Jun 7, 2011

என்ன செய்யப் போகிறாய்?



தாயூட்டும் இரைக்காக
வாய் பிளக்கும் 
குருவிக் குஞ்சுகளைப் போல்

நீயூட்டும்
முத்தத்திற்காக
நானும்...!

*



இலை நுனியைப்
பிரிய மறுக்கும்
மழைத் துளியாய்

பயண வழியில்
பழகிய
 உன் நினைவும்..!

*

36 comments:

  1. படங்கள் கவிதைக்கு ஏற்றவாறு அம்சமா இருக்கு!

    ReplyDelete
  2. சூப்பர் கவிதைகள்...
    ரசிக்கும்படி உள்ளது...

    ReplyDelete
  3. காதல் களஞ்சியம் அண்ணே ...
    நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு கவி மழை ...
    சிறப்பாக இருக்குங்க ...

    ReplyDelete
  4. நீயூட்டும்
    முத்தத்திற்காக
    நானும்...!\\\\\\\
    ஓஓஓஓ...ஊட்டியா விடுவாக?
    காதல் மகராஐன் இன்னும் சின்னப்பிள்ளையா?
    எதற்கும் சாரலிடம் கொஞ்சம் பேசத்தான்
    வேண்டும்!!



    பயண வழியில்
    பழகிய
    உன் நினைவும்..!\\\\

    யாரை நினைகிறீக....
    யாருக்குத் தெரியும்?
    “உன்” என்று சொல்லி தப்பிக்கலாமா?

    ReplyDelete
  5. படத்தை எப்படி அவ்வளவு கரெக்டாக பிடிக்கிறீங்க!

    ReplyDelete
  6. முதல் ஒன்று இதழ் வருடிய தென்றல் என்றால் இரண்டாவது உயிர் வருடிய தென்றல்...சோ க்யூட் சத்ரியன்..

    ReplyDelete
  7. இங்க்லீஷ் முத்தம் கேக்குதோ ?!!!!!!

    நல்லா இருக்கு நண்பா

    விஜய்

    ReplyDelete
  8. முதல் ரைட்டு மாம்ஸே

    இரண்டாவது யாருங்கானும் ...

    ReplyDelete
  9. வரிகளும் அதற்கேற்ற படங்களும்... இனிமை!

    ReplyDelete
  10. சத்ரியா...ம்ம்... இருந்திட்டு எப்பாச்சும் ஒரு கவிதைதான்.
    எதிர்பாரா முத்தம்போல இனிப்பாத்தான் இருக்கு !

    கலகலகலா....கலாய்க்கிறா !

    ReplyDelete
  11. //fine satriyan//

    நன்றிங்க ஆர்.வி.சரவணன்.

    ReplyDelete
  12. //படங்கள் கவிதைக்கு ஏற்றவாறு அம்சமா இருக்கு//

    நன்றிங்க தென்றல்.

    ReplyDelete
  13. //சூப்பர் கவிதைகள்...
    ரசிக்கும்படி உள்ளது...//

    நன்றிங்க செளந்தர்.

    ReplyDelete
  14. //காதல் களஞ்சியம் அண்ணே ...
    நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு கவி மழை ...
    சிறப்பாக இருக்குங்க ...//

    வாங்க அரசன்,

    என்ன செய்ய? கொஞ்சம் வேலையும் செய்ய வேண்டி இருக்கே!

    நன்றி.

    ReplyDelete
  15. //நீயூட்டும்
    முத்தத்திற்காக
    நானும்...!\\\\\\\

    ஓஓஓஓ...ஊட்டியா விடுவாக?

    நாங்கெல்லாம் வன்முறைய விரும்பாதங்க.

    //காதல் மகராஐன் இன்னும் சின்னப்பிள்ளையா?//

    அதேதான்!

    //எதற்கும் சாரலிடம் கொஞ்சம் பேசத்தான் வேண்டும்!!//

    பேச்சு பேச்சா இருக்கட்டும். அவ்வளவுதான் சொல்லுவேன்.

    ReplyDelete
  16. //பயண வழியில்
    பழகிய
    உன் நினைவும்..!\\\\

    யாரை நினைகிறீக....
    யாருக்குத் தெரியும்?
    “உன்” என்று சொல்லி தப்பிக்கலாமா?

    ஏங்க கலா,

    என் ஆத்துக்காரம்மாக்கிட்ட என்ன மாட்டி விடறதுலயே குறியா இருக்கீங்க போல!

