நம்பிக்கைத் துளிர் விட்டிருக்கிறது.
மேலேயுள்ள தகவல் பலரும் அறிந்திருக்கக் கூடும். இப்பதிவின் இறுதியில் உள்ளதை பலரும் அறிந்திருக்க வாய்ப்புகள் மிகக் குறைவு.
மேற்கண்ட தகவல் சிறு நம்பிக்கையை விதைத்திருப்பது உண்மையே. ஆனாலும், இது மட்டும் போதுமா? என்ற கேள்விக்கு , வாய்த்திருக்கும் எட்டு வார காலத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் தான் அந்த நம்பிக்கையை மரமாக வளர்த்தெடுக்க முடியும்.
அதன் பொருட்டு ஆர்வலர்கள் அனைவரும் நமக்குக் கிடைக்கும் அரிய சான்றுகளை இன்னும் பலருடன் பகிர்ந்துக் கொள்வதால் ஒரு புதிய கவனயீர்ப்பை உருவாக்கி உண்மையை உலகறியச் செய்து உண்மையான குற்றவாளிகளை தண்டனைக்கு உட்படுத்த முடியும்.
ஒரு கை ஓசையெழுப்பாமல் போகலாம். நாம் ஒவ்வொருவாரும் ஒவ்வொரு கையைச் சேர்த்தால் உலகதிரும் ஓசையை எழுப்பிக் காட்டலாம்.
ஒரு உண்மையின் காணொளி இங்கே பகிர்ந்துள்ளேன். பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், இன்னும் பலருக்கு பரப்புவதை மேற்கொள்ளுங்கள் நண்பர்களே!
நம்பிக்கைத் துளிர் விட்டிருக்கிறது.
ReplyDeleteஒரு கை ஓசையெழுப்பாமல் போகலாம். நாம் ஒவ்வொருவாரும் ஒவ்வொரு கையைச் சேர்த்தால் உலகதிரும் ஓசையை எழுப்பிக் காட்டலாம்.
உண்மைதான் நண்பா.
தங்களின் கருத்து நூற்றுக்கு நுறு
ReplyDeleteசரியானதே!
தள்ளி வைக்கப் பட்டுள்ளதே
திவிர மத்தியின் ஆணைக்கு
கொள்ளி வைக்கும் வரை
அறப்போர் இன்னும் தீவிரப்படுத்தப்
படவேண்டும்
இன்றேல் இலவு காத்த
கிளியாகி விடுவோம்
கடந்த மூன்று நாட்களாக
நடந்த அறப் போரே தமிழக அரசின்
மனமாற்றம் என்பதை அனைவரும்
உணரச் செய்ய வேண்டும்
இது அனைவரும் ஒன்றுபட
வேண்டிய தருணம்
அதுபோதுதான் மத்திய அரசும்
அசைந்து கொடுக்கும்
நன்றி
புலவர் சா இராமாநுசம்
சத்ரியன்,முக்கியமான கருத்துக்களை முன் வைத்துள்ளீர்கள்.
ReplyDeleteஇது போன்ற நல்லவர்கள் இருக்கும் வரை உண்மையை ஒரு போதும் மறைக்க முடியாது என்பது. பகிர்வுக்கு நன்றி அண்ணா
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி!!
ReplyDeleteபதிவின் சாரம் நல்ல தகவலை சொல்லியள்ளது.ஊடகங்களின் ஒரு பகுதியினர் இவ்விடயத்தை மூடி மறைக்கவே பார்க்கிறார்கள். மக்கள் முன் இவர்கள் எம்மாத்திரம்?.ஒவ்வொருவரும் இதை முன்னெடுத்து,முடிந்த பங்களிப்பினை வழ்ங்கினால் கண்டிப்பாக முடியாததில்லை.பதிவுக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteநம்பிக்கையோடு நீங்க தொடங்கி இருக்கும் இந்த வேள்வி நல்ல முடிவையே தரவேண்டும் என்று வேண்டும் பல உள்ளங்களில் நானும் ஒன்று......
ReplyDeleteஅன்பு நன்றிகள் பகிர்வுக்கு சத்ரியன்..