2004ல் பிரதமர் பதவியைத் தியாகம் செய்தார் என்று உன் அம்மா அழைக்கப்படுகிறார்.
இந்தியக் குடியுரிமையியல் சட்டத்தின் படி, வெளிநாட்டை சேர்ந்தவர் இந்தியக் குடியுரிமை பெறும் போது அல்லது குடிமகனாக ஆகும் போது, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்தியர்களுக்கான அனைத்து சட்டத்திட்டங்களும் அவர்களுக்கும் பொருந்தும் அவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும்.(படிக்கவும் பின்ணிணைப்பு 1&2)
நீ இத்தாலியில் பிறந்தவராக இருப்பினும் நீ இத்தாலியின் பிரதமராக வரமுடியாது.அதேபோல இத்தாலி நாட்டு குடிமக்களும் இந்தியாவின் பிரதமராக வரமுடியாது, அவர் இங்கே பிறக்காமல் போனால்.
மே-17,2004, மாலை 3.30 மணிக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் உன் அம்மாவிற்கு அனுப்பியக் கடிதத்தில் இதே சட்டவிதிகளைக் குறிப்பிட்டுள்ளார். அதே நாளில் மாலை 5 மணிக்கு பதவி ஏற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.கடைசி நேரத்தில் மன்(மண்ணு) மோகன் சிங் உள்ளே இழுத்து வரப்பட்டார். உன் அம்மாவால் இயற்றப்பட்ட மற்ற தியாகம் செய்யும் நாடகங்கள் அனைத்தும் ஒரு கண் துடைப்பே.
இப்படி இருக்கும் போது, உன் அம்மாவே வெவ்வேறு மக்களவை உறுப்பினர்கள் கையொப்பம் இட்ட 340 ஆதரவுக் கடிதங்களைக் குடியரசுத் தலைவர் திரு.கலாம் அவர்களுக்கு அனுப்பி வைத்திருந்தார்.
அதில் ஒரு கடிதத்தில், சோனியா காந்தியாகிய நான் ரேய் பாரலியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரதமராக ஆவதற்கு இக்கடிதத்தின் மூலம் முன்னிலைப்படுத்த விழைகிறேன்.
ஆக உன் அம்மாவிற்கு உண்மைத் தெரியும் வரை அல்லது சட்டச்சிக்கல் தெரியும் வரை அவர் மிகவும் விருப்பத்துடனேயே இருந்திருக்கிறார் என்பது இதன் மூலம் தெரிகிறது. ஆக உன் அம்மா எந்தத் தியாகங்களையும் செய்யவில்லை. அவரால் பிரதமராக ஆகமுடியாது என்பதே உண்மை நிலைமை.
இதைப் பார்த்து நீ வெட்கப்பட்டிருக்கலாமே அ(எ)ருமை ராகுல் அவர்களே!!!
உங்களைப் பற்றி சற்றுச் சிந்தியுங்கள்
ஆர்வார்ட் பல்கலைக்கழகத்தில் கட்டணக்கல்விப் பிரிவிலே நீ சேர்ந்தாய்.அதே ஆண்டு ராசீவ் காந்தி ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, ஆர்வார்ட்க்கு 11 மில்லியன் டாலர் இந்துசா சகோதரர்களால் கொடுக்கப்பட்டது. பிறகு 3மாதத்தில் நீ அந்தப் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டாய்.இதில் வருத்தம் என்னவெனில் அந்த நேரத்தில் மன்(மண்ணு)மோகன் சிங் ஆர்வார்டின் தலைமைப் பொறுப்பில் இல்லை. இல்லையெனில் உனக்கு வாய்ப்புக் கிடைத்திருந்திருக்கும்.என்ன செய்ய உன் கெட்ட வாய்ப்பு, ஒரே ஒரு மண்ணுமோகன் சிங் தான் உள்ளார்.
ராசீவ் கொலை செய்யப்பட்டக் காரணத்தினாலேயே நீ ஆர்வார்டிலிருந்து நீக்கப்பட்டாய் என்றும் சிலக் கருத்து நிலவுகிறது. இருக்கலாம். ஆனால் பிறகு என்ன மயித்துக்கு நீ பொருளாதார வல்லுனர்னு பொய்ப்பேசித் திரியிர.அதுவும் ஆர்வார்டிலிருந்து.
