Aug 20, 2009

மழை




பெரும் மழை என்றில்லை
தொடர்த்தூறல் என்றாலும்
உன்னை நினைவூட்டாமல்
பொழிந்து விட்டுப்போக
இன்னும்,
பழகிக் கொள்ளவில்லை
மழை ...!

11 comments:

  1. சத்ரியன்,மழையாய் பெய்யும் மழையில் இச்சிறுமழை எம்மாத்திரம்.தொடரட்டும்...

    ReplyDelete
  2. //மழையாய் பெய்யும் மழையில் இச்சிறுமழை எம்மாத்திரம்.தொடரட்டும்...//

    ஹேமா,

    மாமழையை எதிர்ப்பார்க்கிறீர்கள் என நினைக்கிறேன். இனி வருவது மழைக்காலம் தான்.

    ReplyDelete
  3. நீர்,நிலம்,காற்று,நெருப்பு,ஆகாயம் என எல்லாம் நினைவலைகளை உண்டாக்குகிறது என எண்ணுகிறேன். மற்ற நான்குதான் அடுத்தா?

    கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள- பொய்யாமொழியாரின் வாக்கு.

    பார்ப்போம் அடுத்து என்ன வருகிறது என..

    சிறு சந்தேகம்:
    தூறலா? தூரலா?

    ReplyDelete
  4. //நீர்,நிலம்,காற்று,நெருப்பு,ஆகாயம் என எல்லாம் நினைவலைகளை உண்டாக்குகிறது என எண்ணுகிறேன். மற்ற நான்குதான் அடுத்தா? //

    பெருமாள்,

    மேகத்துள் நீர்(மழை), ஆகாய வெளியில் மேகம், மேகம் மோதி மின்னல்
    (நெருப்பு),குளிர் காற்று பட்டு கரைந்து (மழையாக) நிலம் சேர்ந்துவிடுகிறது.

    ஆக, ஐம்பூதங்கள் என்பது ஒன்றுதானே?

    தூறல் தான் சரி.(திருத்திவிட்டேன். நன்றி)

    ReplyDelete
  5. நினைவூட்டல்.

    எதுவும் விட்டு வைக்காது.

    கவிதை அழகு.

    ReplyDelete
  6. //கவிதை அழகு.//

    ஜமால்,

    பொய் என்பதால் அழகாகத்தான் இருக்கும்.

    நன்றி.

    ReplyDelete
  7. அப்படி என்ன?நினைவலைகள்
    மழையைப் பார்த்தால்
    பொண்ணு ரொம்பவும் வாயாடிபோல...
    இடைவிடாமல்”மொழி” பொழிவதில்
    பெண்கள் எப்போதும் வாய் ஆடி இருக்கக்கூடாது
    வாயாடியாய் இருப்பதில் தப்பில்லை{உங்களைப்
    போன்றவர்களிடம் இருந்து தப்பிக்க ஒரு தற்காப்பு}
    ஐமால் பொய்,பொய்யென்று சமாளிக்கப் பார்கிறார்
    நம்பவேண்டாம்.
    அவர் சொல்வது பொய்யாய் இருக்கலாம் ஆனால்
    கவிதை பொய்யல்ல.

    ReplyDelete
  8. //பொய்,பொய்யென்று சமாளிக்கப் பார்கிறார்
    நம்பவேண்டாம்.அவர் சொல்வது பொய்யாய் இருக்கலாம் ஆனால்
    கவிதை பொய்யல்ல.//

    கலா,

    என்னைப் பார்த்தா பாவமா தெரியலியா உங்களுக்கு?
    ஏன் இப்படி கோர்த்துவிட்டு வேடிக்கை...?

    நன்றி.

    ReplyDelete
  9. //அழகு,,,......//

    நன்றி ஞானம்.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.