எண்ணிக்கையில்
ஏழு புள்ளி இரண்டு கோடியை
எட்டி நிற்கும்
என் நாட்டுத் தமிழா!
’இனப்பெருமை என்பது
இனப்பெருக்கம்
செய்வது மட்டுமல்ல’-என்பதை
எப்போது உணரப்போகிறாய்?
இருபது மைல் தொலைவில்
இன மலர்ச்சிப் போராட்டம்
உச்சத்தில் இருந்த போதும்
இன மானம் உணர்ந்து,
சிறு துரும்பையும்
அசைக்க முனையாத நீயா
ஈராயிரத்து இருபதில்
இந்தியாவை
வல்லரசாக்கி விடப் போகிறாய்?
விழி நீரைத் துடைக்க
உனை நோக்கி நீண்ட
கரங்களின் விரல்களே
உன்
சுதந்திரத்தின் கண்களைக்
குருடாக்கிய கதையை
அறியாமல் கிடக்கிறாயே!
தனியொருவனால் ஒன்றும்
கிழிக்க முடியாமல் போகலாம்
ஒத்தக் கருத்துடையோருடன்
மெத்தக் கலந்து பேசி
அணி திரண்டு
யுத்தம் புரிய வேண்டாமடா நீ
உரக்க சத்தமிட்டாலே போதும்
உடைந்த சிலம்பின்
முத்துப்பரல்கள் போல்
சிதறி ஓடுமடா
எதிரிகளின் கூலிப்படையும்,
கூட்டுப் படையும்!
இலவசத்திற்கே பழகிப்போன - என்
இளையச் சமுதாயமே
‘இனச் சுதந்திரம்’
இலவசமாய்
எங்கும் கிடைக்காதப்பா!
நமக்கான
உரிமைகளை ஒன்று
கேட்டுப் பெற வேண்டும்.
மறுக்கப்படுமாயின்
உதைத்து தான் பெற வேண்டும்!
***
பின் குறிப்பு:-
கவிஞனின் சுட்டு விரல் என்னையும் சுட்டுகிறது.
நல்ல அழுத்தமுடன் கூறிய ஒவ்வொரு வரிகளும் சாட்டையடி ...
ReplyDeleteஇறுதியில் முடித்த விதம் சிறப்பு ... வாழ்த்துக்கள் அண்ணே ..
நானும் குறுகி நிற்கிறேன் ஏதும் செய்ய இயலா நிலையை நினைத்து ,.
இத இத இதத்தான் சத்ரியா உங்ககிட்ட நாங்க எதிர்ப்பார்ப்பது
ReplyDeleteஇலவசத்திற்கே பழகிப்போன - என்
ReplyDeleteஇளையச் சமுதாயமே ...
சவுக்கு
நமக்கான
ReplyDeleteஉரிமைகளை ஒன்று
கேட்டுப் பெற வேண்டும்.
மறுக்கப்படுமாயின்
உதைத்து தான் பெற வேண்டும்!]]
ஆட்ற மாட்ட ...
இருபது மைல் தொலைவில்
ReplyDeleteஇன மலர்ச்சிப் போராட்டம்
உச்சத்தில் இருந்த போதும்
இன மானம் உணர்ந்து\\\\\\\\\
உணராமை{உணர்வு _ஆமைதான் ஓட்டத்திலும்...
“தலை” உள்வாங்கி மறைப்பதிலும்..}
இந்த உணராமையால்...
உலர்ந்து காய்கிறது
உறவும்,உயிர்களும்தான்!
சிறு துரும்பையும்
ReplyDeleteஅசைக்க முனையாத நீயா
ஈராயிரத்து இருபதில்
இந்தியாவை
வல்லரசாக்கி விடப் போகிறாய்?\\\\\
நல்ல கணைதான்!
உர்ரர்ரர்ரர்ர..என்று போகிறது
உரக்க சத்தமிட்டாலே போதும்
ReplyDeleteஉடைந்த சிலம்பின்
முத்துப்பரல்கள் போல்
சிதறி ஓடுமடா
எதிரிகளின் கூலிப்படையும்,
கூட்டுப் படையும்!\\\\\\
உங்கள் கவி கனக்கிறதுதான்,
பூம்புகார்போல் பூமிக்குள்
புதையவிட்ட கண்ணகிகளையும்...
கூண்டுக்கிளிபோல் அடைபட்டிருக்கும்
கிளிகளையும்....பறக்கும் பாவைகளாய்..
இக்கவியால் பரிணாமம் அடையட்டும்.
