கடவுள்
மனித உருவில்
எப்போதாவது ஒருமுறை
காட்சியளிப்பார்
எனச் சொல்லக்
கேட்டிருக்கிறேன்.
எனக்கு மட்டும்
வாரந்தவறாமல்
வெள்ளி தோறும்
காட்சியளிப்பது
ஏனென்றும் புரியவில்லை
எப்படியென்றும் தெரியவில்லை ...!?
மனித உருவில்
எப்போதாவது ஒருமுறை
காட்சியளிப்பார்
எனச் சொல்லக்
கேட்டிருக்கிறேன்.
எனக்கு மட்டும்
வாரந்தவறாமல்
வெள்ளி தோறும்
காட்சியளிப்பது
ஏனென்றும் புரியவில்லை
எப்படியென்றும் தெரியவில்லை ...!?
கடவுளே!! காப்பாத்து!!
ReplyDelete//கடவுளே!! காப்பாத்து!!//
ReplyDeleteவணக்கம் தேவன்,
நீங்கள் வேண்டுவது, என்னைக் காப்பாற்றச் சொல்லியா? உங்களைக் காப்பாற்றச் சொல்லியா?
தேவன் மாயம் கூறியது...
ReplyDeleteகடவுளே!! காப்பாத்து!!
ஹ ஹ ஹ ஹ
எனக்கு மட்டும்
ReplyDeleteவாரந்தவறாமல்
வெள்ளி தோறும்
காட்சியளிப்பது
ஏனென்றும் புரியவில்லை
எப்படியென்றும் தெரியவில்லை ...!?
நன்று மன விழி
நன்றி சக்தி.
ReplyDeleteஅப்போ வார வாரம் கோயிலுக்கு போகிறீர்களா? கோயிலில் தரிசிப்பது தேவதையையா, தெய்வத்தையா?
ReplyDelete//அப்போ வார வாரம் கோயிலுக்கு போகிறீர்களா? கோயிலில் தரிசிப்பது தேவதையையா, தெய்வத்தையா?//
ReplyDeleteஅரங்க பெருமாள்,
தெய்வத்தைக்காண போய்,(தெய்வமாகவே காட்சியளிக்க மாட்டாராமே) தேவதையைக் கண்டேன்.காணாத நாட்களில் "வதை"யாக இருக்கிறது.
வாரத்தில் எட்டு நாட்களும் வெள்ளியாய் இருந்திருக்ககூடாதா?
என்ன சத்ரியன், ரொம்பவே பித்து புடிச்ச மாதிரி தெரியுது.தேவதை கோயிலுக்கு வாரம் முச்சூடும் வரட்டும். ஆனா வாரத்துக்கு ஏழு நாள்தான் இருந்தது, அது எப்போ எட்டாச்சு(அமெரிக்காவிலையும் அப்படித்தான்)?. வருடத்தில ஒரு மாசம் கோயிலுக்கு வர வைக்கணும். அதான் அந்த 'ஆடி' மாசம். ஆடி மாசம் அம்மன் மாசம். இது அவங்களுக்கு. அது மனசாடும் மாசம். இது உங்களுக்கு. வாழ்க உங்கள் காதல்.
ReplyDeleteசத்ரியன்,ரொம்ப மோசமா போகுது நிலை.பாருங்க...இப்போ கண்ணில தொடங்கியிருக்கு.யாரையோ கடவுளா மாத்திக் காட்டுது கண்.
ReplyDeleteவாழ்க்கை பூராவும் கடவுள் கடவுளாகவே உங்ககூட இருக்க என் வாழ்த்துக்கள்.
பி.கு-கலா எங்கப்பா போய்ட்டீங்க.
சீக்கிரம் வாங்க.சத்ரியனை நாங்கதான் காப்பாத்தணும்.
//என்ன சத்ரியன், ரொம்பவே பித்து புடிச்ச மாதிரி தெரியுது.தேவதை கோயிலுக்கு வாரம் முச்சூடும் வரட்டும். ஆனா வாரத்துக்கு ஏழு நாள்தான் இருந்தது, அது எப்போ எட்டாச்சு?//
ReplyDeleteஅரங்க பெருமாள்,
வாரத்துக்கு ஏழு நாள்தான்னு எப்ப மாத்திட்டாங்க? (இப்ப பித்து முத்திப்போன மாதிரி தெரியுதா?)
இந்த மாற்றங்களெல்லாம், பார்வைப் பறிமாற்றத்திற்குப் பின் தானா நிகழுது. இதற்கு நான் மட்டும் பொறுப்பல்ல....!
//சத்ரியன்,ரொம்ப மோசமா போகுது நிலை.பாருங்க...இப்போ கண்ணில தொடங்கியிருக்கு.யாரையோ கடவுளா மாத்திக் காட்டுது கண்.
ReplyDeleteவாழ்க்கை பூராவும் கடவுள் கடவுளாகவே உங்ககூட இருக்க என் வாழ்த்துக்கள்.
பி.கு-கலா எங்கப்பா போய்ட்டீங்க.
சீக்கிரம் வாங்க.சத்ரியனை நாங்கதான் காப்பாத்தணும்.//
ஹேமா,
எப்பவுமே "அது" கண்ணுலதான் தொடங்கும்.என்னின் இறுதிவரைக்கும் உடன் இருந்தால் பெரும்பேருதான். உங்கள் ஆசிகள் என் காதலை(கடவுளையும்) ஆசிர்வதிக்கட்டும்....!
(கலாவக் கூப்பிட்டு வச்சி, என்னைக் கண்டிக்கச் சொல்லப் போறிங்க போல!)