நீ இந்தி தேர்விலும் தேர்ச்சிப் பெறவில்லை. ஆனால் நீ, மிக அதிக அளவில் இந்திப் பேசப்படும் மாநிலத்தில் இருந்து முன்னிருத்தப்பட்டிருக்கிறாய்.
உன் அம்மாவின் கல்வித் தகுதி
கேம்பிரிட்சு பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் பயின்றதாக வேட்புமனுத் தாக்கலின் போது தன்னுடையக் கல்வித் தகுதியில் உன் அம்மாக் குறிப்பிட்டுள்ளார். [பார்க்க பின்ணிணைப்பு-6,7,-37அ]
கேம்பிரிட்சு பல்கலைக்கழகத்தைப் பொருத்தமட்டில், சோனியா என்றப் பெயரில் ஒரு மாணவரும் படிக்கவில்லை என்று சொல்லிவிட்டது.[பார்க்க பின்ணிணைப்பு-7-39]. இது தொடர்பாக சுப்பரமணியசாமி தொடர்ந்த வழக்கில்,சோனியா தனது வேட்புமனுத் தாக்கலின் போது கேம்பிரிட்சு பல்கலைக்கழகம் தொடர்பான சர்ச்சையை விட்டுவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
சோனியா உயர்நிலைக் கல்வியையேத் தாண்டவில்லை, வெறும் அய்ந்தாவது மட்டுமே தேர்ச்சிப் பெற்றவர். இந்தச் சூழ்நிலையில் அவர் தன் கல்விப் பின்புலத்தை தனது இரண்டாம் அலைக்கற்றை வழக்கின் குற்றவாளி கருநா(ய்)நிதியுடன் பகிர்ந்துக் கொள்கிறார்.
நீயும், உன் அம்மாவும் உங்களுடைய கல்வித் தகுதியை பொய்யாகக் காட்டியுள்ளீர்கள். பிறகு “அரசியலிலே படித்த இளைஞர்கள் வேண்டும்” என்று வேறு சொல்லுகிறீர்கள். காந்தி தென் ஆப்பிரிக்கா சென்று தனது பட்டப்படிப்பை முடித்து முதல் மாணவராக தேர்ச்சிப் பெற்று, பின்பு தென் ஆப்பிரிக்க மக்களுக்காக அவற்றை விடுத்து போராடினார்.பின்புதான் இந்தியாவிற்காக போராடினார்.
ஏன் கல்வித் தகுதியைப் பொய்க் கூறவேண்டும்
தலைசிறந்த தலைவராக வருவதற்கு கல்வித் தகுதி தேவையில்லை தான். ஆனால் பிறகு ஏன் நீயும் உன் அம்மாவும் பொய்யான கல்வித்தகுதியைக் காட்ட வேண்டும்.
உனது கல்வித் தகுதியில் பொய் பேசியதற்காக நீ வெட்கப்பட்டிருந்திருக்க வேண்டும். இப்படி பொய் பேசியதற்கு உன்னிடம் காரணம் இருக்கிறது என்று எனக்குத் தெரியும். காரணம் இந்தியாவில் நாங்கள் கல்வியை மதிக்கின்றோம்.ஆனால் நீ ஒரு முன்மாதிரி இளைஞனாக இருக்கும் போது யார் கல்வியைக் கருத்தில் கொள்கிறார்கள்?
முன்மாதிரி இளைஞர்
நீ உன்னுடைய 38வது அகவையில் தான் முதல் முறையாக உள்ளூர் தொடர்வண்டியில் பயணப்பட்டாய். தேர்தல் பரப்புரைக்காக சில சிற்றூர்களுக்கு சென்றாய்.அதனால் முன் மாதிரி இளைஞர் என்ற பட்டத்தை வென்றுள்ளாய்.
