Feb 27, 2011

தங்கைக்கு....


                  நமக்கு நெருங்கியவர்களுக்கு நிகழும் விபத்துக்களும், மரணங்களும் மனதை பயமுறுத்துவது இயல்புதான். வாழ்வு எப்போதும் மகிழ்ச்சி நிரம்பியதாகவே இருந்துவிட வேண்டும் என்பது மனிதர்கள் எல்லோரது ஏக்கம். ஆனால், அது இயல்புக்கு மாறான ஏக்கம் என்பதைமட்டும் மறந்து போகிறோம். இத்தனை ஆயிரம் காலமும் இந்த உலகம் இப்படித்தான் இயங்கி வந்திருக்கிறது. இனிமேலும் இப்படித்தான் இருக்கும்.

                  உன் கவலை எனக்கு புரிகிறது. ஏற்ற இறக்கமின்றி இதுவரை எவனது வாழ்வும் இந்த உலகில் இருக்கவில்லை. நாமும் கூட சாதாரண மனிதர்களே. துயரங்களே எனக்கு வேண்டாம் என்றால்,  அவன் வாழ உகந்த இடம் இந்த உலகம் அல்ல என்பதை நீ உணர வேண்டும்.

                   உதவி தேவைப்படும் எல்லா நேரத்திலும் உறவினர்கள் அனைவரும் உதவ வேண்டும் என்பது நமது விருப்பம் மட்டுமே! அவர்கள் உதவியே ஆகவேண்டுமென்ற கட்டாயம் எதுவுமில்லை.

                    நண்பர்களையும், உறவினர்களையும் அடையாளம் காட்டும் நேரம் , இது போன்ற சம்பவங்கள் தான். அதற்காக நிகழ்ந்த இந்த சம்பவத்திற்கு நன்றி சொல்லி விட்டு, இனி நடத்த வேண்டியதைச் செய்ய உன்னைத் தயார் படுத்திக்கொள்.

                  தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னாயே, உறவினர்கள் சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கையில் யாரோ ஒரு வழி போக்கன் வந்துதவினான் என்று.அவன் வழிப்போக்கன் இல்லை, ”அவன் தான் மனிதன்” . (ஒருவேளை அவனும் கூட உதவாமல் போயிருந்தால் அவன் மேல் உனக்கு எந்த கோபமும் வந்திருக்க வாய்ப்பில்லை தானே? அப்படி நினைத்துக்கொள். எல்லாம் சரியாகப் போய்விடும். )

                         ஆத்திரமான நேரத்தில் கத்தி தீர்ப்பதை விட, அமைதியாய் இருந்துவிடு. இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ துயர்களைக் கடக்கவில்லையா? இதுவும் கடந்து போகும்.பிரச்சினைகள் நமக்கு வேண்டாம் என்றாலும், பிரச்சினைகளுக்கு நாம் வேண்டியதாய் இருக்கிறது.அது தீரும். வேறொன்று வரும். இந்த சுழற்சி இருந்துக்கொண்டே தான் இருக்கும்.

                         உன் ஆத்திரம் நியாயமானதாக இருக்கலாம்...! இதோ என் எழுத்துக்களில் அதற்கான தீர்வு இருக்கலாம்....!

                         தாய் இப்போது குழந்தையாய் இருக்கிறாள் என்றாய். கவலையை விடு. வளர்த்துக் கொள்ளலாம்.இத்தனைக்கோடி ஆண்டுகளில்  தாய்க்கு தாயாகிய வாய்ப்பு இதுவரை யாருக்கும் வாய்க்கவே இல்லை. உண்மையில் நீ பாக்கியவதி.


16 comments:

  1. நல்லாருக்கு,சத்ரியன்

    ReplyDelete
  2. //இத்தனைக்கோடி ஆண்டுகளில் தாய்க்கு தாயாகிய வாய்ப்பு இதுவரை யாருக்கும் வாய்க்கவே இல்லை. உண்மையில் நீ பாக்கியவதி.
    //

    Nalla varikal... nalla irukku sathriyan.

    ReplyDelete
  3. உண்மைதான் சத்ரியன்!பிரச்சனை இல்லா உலகம் இல்லை.
    நம்மை நாமாகக் காட்டுவது பிரச்சினைதான்.
    தங்கைக்கு கூறிய வார்த்தைகள் நிச்சயம் அனைவருக்கும் பயன்படும்.
    அமைதி,பொறுமை நிச்சயம் தீர்வு தரும்!

    ReplyDelete
  4. பிரச்சினைகள்தான் ஒரு மனிதனை செதுக்குகின்றன...

    ReplyDelete
  5. //உன் ஆத்திரம் நியாயமானதாக இருக்கலாம்...! இதோ என் எழுத்துக்களில் அதற்கான தீர்வு இருக்கலாம்....!///

    இதைவிட வேறன்ன வேண்டும் இயல்பான வரிகளில் அன்பின் வெளிப்பாடு நல்லாருக்குண்ணே....

    :)

    ReplyDelete
  6. ம்ம் என்ன பண்ண தல..

    ReplyDelete
  7. மனிதம் செத்துவிட்டது என்று சொல்லிக்கொண்டிருந்தாலும்,எங்காவது வாழ்ந்துகொண்டும் இருக்கிறது என்று சொல்ல வைக்கிறது சில நேரங்களில் !

    ReplyDelete
  8. இத்தனைக்கோடி ஆண்டுகளில் தாய்க்கு தாயாகிய வாய்ப்பு இதுவரை யாருக்கும் வாய்க்கவே இல்லை. உண்மையில் நீ பாக்கியவதி.....

    யாருக்கும் கிடைக்கா பாக்கியம் தான் அண்ணே .....

    ReplyDelete
  9. அருமையான பதிவு நண்பா. பதிவின் முதல் பத்தியை திரும்பத் திரும்ப வாசித்தேன். எத்தனை அழகாக வாழ்வின் நிதர்சனத்தை சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  10. இழப்புகளை ஈடு செய்ய
    முயன்று சுற்றிகொண்டிருக்கும்
    புவிபோல்தான் மனித வாழ்வும்.

    அன்பெனும் ஈர்பினில்
    ஆறுதல் சாரல்
    தூவிசெல்லும் மேகமென
    மனிதர்களும் இருப்பது
    நேயமே..


    நண்பா.....

    ReplyDelete
  11. சத்ரியா
    என்னவிதமான துன்பம் என்று தெரியவில்லை
    (தெரியாமல் இருப்பது தான் நல்லது)
    ஆனாலும் எல்லா விதமான துன்பம் வந்தாலும் நீ சொன்ன வார்த்தைகள்
    அளவில்லா ஆறுதல் தரும் மீண்டு எழ வைக்கும்.
    அந்த தங்கைக்கு எனது ஆறுதலையும் அன்பையும் சொல்லுங்கள்

    ReplyDelete
  12. ஹேமாவை வழிமொழிகிறேன் நண்பா

    விஜய்

    ReplyDelete
  13. தங்கைக்கு ஓர் ஆறுதல் கடிதம் எம்மையும் ஆறுதல் படுத்துகின்றது.

    ReplyDelete
  14. sathriyan sir,

    Neengal sonnavai aththanaium unmai..
    Arumaiyan varthaigal pala pala pala murai vasiththean yendrum intha padaippai vasiththu vitu thaan ungal adutha kavithaikku selven..Itharkku mel solla varthai illai nanba.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.