Aug 7, 2009

பயணங்கள் ...



பன்னெடுங்காலமாக
பயணித்தபடியே
மனித வாழ்வு.
நம்மின்
ஒவ்வொரு பயணமும்
வெவ்வேறு கதைச் சொல்லும்.

அன்றும் அப்படித்தான்...

பேருந்துப் பயணத்தில்
மாமிசப்பையுடன் நான்.
பக்கத்து இருக்கையில்
மரக்கறிப்பையுடன் அவர்.

சில நொடிகளுக்குப் பின் ...
"மாமிசப் பிரியரா நீங்கள் ?" ,என்றார்
என் மௌனம் தொடரவே
"உயிர் பலி பாவம்", என்றார்.

"உண்மைதான்.
மணமுடித்து விட்டீர்களா ? ",என்றேன்.

"ஆமாம்".

நயமாகக் கேட்டேன்
"நள்ளிரவுக்குப் பின்
நர மாமிசம்
உண்பவன் தானே நீ?"

"அது ",
இயற்கை என்றார்.

"இதுவும் தான்",
என்றபடி எனக்கான
நிறுத்தத்தில்
இறங்கி நடந்தேன்.

பயணத்தைத் தொடர்ந்தது
பேருந்து.

15 comments:

  1. சத்ரியன்,வாழ்வில் சில இயல்புகளை மாற்றமுடியாது.மாற்றினால் பெரிய விளைவுகள்தான்.கவிதை நல்லாயிருக்கு.

    ReplyDelete
  2. வார்த்தைகளின் பயன்பாடு கவிதையில் ஆச்சரியப்படுத்துகின்றன.

    ReplyDelete
  3. //வாழ்வில் சில இயல்புகளை மாற்றமுடியாது.மாற்றினால் பெரிய விளைவுகள்தான்.//

    ஹேமா,

    ஒப்புக்கொள்கிறேன். கவிதை, கற்பனை தான். சைவம், அசைவம் என்ற பாகுபாட்டை மையப்படுத்தி எழுதினேன்.உண்மையை அனைவரும் உணரவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே.

    (கொசுரு தகவல்:‍‍ தாவரங்களுக்கும் உயிருண்டு என்று நிரூபித்துள்ளார் ஓர் இந்திய விஞ்ஞானி. அவர்‍‍ பெயர் "ஜெகதிஷ் சந்திரபோஸ்".ஆண்டு நினைவில் இல்லை.)

    ReplyDelete
  4. //வார்த்தைகளின் பயன்பாடு கவிதையில் ஆச்சரியப்படுத்துகின்றன.//

    வணக்கம் மிஸஸ்.தேவ்,

    அப்படீங்களா! நன்றி. நேரம் வாய்க்கும் போதெல்லாம் வந்துச் செல்லலாமே வலைப்பூ பக்கம்.( நானும் வருகிறேன்.)

    ReplyDelete
  5. //எதார்த்தம் ...//

    எதார்த்தத்தை எதிர்ப்பவர்களே உலகில் அதிகம் இல்லீங்களா?

    நன்றி ஜமால்.

    ReplyDelete
  6. சுருக்கென்று உரைப்பதாய் இருக்கிறது... சிறந்த சொல்லாடல்

    ReplyDelete
  7. அது புனிதம் இறைவனால்
    வகுக்கப்பட்ட நியதி


    இது பாவம் மனிதனால்
    நடத்தப்படும் வதைப்பு.

    நல்ல வெளிப்பாடுன கவிதான்
    இருந்தாலும்.............

    ReplyDelete
  8. //சுருக்கென்று உரைப்பதாய் இருக்கிறது... சிறந்தச் சொல்லாடல்//

    சிலவற்றை காரமாகத்தான் சொல்லவேண்டி இருக்கிறது.
    நன்றி,நிலா.

    ReplyDelete
  9. //நல்ல வெளிப்பாடான கவிதான்
    இருந்தாலும்.............//

    கவிதை நடையில் இல்லையே எனச் சொல்ல வருகிறீர்கள். சில செய்திகள் தனக்கான வடிவத்தைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. நான் என்ன செய்ய? இதே கருத்தை மையப்படுத்தி உங்கள் நடையில் முயற்சிக்கலாமே.

    நன்றி கலா.

    ReplyDelete
  10. இந்த எண்ணத்துடன் நான் சொல்லவில்லை
    எப்படி?நீங்களாகக் கற்பனை செய்யமுடியும்?
    கவிதை நன்றாகத்தான் இருக்கின்றது
    இருந்தாலும்...........

    நானா?நானா?முயற்சிசெய்ய..
    ஐயோ எனக்கு வரவே வராது
    ..........அதுதான் கவிதையைச்
    சொன்னேன் சத்ரியன்.

    ReplyDelete
  11. வாவ் அருமைங்க வேற என்ன சொல்ல

    ReplyDelete
  12. நல்லா இருக்கு சத்ரியன்.....

    நண்பர் ஜமால் பரிந்துரையில் முதன்முதலாக வந்தேன்...

    இனி, தொடர்ந்து வருவேன்....

    என் வலைப்பூ பக்கமும் நேரம் கிடைக்கும் போது வாருங்கள்...

    www.jokkiri.blogspot.com

    www.edakumadaku.blogspot.com

    ReplyDelete
  13. //நல்லா இருக்கு சத்ரியன்.....

    நண்பர் ஜமால் பரிந்துரையில் முதன்முதலாக வந்தேன்...//

    (முதலில் நம்மை இணைத்த நண்பர் ஜமாலுக்கு கூட்டா நன்றி சொல்லிடலாம்.)

    வணக்கம் கோபி,

    நிச்சயமா வருகிறேன்.(வலைப்பக்கத்திற்கு தான்.)

    கருத்துரைக்கும், வலைப்பதிவு விலாசம் கொடுத்ததுற்கும் நன்றி.

    ReplyDelete
  14. //அது ",
    இயற்கை என்றார்.
    //

    அப்படியா!!!!!!


    நயம்...

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.