Aug 22, 2011

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே...!


வணக்கம் நண்பர்களே,

'முத்துக்கள் மூன்று' தொடர்பதிவுக்கு நண்பர் குணா அக்கரையும்...இக்கரையும் தம்பி சிம்பு -மாணவன்  வரலாற்று நாயகர்கள் என்னும் தலைப்பில் உலகத்தலைவர்களைப் பற்றி தொடர்ந்து எழுதி வருபவர். என் வரலாற்றைத் தெரிந்துக் கொள்வதில் தம்பிக்கு அப்படி என்ன வேண்டுதலோ.)) ஆகியோரின் அன்பு (என்ன விலை-ன்னெல்லாம் கேக்கப்படாது) அழைப்பை ஏற்று.....


1 . விரும்பும் மூன்று விஷயங்கள்
  • காதலும்- கவிதைகளும்
  • போராளிகளின் வாழ்க்கை வரலாறு
  • நட்பு.

2 . விரும்பாத மூன்று விஷயங்கள்
  • மது
  • துரோகம்
  • தெரியாததைத் தெரிந்தது போல் காட்டிக்கொள்வது.


3. பயப்படும் மூன்று விஷயங்கள்
  • பாம்பு
  • நட்பு அரிதாரம் பூசிய முகங்கள்
  • ஆட்சியைப் பிடிக்க அரசியல்வியாதிகள் அவிழ்த்து விடும் இலவசங்கள்

4 . புரியாத மூன்று விஷயங்கள்
  • பாடல் கேட்டுக் கொண்டே உறங்குகிறார்களே எப்படி?
  • கல்யாணத்துக்குப் பின்னும் காதல் எப்படி?
  • மக்கள் சொத்தை கொள்ளையிடும் கொள்கை வாதிகளை...!
5 . என் மேசையில் இருக்கும் மூன்று பொருட்கள்

  • தண்ணீர்
  • தொ(ல்)லைபேசி
  • நூல் ( நல்ல நூல்களைப் படிச்சா அறிவு வளருமாமே!)

6 . என்னை சிரிக்க வைக்கும் மூன்று விஷயங்கள்
  • சுமாரன நகைச்சுவையைப் படித்தாலும் ரசிச்சி சிரிக்கிற ரகம் நான்
  • நண்பர்களின் அரட்டைகள்
  • அமரர் நாகேஷ், வடிவேலு

7 . செய்துகொண்டிருக்கும் மூன்று விஷயங்கள்
  • கவிதைத் தொகுப்பு வெளியிட தயார் படுத்திக் கொண்டிருக்கிறேன்.
  • தமிழ் இலக்கணம் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
  • குமரிக்குச் சென்று திருவள்ளுவனை தரிசித்துவர திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன்.

8 . கற்றுக்கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்
  • சரளமாக ஆங்கிலம் பேச!
  • தவறின்றி தமிழ் இலக்கணம்.
  • விவசாயம்
9 . பிடித்த மூன்று உணவு வகைகள்
  • நண்டுக் குழம்பு.( நண்பன் கேசவன் சமைக்கனும்)
  • கேழ்வரகுக் களி + கோலா கருவாட்டுக் குழம்பு (என் அம்மா சமைக்கனும்)
  • பச்சை அரிசி சோறு+முருங்கைக்காய் சாம்பார்.(இது நானே சமைக்கனும்)

10 . கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்
  • தேர்தல் வாக்குறுதிகள்
  • இலவசமாய் எதையும்
  • அசிங்கமான அர்ச்சனைச் சொற்கள்.