நமக்கான
ReplyDeleteஉரிமைகளை ஒன்று
கேட்டுப் பெற வேண்டும்.
மறுக்கப்படுமாயின்
உதைத்து தான் பெற வேண்டும்!\\\\\
ம்ம்ம..நன்றாகப் புரிகிறது
தாகம்,வேகம்,ஏக்கம், ஆவேஷம்
இப்படி இளஇரத்தங்கள் பாயலாம்....
ஆனால்.....??
மனம்”கனக்க”இருந்ததை கவியாய்...
காவிரியாய்...ஓடவிட்டுப் பார்கிறீர்களா?
பின்குறிப்பும் ஊசிபட்டால்!எப்படி..?அப்படியே!
வேகமும்...விவேகமும்...கொஞ்சம் ஆக்ரோஷமும் எழுத்தில்....
ReplyDeleteநல்லா எழுதியிருக்கீங்க...வாழ்த்துக்கள்...
உங்கள் கோபம் தனிய ஒரு ஊடல் கவிதை என் வலையில்...வாசித்து கருத்து சொல்லுங்களேன்...
//’இனப்பெருமை என்பது
ReplyDeleteஇனப்பெருக்கம்
செய்வது மட்டுமல்ல’-என்பதை
எப்போது உணரப்போகிறாய்?//
கலக்கல் .தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டு விட்டேன்.
இந்த வரிகளில் ததும்பும் அனல்
ReplyDeleteசுடட்டும் இந்த சமூகத்தை
வரிகளில் வீரம் தெரிக்கிறது!ஒன்று பட வேண்டிய அவசியமும் புரிகிறது...
ReplyDeleteகவிஞனின் சுட்டு விரல் என்னையும் சுட்டுகிறது.
ReplyDelete...... ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. ஒவ்வொருவருக்கும் கடமையும் உண்டு. சரியா சொல்லி இருக்கீங்க.
நல்ல பதிவு.
ReplyDeleteஉணர்ச்சியுள்ள தமிழன் ஒவ்வொருவரின் உண்ர்வாகவே இந்த கவிதை வரிகளை உணர்கிறேன்.சபாக்ஷ்.
ReplyDeleteஅருமையான தேசப்பற்று நிறைந்த புரட்சிக் கவிதை
ReplyDeleteவாழ்த்துக்கள்.மென்மேலும் வளம்பெற................
//இலவசத்திற்கே பழகிப்போன - என்
ReplyDeleteஇளையச் சமுதாயமே
‘இனச் சுதந்திரம்’
இலவசமாய்
எங்கும் கிடைக்காதப்பா!//
அழுத்தமான வரிகள் நண்பா, நன்றி.
//நமக்கான
ReplyDeleteஉரிமைகளை ஒன்று
கேட்டுப் பெற வேண்டும்.
மறுக்கப்படுமாயின்
உதைத்து தான் பெற வேண்டும்!//
முற்றிலும் உண்மை... மயிலே... மயிலே என்றால் இறகு போடாது...
//நமக்கான
உரிமைகளை ஒன்று
கேட்டுப் பெற வேண்டும்.
மறுக்கப்படுமாயின்
உதைத்து தான் பெற வேண்டும்!//
இந்த வரிகள் உணர்த்திவிட்டன மொத்தக் கவிதையின் வலியை..!
வாழ்த்துக்கள் Mr.சத்ரியன்.
நமக்கான
ReplyDeleteஉரிமைகளை ஒன்று
கேட்டுப் பெற வேண்டும்.
மறுக்கப்படுமாயின்
உதைத்து தான் பெற வேண்டும்!//
sharpen words..very impressive lines..
’இனப்பெருமை என்பது
ReplyDeleteஇனப்பெருக்கம்
செய்வது மட்டுமல்ல’-என்பதை
எப்போது உணரப்போகிறாய்?
இருபது மைல் தொலைவில்
இன மலர்ச்சிப் போராட்டம்
உச்சத்தில் இருந்த போதும்
இன மானம் உணர்ந்து,
சிறு துரும்பையும்
அசைக்க முனையாத நீயா
ஈராயிரத்து இருபதில்
இந்தியாவை
வல்லரசாக்கி விடப் போகிறாய்?
சாட்டையடி கேள்வி
http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html
சத்திரியன், உரிமைகள் கேட்டுப் பெறுவதில்லை. அவை பிறப்பால் கிடைப்பவை. யாரும் பிச்சையாய் கொடுப்பவை அல்ல மனித உரிமைகள்.
ReplyDeleteதேவையான கவிதை.
