May 2, 2012

தாய்ப்பசு


கண் தானம்
சிறந்தது தான்.
என்றாலும்

என்
கண்களை தானம்
வழங்கும் அனுமதியை
நீங்கள்
அவளிடம் தான் கேட்க வேண்டும்.

*

தாய்ப்பசு
அவள்.

இளங்கன்று
நான்.

விளையாடச் செல்லும்
வேளைகளில்
தடுமாறிடுவேனோ என
எப்போதும் அச்சத்துடனே இருக்கிறாள்.

எங்கு சென்றாலும்
அவள் மடி தேடி வருவேன் என்பதை மறந்து.

**




24 comments:

  1. //தாய்ப்பசு
    அவள்.

    இளங்கன்று
    நான்//

    செமையாய்
    செம்மையாய் நுன்மமாய்

    சான்சே இல்லை நண்பா
    அல்ட்ரா டீலக்ஸ் கவிதை

    ReplyDelete
  2. //விளையாடச் செல்லும்
    வேளைகளில்
    தடுமாறிடுவேனோ என
    எப்போதும் அச்சத்துடனே இருக்கிறாள்.

    எங்கு சென்றாலும்
    அவள் மடி தேடி வருவேன் என்பதை மறந்து.//

    சிலதை
    வார்த்தைகளில் சொல்ல முடிவத்தில்லை
    அதனால் நண்பா
    ம்ம்ம்ம் ...(:

    ReplyDelete
  3. கண் தானம்
    சிறந்தது தான்.
    என்றாலும்

    என்
    கண்களை தானம்
    வழங்கும் அனுமதியை
    நீங்கள்
    அவளிடம் தான் கேட்க வேண்டும்.///

    ஆஹா .............

    ReplyDelete
  4. தாய்மை உணர்வை அழகாக எடுத்தியம்பியுள்ளீர்கள் கவிஞரே.

    ReplyDelete
  5. மிக அருமையான கவிதை ஒன்றைப் படிக்கும் வாய்ப்புத் தந்ததற்கு நன்றி தம்பி!

    ReplyDelete
  6. அண்ணே வணக்கம் ...

    அப்படியே உறைந்து போனேன்
    தாய் பசு கவிதை படித்து ..
    சும்மா மிரட்டி புட்டிக ..
    என் நன்றிகள் ...

    ReplyDelete
  7. என்
    கண்களை தானம்
    வழங்கும் அனுமதியை
    நீங்கள்
    அவளிடம் தான் கேட்க வேண்டும்.\\\\\\\\\\

    “அம்மணி” அனுமதி உண்டோ?
    பதிலுக்காகக் காத்திருக்கும் கண்.

    ReplyDelete
  8. விளையாடச் செல்லும்
    வேளைகளில்
    தடுமாறிடுவேனோ என
    எப்போதும் அச்சத்துடனே இருக்கிறாள்.\\\\\

    தடுமாறிவிடுவேனோ......


    ஆமா.வைச்ச நம்பிக்கையை
    காப்பற்றவில்லைபோலும்.......
    இந்த ஆம் புள்ளையானுங்க
    விளையாட்டே தடுமாறி,மாறி
    விழுவதுதானே!

    ReplyDelete
  9. சிலதை
    வார்த்தைகளில் சொல்ல முடிவத்தில்லை
    அதனால் நண்பா
    ம்ம்ம்ம் ...(:\\\\\\

    ஐய்யய்யோ....இம்புட்டு வெக்கபடுறாகளே.....

    ReplyDelete
  10. ஒருதாய் சொல்வார்
    கண்ணுக்குக் கண்ணாய்
    வளர்த்தேன் என்பார்
    அதை காட்டுகிறது உங்கள்
    கண்கவி

    எங்குபோனாலும்..எத்தனை
    சுகங்கள் வந்தாலும் ....
    அந்தத் தாயின் மடிபோலாகுமா?
    அன்னையர்தினத்துக்காக..
    எனநினைக்கிறேன் இந்தத் தாய்ப்பசு
    நல்ல சிந்தனை{இல்லைநிஜம்} நண்பரே!

    ReplyDelete
  11. மிக அருமை. தய்மை உணர்வை மிக அழகான வார்த்தைகளில் சொல்லியிருக்கீங்க.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  12. @கலா
    //அன்னையர்தினத்துக்காக..
    எனநினைக்கிறேன்//


    கண்டிப்பா (இல்லை )

    லேபிளை கவனியுங்கள்
    கவிதையை
    நல்ல ஆழமா வாசியுங்கள்

    வரி
    நிழலின் நிஜம்
    உணரலாம்

    நம் கவிஞர்
    ஜகஜால கில்லாடி
    ஒரு கவிதையில்
    இரண்டு அர்த்தங்கள் சொல்லிவிட்டு சென்று இருக்கிறார்

    //விளையாடச் செல்லும்
    வேளைகளில்
    தடுமாறிடுவேனோ என
    எப்போதும் அச்சத்துடனே இருக்கிறாள்.