11 . அடிக்கடி ஹம்மிங் செய்யும் மூன்று பாடல்கள்
  • வா பொன்மயிலே (சிவக்குமார்+சுஜாதா)
  • பூக்கள் பூக்கும் தருணம் (ஆர்யா+ஒரு அழகான பொண்ணு)
  • ஏரத்தாழ ஏழு மணி (பேராண்மை படத்துல)

12 . பிடித்த மூன்று பொன்மொழிகள்
       (பிடிச்ச ஆத்திச்சூடின்னு வெச்சிக்குங்களேன்)
  • உடலினை உறுதி செய்
  • ஆண்மை தவறேல்
  • தையலை உயர்வு செய்

13. ஆசைப்படும் மூன்று விசயங்கள்
  • 2013-ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து நிரந்தரமாக தமிழ் நாட்டிலேயே தங்கி வாழவேண்டும்.
  • சிங்கையின் சிங்கங்கள் பட்டாபட்டி & வெளியூர்காரன் ரெண்டு பேரையும் ஒருதடவையாவது நேரில் சந்திக்கனும் (ஐய்யா ராசாக்களா 2013 முடியறதுக்குள்ள என்னை ஒருமுறை சந்திச்சிருங்கப்பா)
  • விவசாயத் தொழிலில் சிறந்து விளங்க வேண்டும்.

14 . நிறைவேறாத மூன்று ஆசைகள்
  • என் செல்லமகள் சாரலின்பா-வின் மழலைச் சொற்களை அவளருகில் இருந்து அனுபவிக்க எண்ணியிருந்தேன்.
  • 2010- லிருந்து தமிழகத்திலேயே தங்கிவிட திட்டமிட்டிருந்தேன்.
  • முன்னால் காதலியின் திருமணதிற்கு என் கவிதை நூலை பரிசளிக்க எண்ணியிருந்தேன்.( நான் புத்தகம் வெளியிடும் முன்பே அவளுக்கு கல்யாணம் ஆகிடும்னு நான் என்ன கனவா கண்டிருந்தேன்)
15. இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற மூன்று விஷயங்கள்
  • தன்னம்பிக்கை
  • உணவும், உடையும்
  • அன்பும்,கோபமும்

போதும் விட்றா-ன்னு யாரோ கத்துறது காதுல விழுது. சரி நிப்பாட்டிக்கிறேன்.

இதை தொடர அழைக்கப்போகும் மேலும் மூன்று ... வேணாம் பாஸ். இதையும் நிப்பாட்டிக்கிறேன்.


35 comments:

  1. வணக்கம்ணே, ஒருவழியா மூன்று விசயங்கள் தொடர்பதிவ எழுதிட்டீங்கபோல.... இருங்க படிச்சுட்டு வரேன்... :)

    ReplyDelete
  2. உங்களின் மூன்று விசயங்கள் பற்றி நல்லாவே சொல்லியிருக்கீங்கண்ணே... சூப்பர்!

    ReplyDelete
  3. வசிக்க வாசிக்க சுவராசியமாக இருந்தது உங்கள் மூன்று
    நல்ல வெளிப்படையா எழுதி இருக்கீங்கண் தோழரே

    அருமை
    எண்ணங்கள் நிறைவேற என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. 1 ) காதலும்/கவிதையும் - இரண்டும் ஒன்னு தானேப்பு

    2)
    இதை நாமும் செய்யாமலிருப்போம் மாம்ஸ்

    3) அரிதார முகம் - அறியப்பெறவேண்டும்

    4)
    க பி கா எ - இத நாங்க கேட்கனும் உங்ககிட்ட

    5) நூல் ( இருக்கவங்களுக்கு தான் வளரும் )

    6 :)

    7) நல்ல கற்று கொள்ளுங்கள் கற்றதை பிறருக்கு சொல்லி கொடுங்கள்


    8) ஏழுல சொன்னேதே ஏன் மாம்ஸ் இங்கே ரிப்பீட்டி ...

    9) உன் சமையல் மட்டும் தான் மாம்ஸ் என் டேஸ்ட்டு

    10) செவிடனாய் இருக்கனும் ...

    11) ...

    12) :)

    13) வாழ்த்துகளுப்பூ, நம்மளையும் சேர்த்துங்கோ ...

    14) காதலி என்றைக்குதான் இல்லே ...

