ReplyDeleteவசந்த்,
எழுதியதற்கா?
நன்றிப்பா.
அதென்ன போன வாரத்துல இளைஞனா இருந்தீங்க.இந்த வாரம் குழந்தையாகிட்டீங்க. ம்ம்ஊஹூம்ம்ம்ம்...ஒன்னும் புரியல!
//மனைவியாய்
ReplyDelete..........
..........
சொல்லித் திரியலாம்
சொரணையின்றி......! //
அற்புதமான வரிகள்...
வாங்க கோபி,
உங்கட ஊரிலேயும் இப்பல்லாம் வரதட்சணை கேக்கிறாங்களாமே. தமிழன் இன்னும் சொரணையோட அங்கதான் இருக்கிறதா நெனைச்சிருந்தேன்...!
ம்ம்ம்ம்...!என்னத்த சொல்ல போங்க...!
வாங்கப்பா. எப்பவும் வரணும். வந்து இன்னும் கொஞ்சம் உசுப்பேத்தி விடுங்க.
வருகைக்கும் , கருத்திற்கும் நன்றி.
//சத்ரியன் நல்ல சிந்தனைதான்.
ReplyDeleteஅருமையா இருக்கு.ஆனா சொல்றபடி நடந்தும் காட்டணும்.சரியா !பாருங்க ஞானம் வலிக்குதுங்குகிறார்.
சரி...சரி வாங்க உப்புமடச் சந்திக்கு ஒருக்கா.கூப்பிட்டு இருக்கிறேன்.//
ஹேமா,
ஒரு திருத்தம். எழுதினபடி நடந்தும் காட்டனும்.அதானே?
அப்படியே நடந்தும் காட்டினால் என்ன தருவீர்கள்?(தட்சணையாக அல்ல)
கவிதைக்கு பொய்யும் அழகுதான்.என் எல்லா கவிதைக்கும் அல்ல.
உழைக்க பலமும்,சார்ந்த்வர்களை வாழ வைக்கும் திறமும் என் பெற்றோர்கள் நிறைய ஊட்டி வளர்த்திருக்கிறார்கள்.
மனைவியாய்
ReplyDeleteவரவிருப்பவளிடம்
வரதட்சணையாக
இரு பிள்ளைகளும்
பெற்றுக் கொண்டு
வந்து விடச் சொல்
சரியான சாட்டை அடி
பிரமாதம் பாஸு
ReplyDeleteபுதுமையான வார்த்தை கோர்ப்புகள்
அசந்தேன்
குறிப்பாக
"உழைத்து வாழ
வக்கற்றவனுக்கு
மணவாழ்க்கை என்ன
ம்ம்...யிருக்கா?"
"இரவுக் கழிவு
வெளியேற்ற இயக்கத்திற்கா?"
"
தாம்பத்தியச் சிரமம்
சிறிதுமின்றி
"நான்தான் அதுகளின்
தகப்பன் ",எனச்
சொல்லித் திரியலாம்
சொரணையின்றி......!
அடுத்தவன் உழைப்பிற்கு
ஆசைப்படுபவன் தானே நீ?"
யப்பா யப்பா அருமையப்பா
தாம்பத்தியச் சிரமம்
ReplyDeleteசிறிதுமின்றி
"நான்தான் அதுகளின்
தகப்பன் ",எனச்
சொல்லித் திரியலாம்
சொரணையின்றி......!
போக போக இது நடந்தாலும் நடக்கலாம்
//மனைவியாய்
ReplyDelete...............
வந்து விடச் சொல்
சரியான சாட்டை அடி//
காயத்ரி,
இனிமேல் திருமணம் செய்யவிருப்பவர்களுக்குத் தானே!
//பிரமாதம் பாஸு
ReplyDeleteபுதுமையான வார்த்தை கோர்ப்புகள்
அசந்தேன்
குறிப்பாக
"உழைத்து வாழ
வக்கற்றவனுக்கு
மணவாழ்க்கை என்ன
ம்ம்...யிருக்கா?"//
பாலா,
உங்களுக்கும் இன்னும் கல்யாணம் ஆகலையின்னு கேள்விப்பட்டேன்.