    ReplyDelete
  17. //படத்தை எப்படி அவ்வளவு கரெக்டாக பிடிக்கிறீங்க!//

    சண்முகவேல் அண்ணா,

    சில நேரங்களில் வரிகள் “படத்திற்காக”க் காத்திருப்பதுண்டு.

    சில நேரங்களில் படம் “வரிகளுக்காக”க் காத்திருப்பதுண்டு.

    ஆனால், இந்த ரெண்டுக் கவிதைகளும் பொருத்தமான “படத்திற்காக” இரு வாரங்கள் காத்திருந்தன.

    ReplyDelete
  18. //முதல் ஒன்று இதழ் வருடிய தென்றல்//

    மிகச்சரி.(காத்திருந்து பெறுவது தனி ஆனந்தம்ங்க)

    //இரண்டாவது உயிர் வருடிய தென்றல்...//

    ம்ம்ம்ம்ம்ம்...(வாழ்க்கையின் நெடிய பயணத்தில் யாரோ ஒருவர் நினைவின் நுனியில் ஊசலாடிக்கொண்டே இருந்து விடுகின்றார்(ள்))!

    //சோ க்யூட் சத்ரியன்..//

    நன்றிங்க தமிழ்.

    ReplyDelete
  19. //இங்க்லீஷ் முத்தம் கேக்குதோ ?!!!!!//
    (நீயூட்டும் முத்தத்திற்காக..)

    கொஞ்சம் நாசூக்காச் சொன்னா திட்ட மாட்டாங்களே-ன்னு நினைச்சேன்.

    (இந்த வயசுல கேக்காம...?!!!!)

    ReplyDelete
  20. //முதல் ரைட்டு மாம்ஸே//

    சரிங்க மாப்ள!

    //இரண்டாவது யாருங்கானும் ...//

    கண்டிப்ப்ப்பா தெரிஞ்சே ஆகனுமோ...?

    ReplyDelete
  21. //வரிகளும் அதற்கேற்ற படங்களும்... இனிமை!//

    நன்றிங்க ப்ரியா.

    ReplyDelete
  22. //சத்ரியா...ம்ம்... இருந்திட்டு எப்பாச்சும் ஒரு கவிதைதான்.//

    ஹேமா,

    தினமும் எழுத ஆசைதான். படிக்கிற உங்களுக்கு போரடிக்குமே-ன்னுதான்!

    //எதிர்பாரா முத்தம்போல இனிப்பாத்தான் இருக்கு !//

    அய்யோடா...!

    //கலகலகலா....கலாய்க்கிறா !//

    கலா அப்படி செய்யலைன்னா தான் ஆச்சரியமே!

    ReplyDelete
  23. உருவ‌க‌ம் ரெம்ப‌ ந‌ல்லா வ‌ந்திருக்கு.. :)

    ReplyDelete
  24. சுருக்கமாக ஆனால் நெருக்கமாக உணர வைக்கும் வரிகள். சூப்பர்!

    ReplyDelete
  25. //உருவ‌க‌ம் ரெம்ப‌ ந‌ல்லா வ‌ந்திருக்கு.. :)//

    வாங்க ஸ்டீவன்,

    ரொம்ப நாளாச்சி நம்ம கடைப்பக்கம் வந்து.

    நன்றி.

    ReplyDelete
  26. //சுருக்கமாக ஆனால் நெருக்கமாக உணர வைக்கும் வரிகள். சூப்பர்!//

    வணக்கம் செல்வா அண்ணே,

    உங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  27. இலை நுனியைப்
    பிரிய மறுக்கும்
    மழைத் துளியாய்

    பயண வழியில்
    பழகிய
    உன் நினைவும்..!//

    சாரலாய் குளிவித்த துளிகளுக்கு
    வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்

    ReplyDelete
  28. முதல் கவிதை ஓகே கோபால்..:))

    ரெண்டாவது என்ன புதுசா..:))

    ReplyDelete
  29. ////
    இலை நுனியைப்
    பிரிய மறுக்கும்
    மழைத் துளியாய்

    பயண வழியில்
    பழகிய
    உன் நினைவும்..!


    ///


    நல்ல கவிதை

    ReplyDelete
  30. படமும் கவிதையும் அழகோ அழகு

    ReplyDelete
  31. "என்ன செய்யப்போகிறாய்"...

    நினை(கன)வு மழை இல் மூழ்கிவிட்டீர்கள் சத்ரியன்.

    ReplyDelete
  32. இலை நுனியைப்
    பிரிய மறுக்கும்
    மழைத் துளியாய்


    பயண வழியில்
    பழகிய
    உன் நினைவும்..!

    அருமையான வரிகள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  33. அருமை 2nd one excellent

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.