    15) குட்

    நானும் நிறுத்திக்கிறேன்

    ReplyDelete
  5. //தம்பி சிம்பு -மாணவன் வரலாற்று நாயகர்கள் என்னும் தலைப்பில் உலகத்தலைவர்களைப் பற்றி தொடர்ந்து எழுதி வருபவர். என் வரலாற்றைத் தெரிந்துக் கொள்வதில் தம்பிக்கு அப்படி என்ன வேண்டுதலோ.))//

    உண்மையிலே உங்க வரலாற்றைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொண்டேன் அண்ணே, ரொம்ப நன்றி அழைப்பை ஏற்று உங்களைப்பற்றி பகிர்ந்துகொண்டமைக்கு... :)

    ReplyDelete
  6. //சிங்கையின் சிங்கங்கள் பட்டாபட்டி & வெளியூர்காரன் ரெண்டு பேரையும் ஒருதடவையாவது நேரில் சந்திக்கனும் (ஐய்யா ராசாக்களா 2013 முடியறதுக்குள்ள என்னை ஒருமுறை சந்திச்சிருங்கப்பா)//

    ஹா..ஹா.. உங்களுக்கும் இந்த ஆசை இருக்கா சரி விடுங்க நம்ம ஊருக்கு போறதுக்குள்ள சந்திச்சிடலாம்... :)

    ReplyDelete
  7. நீங்கள் விரும்பும் கற்றுக்கொள்ள ஆசைப்படும் அனைத்து விசயங்களும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. கவிதைத் தொகுப்பு வெளியிட தயார் படுத்திக் கொண்டிருக்கிறேன்.


    .... Super!!! Best wishes!!!!

    ReplyDelete
  9. என் செல்லமகள் சாரலின்பா-வின் மழலைச் சொற்களை அவளருகில் இருந்து அனுபவிக்க எண்ணியிருந்தேன்.

    ...2013 is around the corner. :-)

    ReplyDelete
  10. //என் செல்லமகள் சாரலின்பா-வின் மழலைச் சொற்களை அவளருகில் இருந்து அனுபவிக்க எண்ணியிருந்தேன்.//

    குழந்தையின் மழலை மொழியை கேட்க நமக்கு கொடுத்து வைக்கல அண்ணா.

    ReplyDelete
  11. இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற மூன்று விஷயங்கள்

    தன்னம்பிக்கை
    உணவும், உடையும்
    அன்பும்,கோபமும்

    அழகா சொன்னீங்க நண்பா.

    ReplyDelete
  12. 10 . கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்
    தேர்தல் வாக்குறுதிகள்
    இலவசமாய் எதையும்

    நானும் தான் நண்பா.

    ReplyDelete
  13. அருமை
    எண்ணங்கள் நிறைவேற என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. விரும்பும் மூன்று விஷயங்கள்
    • காதலும்- கவிதைகளும்


    புரியாத மூன்று விஷயங்கள்

    • கல்யாணத்துக்குப் பின்னும் காதல் எப்படி?

    அண்ணாச்சி! விரும்புவது காதல் என்று சொல்லிவிட்டு...
    பின்னாடி இப்படிச் சொன்னால் எப்படிப் பொருந்துமப்பு?
    உங்கள் மனைவியை நீங்கள் காதலிக்கவே இல்லையா?
    பாவம்! ஒரு பொம்மை மாதிரிப் பாத்துகிறீர்களா?
    அப்ப ...முன்னாடித்தான் காதல்பேச்செல்லாம் ...
    இப்போது மூட்டைகட்டிப் பரணில் போட்டாச்சா?
    ஹய்யோ..அந்தப்புள்ள........

    கல்யாணத்துக்குப் பின்னும் வேறொருவரைக் காதலிப்பது
    எப்படி? என்றுதான் {அந்தப்புரிதலில்தான்}போட்டேன் என்று
    திருப்பக்கூடாது!

    ReplyDelete
  15. எண்ணங்கள் நிறைவேற என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. மாணவன் said...
    வணக்கம்ணே, ஒருவழியா மூன்று விசயங்கள் தொடர்பதிவ எழுதிட்டீங்கபோல.... இருங்க படிச்சுட்டு வரேன்... ://

    எல்லா பதிவுலயும் படிச்ச மாதிரியே எபெக்ட் கொடுக்கிறியே ராசா :))

    ReplyDelete
  17. மாணவன் said...
    //சிங்கையின் சிங்கங்கள் பட்டாபட்டி & வெளியூர்காரன் ரெண்டு பேரையும் ஒருதடவையாவது நேரில் சந்திக்கனும் (ஐய்யா ராசாக்களா 2013 முடியறதுக்குள்ள என்னை ஒருமுறை சந்திச்சிருங்கப்பா)//