அன்றாடம் 25 மில்லியன் மக்கள் தொடர்வண்டியில் பயணிக்கின்றார்கள்.நீ தான் முதல் ஆள், தொடர்வண்டியில் பயணித்ததற்காக முன் மாதிரி இளைஞர் என்ற பெயரைப் பெற்றுள்ளாய். ஆயிரமாயிரம் அஞ்சலக ஊழியர்கள் அஞ்சல்களை எடுத்துக்கொண்டு பல சிற்றூர்களுக்கு செல்கின்றார்கள். அவர்களில் யாருக்கும் முன் மாதிரி இளைஞர் என்ற பெயர் இதுவரைக் கிடைக்கவில்லை. நீ இளைஞனுமல்ல, முன் மாதிரயான ஆளுமல்ல. ஆனால் இன்னும் நீ முன் மாதிரி மற்றும் இளைஞர்களாக இருக்கக் கூடிய ராகுல் டிராவிட் போன்ற போட்டியாளர்களை தோற்கடிக்கிறாய்.
சேக்சுபியர் சொல்கிறார், பெயரில் என்ன இருக்கிறது என்று? அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை. எல்லாமே பெயரில்தான் இருக்கிறது, அதுவும் குடும்பப்பெயரில்.
உன்னுடைய குடும்பப் பெயரைப் பற்றி பேசுவோம்.
நீ உண்மையாகவே காந்தியை மதிக்கிறாயா? அல்லது பணத்தில் அவரது சிரித்தப் படம் இருக்கிறது என்பதற்காகவா?ஏனெனில் உன்னுடையக் கடவுச்சீட்டில் உன் பெயர் ராகுல் காந்தி அல்ல, ராகுல் வின்சி. நீ காந்தி என்று உன் குடும்பப் பெயரை எழுதியிருந்தால் அந்த வார்த்தைத் தரும் உணர்ச்சிகள் என்ன என்பதை பட்டறிந்து உணர்ந்திருப்பாய். உன் குடும்ப மக்கள் தான் காந்தி என்ற பெயரை தேர்தலில் போட்டியிடும் நேரத்தை தவிர, மற்ற நேரங்களில் அதிகம் பயன்படுத்துவதில்லை. அங்கதானே முழு அர்த்தமும் அடங்கியிருக்கு. கொஞ்சம் சிந்தித்துப் பார் உன்னுடையப் பெயரை ராகுல் வின்சி என்று வைத்துக் கொண்டுத் தேர்தலில் போட்டியிட்டால்...!
உலகப்புகழ் பெற்ற தலைவர்களான நெல்சன் மண்டேலா, இளைய மார்டின் லூதர் கிங் மற்றும் சான் லெனான் போன்று காந்தியும் ஒருவர். அவர் பெயரைக் கலங்கப்படுத்துவதுதான் வருத்தமாக இருக்கிறது. உன் நேருக் குடும்பம் மற்றும் உன் கட்சியை சேர்ந்தவர்களால், மேற்குறிப்பிட்டத் தலைவர்களைப் போல் மக்களை வசிகரிக்க இயலாதக் காரணத்தால், தேர்தலில் போட்டியிடும் போது மட்டும் காந்தியின் பெயரைப் பயன்படுத்துவது. ஆனால் கடவுச்சீட்டில் வசதியாக வேறு ஒரு பெயரைப் பயன்படுத்திக் கொள்வது. உன்னுடைய இந்த இரட்டை நிலைத் தன்மைக் குறித்து நீ வெட்கப்படலாமே.
அரசியலில் இளைஞர்கள்
இப்போது நீ அரசியலுக்கு இளைஞர்கள் வர வேண்டும் என்கிறாய். நீ முதலில் அரசியலில் சேர். ஏனெனில் நீ இன்னும் அரசியலில் சேரவில்லை, நீ சேர்ந்திருப்பது குடும்பத் தொழிலில்.
முதலில் நீ அரசியலிலே சேர்ந்து ராகுல் காந்தி என்றப் பெயரைப் பயன்படுத்தாமல் ராகுல் வின்சி என்றப் பெயரைப் பயன்படுத்தி தேர்தலில் போட்டியிட்டு வென்றுக்காட்டு. பிறகு வந்து இளைஞர்களையும் படித்தவர்களையும் அரசியலிலே ஈடுபடக் கூப்பிடு.