ஞாபகமிருக்கட்டும்...!
//தாம்பத்தியச் சிரமம்
ReplyDeleteசிறிதுமின்றி
"நான்தான் அதுகளின்
தகப்பன் ",எனச்
சொல்லித் திரியலாம்
சொரணையின்றி......!
போக போக இது நடந்தாலும் நடக்கலாம்...//
காயத்ரி,
ரொம்பவும் உணர்ச்சி வசப்படறீங்க போல! பொதுவா பெண்கள் பொறுமையானவங்கன்னு ஒரு பேச்சு உண்டு.
தங்கச்சி எப்படி?
அசத்தலாக இருக்கின்றது...
ReplyDeleteகவி வரிகளைக் கொண்டு சவுக்கால் அடித்திருக்கிறீர்கள்.
ReplyDeleteஆனால் வரதட்சனை வாங்குவது எவ்வளவு மகா மகா மட்டமான செயல் என்ற உங்களது சிந்தனையை நினைத்தால் பெருமையாக இருக்கிறது சத்ரியன். உங்களது வாழ்க்கை வளமாக அமைய என் வாழ்த்துக்கள்!
யப்பே...! பயங்கரமாக ஆளுண்ணே நீங்க..!
ReplyDelete//அசத்தலாக இருக்கின்றது...//
ReplyDeleteவாங்க சந்த்ரு,
ரொம்ப நாளாச்சு எங்கட திசை வந்து. நானும் வந்திருந்தேன் உங்கட வீட்டுக்கு. நீங்க எக்கச்சக்கமான வே(வ)லையா இருக்கீங்க. நல்லது.
//யப்பே...! பயங்கரமாக ஆளுண்ணே நீங்க..!//
ReplyDeleteவணக்கம் (லக்)கலக்கலப்ரியா,
கையில கோடாரி, கம்புகளுடனா காட்சி தர்றேன். அப்புறம் ஏன் பயங்கரம்? உண்மையில நான் ரொம்ப சாது.அதாவது பயந்தாங்கொள்ளி.உங்க(!?) புகைப்படத்துல காதோரம் தொங்குற 'லோலாக்கு'ஐ (ஜிமிக்கி..ன்னு நெனைக்குறேன்) பார்த்தே பயந்துட்டேன் தெரியுமா?
//கவி வரிகளைக் கொண்டு சவுக்கால் அடித்திருக்கிறீர்கள்.//
ReplyDeleteவணக்கம் யாழினி,
ஒவ்வொருவரும் தானாகவே உணரவேண்டியதைக் கூட இப்படி பதிவு போட்டு சொல்ல வேண்டியுள்ளது நம்மின் சாபக்கேடு.
உங்களின் வாழ்த்திற்கு நன்றி.
கவிதை சாட்டையடி.
ReplyDelete//கையில கோடாரி, கம்புகளுடனா காட்சி தர்றேன். அப்புறம் ஏன் பயங்கரம்?//
ReplyDeleteஏனுங்க இதுக்கெல்லாம் யார் இந்தக் காலத்ல பயப்டறா..? அதுவும் நேனு..? ஹிஹி..
// உண்மையில நான் ரொம்ப சாது.அதாவது பயந்தாங்கொள்ளி.உங்க(!?) புகைப்படத்துல காதோரம் தொங்குற 'லோலாக்கு'ஐ (ஜிமிக்கி..ன்னு நெனைக்குறேன்) பார்த்தே பயந்துட்டேன் தெரியுமா?//
நிஜம்மாவே நீங்க பய(ங்கர)மான ஆளுண்ணே..
அன்பின் சத்ரியன் - வரதட்சனைக் கொடுமை தாங்க முடியாத நிலைக்குச் சென்று விட்டது - வெள்ளி தங்க விலையேற்றம் பெண்களைப் பெற்றவர்களின் துயரத்தை அதிகரித்து விட்டது. ம்ம்ம்ம்ம் - என்ன செய்வது ... ஆறுதலான செய்தி - மாப்பிள்ளைகளை விட பெண்கள் இப்பொழுது குறைந்த எண்ணிகையில் தான் இருக்கிறார்கள். நட்புடன் சீனா
ReplyDelete