    ஹா..ஹா.. உங்களுக்கும் இந்த ஆசை இருக்கா சரி விடுங்க நம்ம ஊருக்கு போறதுக்குள்ள சந்திச்சிடலாம்.//


    யோவ்..அதான் என்ன பார்த்திட்டியே? நான்தான்யா பட்டாபட்டி :))

    ReplyDelete
  18. • கவிதைத் தொகுப்பு வெளியிட தயார் படுத்திக் கொண்டிருக்கிறேன். \\\
    • சொல்லவே இல்ல...
    • நல்ல முயற்சி வாழ்த்துகள்



    • தமிழ் இலக்கணம் கற்றுக் கொண்டிருக்கிறேன்\\\
    • ஒண்ணுமே தெரியாத இந்த கோதை{யை}யும்
    • சேர்த்திருக்கலாமல்லவா!

    ReplyDelete
  19. முன்னால் காதலியின் திருமணதிற்கு
    என் கவிதை நூலை பரிசளிக்க
    எண்ணியிருந்தேன்.( நான் புத்தகம்
    வெளியிடும் முன்பே அவளுக்கு
    கல்யாணம் ஆகிடும்னு நான்
    என்ன கனவா கண்டிருந்தேன்\\\\\\

    அவங்க குடும்பத்துக்குள்ள குழப்பம்
    வரப்போகுதப்பு.....
    பேசமுடியாததை கவிதையில் எழுதிக்
    கொடுக்கப்போகிறீர்களோ!
    நிறைவேறாமலே இருக்கட்டும்.
    நிறைவேற்றி வம்புலமாட்டிக்காம....

    அப்ப ..இன்னும்...அந்தப் புள்ளையை மறக்க
    முடியவில்லை....இதுக்குப் பெயர் என்ன அண்ணாச்சி!

    ReplyDelete
  20. அருமை...
    எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  21. மூன்றுகள்,முத்துக்கள் சத்ரியன் அருமை.

    ReplyDelete
  22. அம்மாடியோ... நல்லா யோசிக்கிறீங்க...மூணு விசயங்கள் அனைத்துமே மிகவும் வெளிப்படையானவை...அருமை!

    ReplyDelete
  23. விவசாயம்னு சொல்லி புல்லரிக்க வைச்சுட்டீயே நண்பா

    தமிழ்நாட்டுக்கு வந்தது விவசாயம் சம்பந்தப்பட்ட எந்த உதவியும் செய்றேன் நண்பா

    வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  24. வசிக்க வாசிக்க சுவராசியமாக இருந்தது உங்கள் மூன்று

    ReplyDelete
  25. //முன்னால் காதலியின் திருமணதிற்கு என் கவிதை நூலை பரிசளிக்க எண்ணியிருந்தேன்.( நான் புத்தகம் வெளியிடும் முன்பே அவளுக்கு கல்யாணம் ஆகிடும்னு நான் என்ன கனவா கண்டிருந்தேன்)//

    இது என்ன கொடுமை..

    இவங்க மட்டும் கல்யாணம் பண்ணி சாரலின்பாவைக் கொஞ்சிட்டு இருக்கும் போது அவங்க மட்டும் இவங்க கொஞ்சி முடிச்சு கவிதை எழுதிக் கொடுக்கற வரைக்கும் கல்யாணம் பண்ணாம காத்திருக்கனுமாம்?

    உங்க மென்மையான காதல் புரியுது சத்ரியன் இந்த வரிகளில்.

    ReplyDelete
  26. //பாடல் கேட்டுக் கொண்டே உறங்குகிறார்களே எப்படி?//

    அந்த சுகத்தை அனுபவிச்சாத்தான் தெரியும். அது உறக்கம் அல்ல சத்ரியன். அது ஒரு வகையான மயக்கம்.

    ஆக 2013 க்கு மேல ‘கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி’ ஆகப்போறிங்க.. வாழ்த்துக்கள் அந்த அன்னமிடும் கைகளுக்கு...

