Jul 20, 2011

கரையாதச் சொற்கள்-1



தினமும்
வந்து போகிறேன்
என்றோ இட்ட
கோலம்
பொலிவற்று கிடக்கிறது
வாசலில்...

நீ
தேடும் நாளில்
நான்
வந்து வந்து போனதற்கான
வடுக்கள்
வாசலில் நிறைந்திருக்கும்

அந்த
கோலம் போல!

*


அலைகளற்ற நீரில்
கரையிலிருந்து குதிக்கும்
தவளையைப் போல
கவலையற்ற மனதில்
காத்திருந்து குதித்து விடுகிறது

உன்
நினைவுகள்...!

*

26 comments:

  1. அருமையான கவிதை.
    ரொம்ப நல்லாயிருக்கு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அண்ணே அசத்துங்க ..
    இரண்டாம் கவிதை அருமையோ அருமை

    ReplyDelete
  3. ரொம்ப நல்லாருக்குண்ணே, வார்த்தைகளை தொடுத்த விதம் அருமை...

    தொடர்ந்து கலக்குங்க.... :)

    ReplyDelete
  4. கவிதை அருமை...வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. சில வார்த்தைகளில் விதவிதமான அனுபவம்.நன்று.

    ReplyDelete
  6. காதல் தவளை கடிச்சு வைக்கப்போகுது கருப்பு இதயத்தை.கவனம்ங்கோ !

    ReplyDelete
  7. இரண்டும் புதுவிதம்..காதலை தித்திக்க சொல்கிறது..

    ReplyDelete
  8. இரண்டாவது ரொம்ப நல்லாயிருக்கு மாம்ஸ்

    ReplyDelete
  9. அருமையாகவுள்ளது நண்பா.

    இன்று தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.

    http://blogintamil.blogspot.com/2011/07/blog-post_21.html

    ReplyDelete
  10. http://blogintamil.blogspot.com/2011/07/blog-post_21.html

    வாழ்த்துக்கள் நண்பா

    தொடர்ந்து எழுதுங்க நண்பா என்றும் அன்புடன்.

    ReplyDelete
  11. காதல் தவளை கடிச்சு வைக்கப்போகுது கருப்பு இதயத்தை.கவனம்ங்கோ\\\\\\\\\

    சீ...சீ.சீஈச்சீ...இந்தக் கறுப்பு இதயமெல்லாம் பிடிக்காது ,கடிக்காது
    ஏனென்றால்,அந்தத் தவளை பால்வெளளை ...............
    உளள இதயமுங்கோ

    ReplyDelete
  12. அந்த
    கோலம் போல\\\\\\
    ஏனுங்க அவளவு நேரம் வரை காத்திருக்க வைத்தது?
    சட்டுப்புட்டென வந்து போயிருந்தால்..

    ReplyDelete
  13. அலைகளற்ற நீரில்\\\\

    அப்புறமென்ன! கடலிலா வாழும்?
    நினைவுகள குதித்து விளையாடுகின்றனவா?
    பாத்தப்பு,குதிக்கிற குதிப்பில் மூளைகலங்கிப் பைத்தியம் பிடிக்கப் போகிறது...

    ReplyDelete
  14. சத்ரியா!பாத்தாயா? என்பெயர் போடும் முன்னமே தவறுதலாகக் குதித்துவிட்டது மேலேயுளள கருத்துரை .கருத்துரைக்குக் கூடஉங்க வலைத்தளத்தில் குதிக்கச்சொல்லி பயிற்சி கொடுத்திருக்கிறீர்களா?

    ReplyDelete
  15. கோலம் கொள்ளை கொண்டது

    (தவளை மாதிரி ஏதோ கருத்து சொல்றாங்களே இவங்க யாருங்க ?)

    வாழ்த்துக்கள் நண்பா

    விஜய்

    ReplyDelete
  16. நல்லா இருக்கே.. கலக்கல் தம்பு..

    ReplyDelete
  17. கலா....உங்களுக்குத்தான் விசர்.விசர் பிடிக்காமலோ தவளை,கோலம் எல்லாம் வருது கவிதைல !

    ReplyDelete
  18. நல்லயிருக்கு கவிதை & படமும்

    ReplyDelete
  19. கலா....உங்களுக்குத்தான் விசர்.விசர் பிடிக்காமலோ தவளை,கோலம் எல்லாம் வருது கவிதைல \\\\\\
    ஹேமா,ஐய்ய்யய்யய....கண்ணழகர் மேலேயா! பைத்தியமா!! ம்ம்ம்ம்ம்.... இல்லவே இல்ல சாரல்குட்டி உதைக்க வருவா,
    "அவக" மேல..தான் நானும்...
    என் மேல...தான் அவகளும்....
    காதல் பைத்தியம் அப்பாடா ....சூ.சூ.ஊசூ..
    பகவானே!

    ReplyDelete
  20. என்ன தான் நடக்குது இங்கே?
    (பைத்தியம் புடிக்குது எனக்கு.)

    யாரப்பா பெரிய மனுஷங்க இங்க? எல்லாரும் கொஞ்சம் வந்து இந்த பஞ்சாயத்த தீத்து வெச்சிட்டு போறீங்களா?

    கவிதையில ”தவளை” குதிச்சது ஒரு குத்தமா?

    ReplyDelete
  21. காத்திருந்து குதிக்கும் நினைவு... நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  22. கோலங்கள் கவிதை கலக்கல்

    ReplyDelete
  23. சரி ரொம்ப நாளாச்சே , இந்தபக்கம் வந்துபாக்கலாமேன்னு வந்தேன். ம்ம்ம் நல்லாதான் இருக்கு அந்த காத்திருந்து குதிச்ச தவளை!

    ReplyDelete
  24. ஐயோ...கடவுளே கலா கதையையே மாத்திட்டா.காப்பாத்துங்கோ !

    ReplyDelete
  25. காதலின் மகத்துவம் புரிந்து காதலி ஏற்றுக்கொள்ளும் வரை கோலம் வெறிச்சோடி தான் இருக்கும்.... காதல் அறிந்தப்பின் காதலியின் கைவண்ணத்தில் மனதில் பொங்கும் அன்பை ரங்கோலியாக்கிவிடும்....

    காதல் வந்துவிட்டாலே கவலைகளும் வந்துவிடும் போல...

    அருமையான வரிகள் சத்ரியன்.. அன்பு வாழ்த்துகள்....

    ReplyDelete
  26. அழகிய வரிகள்.. வாழ்த்துக்கள்!

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.