    எங்கு சென்றாலும்
    அவள் மடி தேடி வருவேன் என்பதை மறந்து.//

    அதனால் தான் இந்த வரிகளுக்கு
    ம்ம்ம் உடன் முடித்துக்கொண்டேன்

    ReplyDelete
  13. கண்டிப்பா (இல்லை )
    ஆமா,தெரியுமிங்க நான் பாவம் என்று மற்றப்பக்கத்தைக் காட்டவில்லை முதல் வேறுமாதிரிப்பின்னோட்டம் எழுதத்தான் பார்த்தேன் வேண்டாமென்று இப்படி நோட்டமிட்டு எழுதினேன் உங்கள "ஆழத்துக்கும்" என் பாராட்டுகள இதுபற்றி அவரிடம் தொலைபேசியில் பேசுகிறேன்


    நம் கவிஞர்
    ஜகஜால கில்லாடி \\\\\\
    ரொம்ப,ரொம்ப நன்றாகவே எனக்குத்தெரியும் நண்பரே! நான் உங்களுக்கு மட்டும் சொல்லலாமென
    நினைக்கிறேன் அப்புறம்,,அப்புறம்...சரியா?

    ReplyDelete
  14. நாற்பது வரியில் கஸ்டப்பட்டு வார்த்தைகளைத் தேடி எழுதினாலும் இந்த 4 வரிகளுக்குள் இருக்கும் உணர்வைக் கொண்டுவர முடிவதில்லை.கண்ணும் கன்றுப் பசுவும்...ம்...!

    தானத்தில் சிறந்ததாமே கண் தானம்.இரண்டு கண்ணில ஒன்றைக்கூட நான் இப்பவும் கொடுக்கத் தயார் !

    ReplyDelete
  15. கலா....கலாய்க்கக்கூடாது.கண்ணைத் தோண்டி தானத்துக்குக் குடுத்திடுவம்.சொல்லியாச்சு !

    ReplyDelete
  16. தாய்க்குப் பின் தாரம் என்பது இது தானா சத்ரியன்....

    ReplyDelete
  17. இரண்டு கண்ணில ஒன்றைக்கூட நான் இப்பவும் கொடுக்கத் தயார் !\\
    யாருக்குடா தங்கமே!
    எனக்கும் தெரியும் நீங்க கொடுப்பீக என்று,ஆனா அது இவ்வளவு சீக்கரத்தில் நடக்கப்போகுதென்று
    நான் நினைக்கவில்லை
    தமிழ்! இந்தக் காதல் சோடிக் கண்கள படும்பாட்டைப் பாருங்களேன்!

    ReplyDelete
  18. கலா....கலாய்க்கக்கூடாது.கண்ணைத் தோண்டி தானத்துக்குக் குடுத்திடுவம்.சொல்லியாச்சு \\\\\\\

    அதென்ன!குடுத்திடுவம்?ஓஓஓஓ பன்மையா?அவருமா? இதிலிருந்து என்னதெரிகிறது அவரு என் கண்மேல
    ஒரு கண்ணுவைச்சிருந்திருக்கிறார், அதை எதேச்சையாக உங்களுடன் பேசி இருக்கிறார் உங்களுக்குப் பொறாமை பொங்க....
    அதைப்பார்த்து அவர் நிலைதடுமாறி... சமாதானப்படுத்துவதற்காக...
    கோப்பபடாதே அந்த அழகான கண் இருந்தால் தானே என்னைப் பார்க்கத்
    தூண்டும் அதனால்....இருவரும் சேர்ந்து அதை...அதை..அதை காலிபண்ணப்பாக்கிறீர்களா?உங்களுக்கு நான்கு கண்களதான்!
    ஆனால் எத்தனை ஆயிரம் கண்கள என் கண்களில்......சரணம் என்றுதெரியுமா?விடுவார்களா?உங்களை!

    ReplyDelete
  19. சத்ரியன்...காப்பாத்துங்க.உங்களுக்குப் பின்னுக்கு ஒளிஞ்சிக்கிறேன்.நீங்க பாவம்ன்னு கதைகப்போய்.....கொஞ்சம் கலாகிட்ட கதையுங்க !

    ReplyDelete
  20. அச்சப்படும் அளவிற்கு இருக்கு குறும்புகார கன்று போல என்ன செய்ய ...........ஆனாலும் உரிமையை அவளிடம் கொடுத்ததற்கு பாராட்டத்தான் வேண்டும்

    ReplyDelete
  21. பின்னுக்கு ஒளிஞ்சிக்கிறேன்\\\\\\

    அதென்ன பின்னுக்கு ஓளிஞ்சுகிறது?
    அப்பதான் அவரைத் தொட்டுப்பாத்துக்கலாமென்ற நினைப்போ?
    மவளே!இந்தப்பயம் இருக்கட்டும்!

    அவரு...அவரு...உங்கைக் காப்பாத்துவாரென்ற நினைப்பு
    இன்னும் இருக்காடா?ஹேமா!

    அவரு இப்ப எந்த மடியில....??

    ReplyDelete
  22. தாய்மை தோய்ந்த கவிதை. நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  23. //எங்கு சென்றாலும்
    அவள் மடி தேடி வருவேன் என்பதை மறந்து.
    அதை மட்டும் சரியாய் செய்வான் அல்லவா மனிதன்

    ReplyDelete
  24. ஒருமுறை படித்தால் ஒரு பொருளும்
    மறுமுறை படித்தால் மறுபொருளும்
    வருவது கவிதை மிக
    நன்றே
    தருவது அருமை நீர்
    இன்றே
    சா இராமாநுசம்

    நான சூலை ,28 29 வாக்கில் சிங்கப்பூர் வருகிறேன் தங்கள் தொலைபேசி எண்பற்றி எனக்கு மின்
    அஞ்சல் மூலம் தெரிவிக்கவும்

    jram178@yahoo.co.in என்பதாகும்

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.