    ReplyDelete
  27. நண்பரே!

    முத்துக்கள் மூன்றும்
    உம்மைப்பற்றி ஒரளவு அறியச் செய்
    தன. நன்றி
    ஆனால் ஒன்று, விவசாயம்
    செய்ய விருப்பம் என்பது பற்றியே இங்கே குறிப்பிட விரும்புகிறேன்
    ஐயா! நானும்..
    விவசாய குடும்பத்திலே பிறந்து
    ,விவசாம் பண்ணி(நாயே)யே
    வாழ்ந்து(இல்லை அழிந்து) கெட்டவன்.
    உண்டி கொடுத்தோர் உயிர்
    கொடுத்தோர் என்பதோ, உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்பதோ
    உழவனை ஏமாற்றும் வார்த்தைகள்.
    எண்ணிப் பாருங்கள்
    குண்டூசி செய்பவன் கூட விலை வைத்தே வெளியில் அனுப்புகிறான்
    ஆனால்..?விவசாயின் பொருளுக்கு வியாபாரிதானே விலை வைத்து கொள்ளை அடிக்கிறான்
    உற்பத்தி செய்யும் பொருளின் உரிய விலையை விவசாயி பெறும்
    வரை,வீழும் விவசாயம்,வாழ வழி
    இயலாது விவசாயி.

    அன்று பட்ட வேதனை
    இன்று வெளிவந்து விட்டது
    மன்னிக்க!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  28. முத்துக்கள் மூன்றும் அருமை அண்ணே...

    ReplyDelete
  29. @@@ஆசைப்படும் மூன்று விசயங்கள்
    சிங்கையின் சிங்கங்கள் பட்டாபட்டி & வெளியூர்காரன் ரெண்டு பேரையும் ஒருதடவையாவது நேரில் சந்திக்கனும் (ஐய்யா ராசாக்களா 2013 முடியறதுக்குள்ள என்னை ஒருமுறை சந்திச்சிருங்கப்பா)../////

    அந்த நார பயலுகள ஏன்யா பார்க்கனும்னு நெனைக்கற...! அவெங்கே மூஞ்சுல முழிச்சா சரக்குக்கு சைட் டிஷ் கெடைக்காம போயிரும்யா...! சொன்னா கேளு.. வேணாம்...! அவெங்கே நீ பார்க்கனும்னு நெனைக்கற அளவுக்கு வொர்த் இல்ல...! நீ வேற யாராச்சும் பிரபல பதிவரா பார்க்க ட்ரை பண்ணு...! :)

    ReplyDelete
  30. //சிங்கையின் சிங்கங்கள் பட்டாபட்டி & வெளியூர்காரன் ரெண்டு பேரையும் ஒருதடவையாவது நேரில் சந்திக்கனும் (ஐய்யா ராசாக்களா 2013 முடியறதுக்குள்ள என்னை ஒருமுறை சந்திச்சிருங்கப்பா)//

    இது ரொம்ப குஸ்ட்டமாசே..ச்சே ..கஷ்ட்டமாச்சே

    ReplyDelete
  31. ஏண்ணே.. உங்களுக்கு இந்த விபரீத ஆசை?...

    ReplyDelete
  32. @வைகை
    யோவ்..அதான் என்ன பார்த்திட்டியே? நான்தான்யா பட்டாபட்டி :))
    //

    சொல்லவேயில்ல.. ஹி..ஹி

    ReplyDelete
  33. @@@@பட்டாபட்டி.... said...
    @வைகை
    யோவ்..அதான் என்ன பார்த்திட்டியே? நான்தான்யா பட்டாபட்டி :))//
    சொல்லவேயில்ல.. ஹி..ஹி.////


    நீங்க ரெண்டு பேரும்தான் பட்டாபட்டின்னா, அப்ப நான் யாரு...?? :)

    ReplyDelete
  34. //புரியாத மூன்று விஷயங்கள்
    பாடல் கேட்டுக் கொண்டே உறங்குகிறார்களே எப்படி? //

    காது கேட்குது..கண்ணு உறங்குது..இதுல என்ன குழப்பம்?

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.