என் வாக்கையும் அளித்து வாசகர் பரிந்துரைக்கும் அனுப்பிவிட்டேன்.
இந்த கவிதைக்கு என்னுடைய சிறப்பு பாராட்டுக்கள்.
ReplyDeleteஒன்றுபட சத்தம் மட்டும்தான் போடுகிறோம்.ஒன்றுபட்டால் மட்டுமே நம் வாழ்வில் வெற்றியும் உயர்ச்சியும் !
ReplyDeleteஇருபது மைல் தொலைவில்
ReplyDeleteஇன மலர்ச்சிப் போராட்டம்
உச்சத்தில் இருந்த போதும்
இன மானம் உணர்ந்து\\\\\\\\\
உணர்வூட்டும் நல்ல தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
வரிகளில் உணர்ச்சி கலந்த கோபத்தை வெளிப்படுத்தியிருக்கீங்க..இன்றைய இளையச் சமுதாயத்திற்கு இதுதான் தேவை... சிறந்த படைப்பை வழங்கியமைக்கு சிறப்பு நன்றிகள் பல அண்ணே...
ReplyDeleteஇதுபோன்ற உணர்ச்சிகளின் கோபம் அவ்வபோது தொடரட்டும் கவிவரிகளில்....
//தனியொருவனால் ஒன்றும்
ReplyDeleteகிழிக்க முடியாமல் போகலாம்
ஒத்தக் கருத்துடையோருடன்
மெத்தக் கலந்து பேசி
அணி திரண்டு
யுத்தம் புரிய வேண்டாமடா நீ
உரக்க சத்தமிட்டாலே போதும்
உடைந்த சிலம்பின்
முத்துப்பரல்கள் போல்
சிதறி ஓடுமடா
எதிரிகளின் கூலிப்படையும்,
கூட்டுப் படையும்!///
செம்ம சாட்டையடி வரிகள்..
ஒவ்வொரு வரிகளும் முகத்தில் அறைந்துவிட்டு போவது போல் இருக்கிறது... உணர்வுபூர்வமான படைப்பு
ReplyDeleteதொடரட்டும்
ஒவ்வொரு வரியும் அனல் வீச்சே உரிமையும் உணர்வும் விடும் மூச்சே
ReplyDeleteசெவ்வரி யாக செம் மொழியில்
சினமெனும் தீயோ உம் விழியில்
இவ்வரி என்று எதைச் சுட்ட
இருப்பன அனைத்தும் மனம் தொட்ட
எவ்வரி சொல்ல இயலா தாம்
எல்லா வரியும் புயலே தாம்
புலவர் சா இராமாநுசம்
நமக்கான
ReplyDeleteஉரிமைகளை ஒன்று
கேட்டுப் பெற வேண்டும்.
மறுக்கப்படுமாயின்
உதைத்து தான் பெற வேண்டும்!
நிதர்சனம்.. எழுத்துகளில். அருமை
நல்ல கருத்தாழமிக்க கவிதை. வாழ்த்துகள். :-)
ReplyDeleteஇலவசத்திற்கே பழகிப்போன - என்
ReplyDeleteஇளையச் சமுதாயமே
‘இனச் சுதந்திரம்’
இலவசமாய்
எங்கும் கிடைக்காதப்பா!
உணரவேண்டிய உண்மை நண்பா.
நமக்கான
ReplyDeleteஉரிமைகளை ஒன்று
கேட்டுப் பெற வேண்டும்.
மறுக்கப்படுமாயின்
உதைத்து தான் பெற வேண்டும்!அழுத்தமான பகிர்வு.
அருமை! //‘இனச் சுதந்திரம்’
ReplyDeleteஇலவசமாய்
எங்கும் கிடைக்காதப்பா!//
சத்திரியன் அவர்களே ! உணர்ச்சி மயமான கவிதை! அதுமட்டும் போதுமா? பாண்டி பஜாரில் ஒருவருக்கு ஒருவர் கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார்கள்!!அப்பொது இனம் ,மானம் பார்க்காமல் பொய்விட்டார்களே ! அவர்களுக்கு பட்டாடை தருவதாக ஆசைகாட்டினார்கள். இப்போது கோவணம் இல்லமல் இருக்கிறார்கள் . அறிவொடு செயல் பட வேண்டிய நேரம்! நிதானம் தெவை!---காஸ்யபன்
ReplyDeleteஉணர்வுகளைத் தட்டி எழுப்பும் அற்புதவரிகள் சத்திரியா!!!!!!
ReplyDelete