Aug 17, 2009

மீள்பார்வை




உலகம் சுழலும்
இத்தனை பரபரப்பிலும்
உனக்காக ஒதுக்கி
நான் தனித்திருக்கும்
தருணங்கள்

பின்னோக்கி
நிதானித்துச் சுழலும்
நினைவின் நொடிகளைத்
துரிதப்படுத்த
விரும்பவில்லை
மனம் ...!


7 comments:

  1. சத்ரியன் நீங்க தனிய இருந்தாலும் சரி,நேரத்தை நிப்பாட்டினாலும் சரி முதல்ல சொல்லுங்கோ அவங்க உண்மையா இருக்காங்களான்னு.
    அப்பத்தான் வருவாங்க.வரிகள் காதல்.

    உப்புமடச்சந்திக்கு வாங்கோ.

    ReplyDelete
  2. வளச்சு..வளச்சு... கூவுரீங்களே, அந்தப் புள்ளைக்கு தெரியுமா உங்களின் மனம்.. என்ன சத்ரியன் எனக்கு என்னமோ கொஞ்சம் கவலையா இருக்கு. ஒன்று மட்டும் சொல்லுவேன்,தீர்ப்பு வரும் வரை உங்கள் குரல் ஒலிக்க வேண்டும்.

    ReplyDelete
  3. //நீங்க தனிய இருந்தாலும் சரி,நேரத்தை நிப்பாட்டினாலும் சரி முதல்ல சொல்லுங்கோ அவங்க உண்மையா இருக்காங்களான்னு//

    ஹேமா,

    என்னிடமிருந்து என்ன பதிலை எதிர்ப்பார்க்கிறீர்கள்? கவிதைக்கு பொய்யும் அழகுதானே?! அதனால், கவிதையும்... உண்மையும்...!

    ReplyDelete
  4. //வளச்சு..வளச்சு... கூவுரீங்களே, அந்தப் புள்ளைக்கு தெரியுமா உங்களின் மனம்.. என்ன சத்ரியன் எனக்கு என்னமோ கொஞ்சம் கவலையா இருக்கு...//



    ஐயைய்யோ... பெருமாள்,

    என் மனம் எல்லோருக்கும் தெரியுட்டுமேன்னுதான் இனையத்துல எழுத ஆரம்பிச்சேன். (ஆனா அவங்களுக்குத் தெரியுமான்னு தெரியல).இறங்கிட்ட அப்புறம் கவலைப்பட்டா எப்படி? அதையெல்லாம் நான் பாத்துக்கறேன்.

    உலகத்தின் வெவ்வேறு திசைகளிலிருந்தும் என்மேல பாசம் வெச்சிருக்கிறீங்க. என் உள்ளத்திலயே இருந்துகிட்டு என்னை வெறுக்கிறதுதான் விந்தையாத் தெரியுது.

    ReplyDelete
  5. ////உலகம் சுழலும்
    இத்தனை பரபரப்பிலும்
    உனக்காக ஒதுக்கி
    நான் தனித்திருக்கும்
    தருணங்கள்///

    எல்லோரையும் போல அவங்களுக்ககாத் தானா?... அல்லது வழமையாக ஏறும் பஸ் வண்டிக்காகவா?....

    நல்லா இருந்தது கவி வரிகள்.... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  6. தற்பொழுதான் உங்கள் தளத்திற்கு வந்துள்ளேன் நல்ல சொல்லாடல்... வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete
  7. //தற்பொழுதான் உங்கள் தளத்திற்கு வந்துள்ளேன் நல்ல சொல்லாடல்... வாழ்த்துகள் நண்பரே//

    வண‌க்கம் ஞானம்,

    தொடர்ந்து வருகைத் தாருங்கள்.

    நன்றி வருகைக்கும்,கருத்திற்கும்!

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.